கெத்தாம் தீவு

ஆள்கூறுகள்: 3°2′18.5″N 101°14′48.8″E / 3.038472°N 101.246889°E / 3.038472; 101.246889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெத்தாம் தீவு
கெத்தாம் தீவில்
சுங்கை பெசார் ஆறு
கெத்தாம் தீவு is located in மலேசியா
கெத்தாம் தீவு
கெத்தாம் தீவு
      கெத்தாம் தீவு       மலேசியா
புவியியல்
அமைவிடம்மலாக்கா நீரிணை
ஆள்கூறுகள்3°2′18.5″N 101°14′48.8″E / 3.038472°N 101.246889°E / 3.038472; 101.246889
பரப்பளவு22.921[1] km2 (8.850 sq mi)
உயர்ந்த ஏற்றம்48 m (157 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2,000
இனக் குழுக்கள்:
மலேசிய சீனர்[2]

கெத்தாம் தீவு எனும் நண்டுத் தீவு (மலாய்: Pulau Ketam; ஆங்கிலம்: Ketam Island அல்லது Crab Island; சீனம்: 吉胆岛 பின்யின்: Jídǎn Dǎo; சாவி: ڤولاو كتام ) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு. இங்கு சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.[3]

இந்தத் தீவு கடல் மட்டத்திற்கும் கீழே இருப்பதால் கடல் பெருக்குகளை (Intertidal Zone) எதிர்நோக்கும் பகுதியாகும். கடல் பெருக்குகளினால் இங்கு சதுப்புநில கண்டல் தாவரங்கள் மிகுதியாகக் காணப் படுகின்றன. இங்குள்ள வீடுகள் எல்லாமே மிதவை வீடுகளாக உள்ளன. சில வீடுகள் கடல் மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளன.[4]

பொது[தொகு]

1880-ஆம் ஆண்டில், இந்தத் தீவில் மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். அந்த ஆண்டில் இரண்டு சீன மீன்பிடி கிராமங்கள் நிறுவப்பட்டன. தீவின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியமான கிராமம் புலாவ் கெத்தாம் (Pulau Ketam). வடகிழக்கு பகுதியில் மற்றொரு கிராமம் உள்ளது. சுங்கை லீமா கிராமம் (மலாய்:Sungai Lima; ஆங்கிலம்: Fifth River; சீனம்: 五条港) என்று அழைக்கப்படுகிறது

உள்ளூர்வாசிகளில் சீனர் இனத்தைச் சேர்ந்த தியோசிவ் (Teochew) மற்றும் ஆக்கியன் (Hokkien) முக்கியமான இனக்குழுவினர் ஆகும். இவர்களின் பேச்சுவழக்கு மொழி மாண்டரின் சீன மொழி (Mandarin Chinese).[5]

கண்டல் மரக்காட்டு சதுப்புநிலங்கள்[தொகு]

இரண்டாவது கிராமமான சுங்கை லீமா கிராமத்தில் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு சிறிய மலேசியப் பழங்குடியினர் சமூகம் உள்ளது. தீவின் மற்ற பகுதிகள் கண்டல் மரக்காடுகளின் (Mangrove Swamps) சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது.

அதிகக் கடல் பெருக்குகள் ஏற்படும் போது இந்தத் தீவு கடலுக்குள் மூழ்குவதால் வீடுகள் உயரமாக கட்டப்பட்டு உள்ளன. நடைபாதைகள் பைஞ்சுதையால் அமைக்கப்பட்டு குறுகலாக உள்ளன. வீடு வீடாகச் செல்லும் பாதைக்கு மரப்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கும்.

Panorama of Pulau Ketam
புலாவ் கெத்தாம் கடற்கரையின் காட்சி

தினசரி படகுச் சேவை[தொகு]

நண்டு தீவில் சிற்றுந்துகள் இல்லை. ஆனால் இந்தத் தீவில் உள்ள மக்கள் பெரும்பாலும் மிதிவண்டி அல்லது விசையுந்துகளைப் பயன்படுத்துகின்றனர். தீவின் இரண்டு கிராமங்களையும் இணைக்கும் சிறப்பு வழித்தடமும் இல்லை. எனவே, கிராம மக்கள் படகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தத் தீவுக்குச் செல்ல விரும்புவோர், கிள்ளான் துறைமுகம் வழியாக, கெத்தாம் தீவு மற்றும் சுங்கை லீமாவை இணைக்கும் தினசரி படகுச் சேவையைப் பயன்படுத்தலாம்.[6]

கடல் உணவு உணவகங்கள்[தொகு]

சிலாங்கூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கெத்தாம் தீவும் ஒன்றாகும். இங்கு பல்வேறு கடல் உணவுகளை வழங்கும் உணவகங்கள் உள்ளன. குடியிருப்பாளர்களும் புதிய கடல் உணவுகளை விற்பனை செய்கின்றனர். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் முழு தீவையும் சுற்றிப் பார்க்க விரும்பினால் மிதிவண்டிளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தீவு பெயின்ட் மை லவ் (2015) (Paint My Love) என்ற மலேசியத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CRAB ISLAND (PULAU KETAM)". பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
  2. Brenda Ch'ng. "Going back to basics in Pulau Ketam". The Star Online. பார்க்கப்பட்ட நாள் 15 March 2018.
  3. "Pulau Ketam, literally translated, means "crab island". It is a small island located off the coast of Klang. The island is easily accessible from the Port Klang jetty by ferry". Pulau Ketam (浮罗吉胆). பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  4. "The settlements on this island are built floating on water at a height of 1-10 meters above sea level". Official Portal of Klang Municipal Council (MPK) (in மலாய்). 16 December 2015. பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  5. "Most of the villagers of Pulau Ketam are ethnic Chinese of Hokkien and Teochew dialect group. The Hokkien spoken in Pulau Ketam is Klang Hokkien, which is derived from the Xiamen dialect of Hokkien, different from the Zhangzhou-based Penang Hokkien. There are two villages on Pulau Ketam, namely Kampung Sungai Lima and Kampung Pulau Ketam, both on the southern part of the island". Penang (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  6. "A ferry ride takes approximately 45 minutes, while a speedboat trip is about 20 to 25 minutes". பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெத்தாம்_தீவு&oldid=3910619" இலிருந்து மீள்விக்கப்பட்டது