விசையுந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசையுந்து (மேலும் மோட்டார்பைக், பைக், அல்லது இருசக்கர வண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும். விசையுந்து அவை வடிவமைக்கப்பட்ட வேலையை பொறுத்து கணிசமாக வேறுபடும்.
விசையுந்து, மோட்டார் இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. சுமார் 200 மில்லியன் விசையுந்துகள் உலகளவில் பயன்பாட்டில் உள்ளது.