குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமாகும். ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயறகை எழில் சூழ்ந்த இடத்தில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா துவங்கப்பட்டது. முதலில், 11 ஹெக்டர் பரப்பில் அமைந்திருந்த பூங்கா தற்போது, 31.73 ஹெக்டேர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு, விலங்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மான் பூங்காவிற்காக மட்டும் 1.5 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பொழுது போக்கு தளங்களில் குரும்பப்பட்டி பூங்கா முக்கிய இடம் வகிக்கிறது.

இங்கு பல்வேறு வகையான குரங்குகள், புள்ளி மான்கள், வெள்ளை மயில், முதலை, யானை மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் உள்ளிட்டவைகள் கூண்டுகளிலும், திறந்தவெளியிலும் விடப்பட்டுள்ளது. வண்டலூருக்கு அடுத்தபடியாக சேலம் குரும்பப்பட்டி பூங்கா பெரியதாகும். வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து ஆறு கடமான்கள் பெரிய கூண்டுகளில் அடைத்து கொண்டுவரப்பட்டு, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிலுள்ள மான் பூங்காவில் விடப்பட்டது. மதுரை அழகர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த 60 வயதான ஆண்டாள் என்ற பெண் யானைக்கு, உடல் நிலை முடியாத காரணத்தால், அந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு, சேலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]