முதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலைகள்
புதைப்படிவ காலம்: பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம்
நைல் முதலைகள்
நைல் முதலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு ஊர்வன
வரிசை: Crocodilia
குடும்பம்: Crocodylidae
குவியெ (Cuvier), 1807
Genera

See full taxonomy.

முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.

பொருளடக்கம்

[தொகு] பெயர்கள்

முதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன.[1] ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாகமுதலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.[2]

[தொகு] உடலமைப்பு

ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.

[தொகு] உயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்

முதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது.

[தொகு] இயல் தோற்றம்

style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;"|கருமுதலை
மேற்காபிரிக்கக் கருமுதலை
மேற்காபிரிக்கக் கருமுதலை
style="background:#transparent; text-align:center; border: 1px solid red;;" | உயிரியல் வகைப்பாடு

முதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருது பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.

[தொகு] வாழ்வியல் நிலை

பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.

முதலை தோலில் செய்யப்பட்ட பர்சு பாங்காக் முதலை பண்ணை
முதலை தோலில் செய்யப்பட்ட பெல்டு சியாங் மை

அதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவும் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.

[தொகு] இதனையும் பார்க்கலாம்

[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. pp. 67,180,196,315,371,388,760,805. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88&table=fabricius. 
  2. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். pp. 217,1359. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/showrest_?conc.6.1.14413.0.34.tamillex. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88&oldid=987098" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்