கீழப்பூங்குடி

ஆள்கூறுகள்: 9°57′49″N 78°29′25″E / 9.9636838°N 78.4903415°E / 9.9636838; 78.4903415
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழப்பூங்குடி
—  ஊராட்சி  —
கீழப்பூங்குடி
இருப்பிடம்: கீழப்பூங்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°57′49″N 78°29′25″E / 9.9636838°N 78.4903415°E / 9.9636838; 78.4903415
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
ஊராட்சிமன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கீழப்பூங்குடி (ஆங்கிலம் : Keelapoongudi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.[4] [5]

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் சிவகங்கையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 49 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் பாண்டிய நாட்டின் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது. பின்னர், சிவகங்கை சமஸ்தானத்தின் கீழாகவும், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் ஆட்சியின் கீழாகவும் இருந்து வந்தது.

நிறுவனங்கள்[தொகு]

இங்கு அரசு பொது மருத்துவமனை, அஞ்சலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. தமிழக அரசின் நூலகமும், அய்யன் திருவள்ளுவர் நூலகமும் உள்ளன.

கோவில்கள்[தொகு]

இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் உத்திராடம் நட்சத்திரம் விழா சிறப்பு பெற்றது. மிளகாய் சுவாமி கோவில் குருபூசை, மாரியம்மன் கோவில் திருவிழா, புரவி எடுப்பு, எருது கட்டு, முளைப்பாரி என வருடம் முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன.

தொழில்[தொகு]

இங்கு உழவே முதன்மைத் தொழில் ஆகும். வேளாண் பொருட்களான நெல், கரும்பு, வாழை, தென்னை, பருப்பு மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகளை உழவர்களிடம் மக்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதற்காக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Sivaganga District - Sivaganga Taluk". National Informatics Centre-Tamil Nadu State. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2013.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-19. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20160303233024/http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழப்பூங்குடி&oldid=3550195" இலிருந்து மீள்விக்கப்பட்டது