கியூமெரானா ஓடேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூமெரானா ஓடேசி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இனம்:
கி. ஓடேசி
இருசொற் பெயரீடு
கியூமெரானா ஓடேசி
(பெளலெஞ்சர், 1892)
வேறு பெயர்கள் [3]
  • ரானா ஒடேசி பெளலெஞ்சர், 1892[2]
  • கையரானா ஓடேசி (பெளலெஞ்சர், 1892)

கியூமெரானா ஓடேசி (Humerana oatesii) என்பது ராணிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது மியன்மரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3] இந்த சிற்றினம் பெகு மலைத்தொடரில் உள்ள "டோங்கூ அருகே" சேகரிக்கப்பட்ட தொடர் வகையிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[1] வகைத் தொடரைச் சேகரித்த ஆங்கில அரசு ஊழியரும் இயற்கை ஆர்வலருமான யூஜின் டபிள்யூ ஓட்சினை கவுரவிக்கும் வகையில் ஓடேசி என்று இதன் சிற்றினப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு தொங்கோ தவளை என்ற பொதுவான பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.[1][3][4]

விளக்கம்[தொகு]

கியூமெரானா ஓடேசி வகை மாதிரிகளில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் தவளைகள் மட்டுமே உள்ளன. ஆண் தவளை 63 முதல் 80 மிமி நீளமும், பெண் தவளை 50 முதல் 78 மி.மி. நீளமும் உடையது. தலை அகலத்தை விட நீளமானது மற்றும் வலுவாக வளைந்து சுருக்கப்பட்டுள்ளது. மூக்கு முனை கூர்மையாகவும் நீளமாகவும் உள்ளது. செவிப்பறை மிகவும் தனித்துவமானது. விரல்கள் நீண்டு வளர்ந்தும் வட்டுகள் வளர்ச்சி குறைந்தும் காணப்படும். கால்விரல்கள் மிகச் சிறிய வட்டுகளையும் கிட்டத்தட்ட முழு வலைப்பின்னலையும் கொண்டுள்ளன. தோல் தோள்பட்டையில் நுண்ணிய தடிமனாக உள்ளது. முக்கியமாகத் தோள்பட்டை மடிப்பு செவிப்பறையிலிருந்து இடுப்பு வரை செல்கிறது. தோள்பட்டை நிறம் கருப்பு. அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். சில வேளை பழுப்பு நிறத்தில் காணப்படலாம். ஆண்கள் ஒரு இணை பெரிய குரல் பைகளைக் கொண்டுள்ளன.[5]

வாழிடம்[தொகு]

இந்த சிற்றினத்தின் குறிப்பிட்ட வாழிடத் தேவைகள் தெரியவில்லை. ஆனால் இதன் இளம் உயிரி நீர்வாழ் உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. வகை வட்டாரங்களில் ஆய்வுகள் இருந்தபோதிலும், வகைத் தொடரின் சேகரிப்புக்குப் பிறகு இந்த சிற்றினத்தைப் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை. இதற்கு முக்கிய அச்சுறுத்தல்கள் விரிவான காட்டுத்தீ மற்றும் பெகு மலைத்தொடரின் மரங்களை வெட்டுவது ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Peter Paul van Dijk, Guinevere Wogan (2004). "Humerana oatesii". IUCN Red List of Threatened Species 2004: e.T58683A11810226. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58683A11810226.en. https://www.iucnredlist.org/species/58683/11810226. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Boulenger, G. A. (1892). "Description of a new frog from Burma". Annals and Magazine of Natural History. Series 6 9: 141–142. https://www.biodiversitylibrary.org/item/53332#page/153/mode/1up. 
  3. 3.0 3.1 3.2 Frost, Darrel R. (2021). "Humerana oatesii (Boulenger, 1892)". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5531/db.vz.0001. பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
  4. Beolens, Bo; Watkins, Michael & Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907807-42-8.
  5. Boulenger, G. A. (1920). "A monograph of the South Asian, Papuan, Melanesian and Australian frogs of the genus Rana". Records of the Indian Museum 20: 1–226. http://www.biodiversitylibrary.org/bibliography/12471. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூமெரானா_ஓடேசி&oldid=3936397" இலிருந்து மீள்விக்கப்பட்டது