ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)
வடிவம்பன்னாட்டு இருபது20
முதல் பதிப்பு2007
கடைசிப் பதிப்பு2021
அடுத்த பதிப்பு2022
போட்டித் தொடர் வடிவம்முதல்நிலைச் சுற்று
சிறப்பு 10/12
தொடர்-சுழல் முறை
மொத்த அணிகள்16
தற்போதைய வாகையாளர் ஆத்திரேலியா (முதல் முறை)
அதிகமுறை வெற்றிகள் மேற்கிந்தியத் தீவுகள் (2 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்இலங்கை மகேல ஜயவர்தன (1016)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்வங்காளதேசம் சகீப் அல் அசன் (41)[2]

ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் (ICC T20 World Cup) என்பது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) நடத்தும் இந்தத் தொடரில் தற்போது 16 அணிகள் பங்கேற்றுள்ளன, இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் தரவரிசையில் இருக்கும் முதல் பத்து அணிகளும், இருபது20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆறு அணிகளும் அடங்கும். அனைத்து போட்டிகளும் இருபது20 வகையில் விளையாடப்படுகின்றன.

இந்நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். எனினும் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்தது. தற்போது 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020ஆம் ஆண்டு இருபது20 உலக்கிண்ணத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் வென்று உலக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

முடிவுகள்[தொகு]

ஆண்டு நிகழ்விடம் இறுதிப்போட்டி நிகழ்விடம் இறுதிப்போட்டி
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
2007  South Africa ஜோகானஸ்பேர்க்  இந்தியா
157/5 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
152 all out (19.4 நிறைவுகள்)
5 ஓட்டங்கள்
கெலிப்பட்டை
2009  England இலண்டன்  பாக்கித்தான்
139/2 (18.4 நிறைவுகள்)
 இலங்கை
138/6 (20 நிறைவுகள்)
8 இழப்புகள்
கெலிப்பட்டை
2010  West Indies பிரிஜ்டவுண்  இங்கிலாந்து
148/3 (17 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
147/6 (20 நிறைவுகள்)
7 இழப்புகள்
கெலிப்பட்டை
2012  Sri Lanka கொழும்பு  மேற்கிந்தியத் தீவுகள்
137/6 (20 நிறைவுகள்)
 இலங்கை
101/10 (18.4 நிறைவுகள்)
36 ஓட்டங்கள்
கெலிப்பட்டை
2014  Bangladesh டாக்கா  இலங்கை
134/4 (17.5 நிறைவுகள்)
 இந்தியா
130/4 (20 நிறைவுகள்)
6 இழப்புகள்
கெலிப்பட்டை
2016  India கொல்கத்தா  மேற்கிந்தியத் தீவுகள்
161/6 (19.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
155/9 (20 நிறைவுகள்)
4 இழப்புகள்
கெலிப்பட்டை
2021  UAE
 Oman
துபாய்  ஆத்திரேலியா173/2 (18.5 overs)  நியூசிலாந்து172/4 (20 overs) 8 இழப்புகள்

கெலிப்பட்டை

2022  Australia மெல்போர்ன்

மேற்கோள்கள்[தொகு]