ஆர். பிரேமதாச அரங்கம்
| ஆர். பிரேமதாச அரங்கம் | ||||
| கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் | ||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | மாளிகாவத்தை, கொழும்பு | |||
| ஆள்கூறுகள் | அமைவிடம்: | |||
| இருக்கைகள் | 35,000 | |||
| குத்தகையாளர் | இலங்கை துடுப்பாட்டம் | |||
| முடிவுகளின் பெயர்கள் | Khettarama End Scoreboard End |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | 28 ஆகஸ்டு 1992: இலங்கை எதிர் ஆஸ்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | 12 September 2005: இலங்கை எதிர் வங்காளதேசம் | |||
| முதல் ஒரு நாள் | 9 மார்ச் 1986: இலங்கை எதிர் பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் | 8 பெப்ரவரி 2009: இலங்கை எதிர் இந்தியா | |||
|
28 ஏப்ரல்l, 2009 இன் படி |
||||
ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
முன் வரலாறு [தொகு]
35,000 பேருக்கு இருக்கை வதைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின.