உம் எல்-காப்

ஆள்கூறுகள்: 26°10.5′N 31°54.5′E / 26.1750°N 31.9083°E / 26.1750; 31.9083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம் எல்-காப்
அரபு மொழி: أم القعاب
உம் எல்-காப்பின் நிலப்பரப்பு
உம் எல்-காப் is located in வடகிழக்கு ஆப்பிரிக்கா
உம் எல்-காப்
Shown within Nile#Egypt
உம் எல்-காப் is located in Egypt
உம் எல்-காப்
உம் எல்-காப் (Egypt)
இருப்பிடம்அபிதோஸ், மேல் எகிப்து, எகிப்து
பகுதிபுது சமவெளி ஆளுநரகம்
ஆயத்தொலைகள்26°10.5′N 31°54.5′E / 26.1750°N 31.9083°E / 26.1750; 31.9083


உம் அல்-காப் (Umm El Qaʻāb) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபுகளில் எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச அரச குடும்பத்தவர்களில் கல்லறைகள் நிறுவப்பட்ட நகரம் ஆகும்.[1] இது நடு எகிப்தில் உள்ள அபிதோஸ் நகரத்திற்கு அண்மையில் உள்ளது. தற்போது இவ்விடம் பாழைந்து சிதைந்துள்ளது. இடமாகும்.

உம் எல்-காப் தொல்லியல் களத்தில் முதன் முதலில் எமிலி அமெலினோ என்பவரல் 1890-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது. பின்னர் 1899 - 1901 ஆண்டுகளில் பிளிண்டர்ஸ் பெட்ரி என்பவரால் அகழாய்வு செய்யப்பட்டது. [2]பின்னர் இத்தொல்லியல் களத்தை 1970 ஆண்டு முதல் ஜெர்மானிய தொல்லியல் ஆய்வாளர்களால் தொடர்ந்து அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது

வரலாற்றுக்கு முந்தைய மன்னர்களின் கல்லறைகள்[தொகு]

எகிப்தின் முதலிரண்டு வம்ச ஆட்சியாளர்களின் கல்லறைகளின் வரைபடம், உம் எல்-காப்
  • கல்லறை எண் U-j: அறியப்படாத ஆட்சியாளர், ஆனால் இக்கல்லறை முதலாம் தேள் மன்னருடைதாக இருக்கலாம் எனக்கருதப்படுக்றது.[3] எருது மன்னரின் பெயர் பொறித்த தந்தப் பலகை இக்கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
  • கல்லறை எண் B1/B2:மன்னர் ஐரி-ஹோர்[5]
  • கல்லறை எண் B7/B9: மன்னர் மன்னர் கா மற்றும் அரசி ஹாவின் கல்லறை

முதல் வம்சத்தவர்களின் கல்லறைகள்[தொகு]

உம் எல்-காப்பில் கல்லறைகள் இறந்த எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சியாளர்களை அடக்கம் செய்த இடமாகும்

செமெர்கேத்த்தின் கல்லறையில் முதல் வம்ச காலத்திய ஜாடியின் உடைந்த அடிப்பாகம், உம் எல்-காப், அபிதோஸ்

இரன்டாம் வம்சத்தவர்களின் கல்லறைகள்[தொகு]

இரண்டாம் வம்சத்தின் இறுதி இரண்டு ஆட்சியாளர்களின் கல்லறைகள் களிமண் செங்கற்களால் உம் எல்-காப்பில் நிறுவப்பட்டுள்ளது.

காசெகெம்வி கல்லறை மணலால் நிரப்பப்பட்டுள்ளது.

நர பலி[தொகு]

முதல் வம்ச காலத்தில் அரச குடும்பத்தவர்களை கல்லறைகளில் அடக்கம் இறுதிச் சடங்குகளில் நரபலி இடும் முறை இருந்தது.[18]மன்னர் ஜெர் கல்லறையில் 338 மனிதர்களை நரபலியிட்டனர்.[18] இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையின் பொருட்டு, மனிதர்களுடன் விலங்குகளும் பலியிட்டனர்.[19][20] பழைய எகிப்து இராச்சியத்தில் (கிமு 2686–கிமு 2181) நரபலி மற்றும் விலங்குகள் பலி இடும் பழக்கம் மறைந்து, அதற்கு பதிலாக உசாப்தி எனும் விலங்குகள், ஆண்-பெண் பணியாளர்கள் சிற்பங்கள் மம்மியுடன் கல்லறையில் வைத்தனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tombs of kings of the First and Second Dynasty
  2. Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. p. 67. Oxford University Press. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280458-8
  3. "The Earliest Known Egyptian Writing : History of Information".
  4. Günter Dreyer: Umm el-Qaab I .: the predynastic royal tomb U-j and its early documents (= Umm el-Qaab, 1st volume). von Zabern, Mainz 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2486-3., pp. 87 & 176.
  5. [1] Abydos, Tomb of King Iry-Hor
  6. [2] Narmer's Tomb
  7. [3] Hor-Aha's Tomb
  8. [4] Tomb O
  9. [5] Tomb Z
  10. [6] Tomb Y - the tomb of Merneith
  11. [7] Tomb T
  12. [8] Tomb X
  13. [9] Tomb U
  14. [10] Tomb Q
  15. [11] Abydos Tomb P
  16. [12] Peribsen' tomb
  17. [13] Abydos Tomb V
  18. 18.0 18.1 Shaw, Ian. The Oxford History of Ancient Egypt. p. 68. Oxford University Press. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280458-8.
  19. Payne, Keith (20 October 2009). "Discovery of Abydos: Examining the Work of the Penn-Yale-IFA Joint Expedition" பரணிடப்பட்டது 2010-02-05 at the வந்தவழி இயந்திரம். Heritage Key.
  20. Payne, Keith "Exclusive Interview: Dr David O'Connor on the Abydos Expedition" Heritage Key 29 September 2009 [14] பரணிடப்பட்டது 2012-07-08 at Archive.today
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்_எல்-காப்&oldid=3791608" இலிருந்து மீள்விக்கப்பட்டது