உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களை கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக யூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2009ம் ஆண்டு செருமனியில் நடைபெற்றது.

பொருளடக்கம்

[தொகு] கோவையில் நிகழ்ந்த தமிழ் இணையம் 2010 மாநாடு

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

[தொகு] "உத்தமம்" நடத்திய தமிழ் இணைய மாநாடுகள் பட்டியல்

இதுவரை 10 தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக

  • 1. 1997 - சிங்கப்பூர்
  • 2. 1999 - சென்னை, தமிழ்நாடு
  • 3. 2000 - சிங்கப்பூர்
  • 4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா)
  • 5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
  • 6. 2003 - சென்னை, தமிழ்நாடு
  • 7. 2004 - சிங்கப்பூர்
  • 8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம், ஜெர்மனி
  • 9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
  • 10. 2011 - அமெரிக்கா

[தொகு] தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள்

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன[1].

[தொகு] ஆதாரங்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி