இலங்கை குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை குக்குறுவான்
இலங்கையில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. ரூப்ரிகேபிலசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் ரூப்ரிகேபிலசு
ஜெமிலின், 1788
வேறு பெயர்கள்

மெகாலைமா ரூப்ரிகேபிலசு

இலங்கை குக்குறுவான் (சைலோபோகன் ரூப்ரிகேபிலசு), என்பது இலங்கையில் காணப்படும் ஒரு குக்குறுவான் ஆகும். இது 1,300 m (4,300 அடி) உயரம் வரையுள்ள வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகளில் வாழ்கிறது.[1]

வகைப்பாடு[தொகு]

இலங்கை குக்குறவானை 1788 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் ஃபிரெட்ரிக் க்மெலினால் திருத்தி, விரிவாக்கப்பட்ட கரோலஸ் லின்னேயசின் சிஸ்டமா நேச்சுரே பதிப்பில் முறையாக விவரிக்கப்பட்டது. அவர் இதை புக்கோ பேரினத்தில் உள்ள குக்குறுவான்களுடன் வைத்து, புக்கோ ரூப்ரிகாபில்லஸ் என்ற அறிவியல் பெயரை உருவாக்கினார். இந்த அறிவியல் பெயரில் உள்ள அடைமொழியானது " சிவப்பு " என்று பொருள்படும் இலத்தீன் சொல்லான ரூபர் என்ற சொல்லில் இருந்து உருவாக்கபட்டது. 1776 ஆம் ஆண்டில் ஆங்கில ஓவியரும் இயற்கை ஆர்வலருமான பீட்டர் பிரவுன் அவர்களால் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்ட "சிவப்பு-கிரீட குக்குறுவான்" குறித்த விளக்கத்துக்கு அவர் க்மெலின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டார். 1836 ஆம் ஆண்டில் சாலமன் முல்லரால் அறிமுகப்படுத்தப்பட்ட சைலோபோகன் பேரினத்தில் வைக்கப்பட்டுள்ள இலங்கை குக்குறுவான் அதில் இப்போது உள்ள 33 இனங்களில் ஒன்றாகும். [2] [3] இதில் உள்ள இனங்கள் ஒரே மாதிரியானவை : எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை. [3]

இலங்கையில், இந்த பறவை சிங்கள மொழியில் ஹீன் கோட்டோருவா- හීන් කොට්ටෝරුවා என்று அழைக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இலங்கை குக்குறுவான் முக்கியமாக பச்சை நிற இறகுகளையும் இறக்கைகளையும் கொண்டது. இதன் தலை மற்றும் கழுத்தின் பக்கவாட்டில் ஒரு நீல நிற பட்டையும், கண்ணையடுத்து ஒரு கருப்பு பிறையும் உள்ளது. இது சுமார் 15 cm (5.9 அங்) நீளம் கொண்டது. மேலும் இது நீளமான கழுத்து, பெரிய தலை, குட்டையான வால் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது பழங்கள் மற்றும் பூச்சிகளை உணவாக கொள்கிறது. மரப் பொந்துகளில் கூடு அமைத்து 2-4 முட்டைகளை இடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon rubricapillus". IUCN Red List of Threatened Species 2016: e.T22726142A94912630. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726142A94912630.en. https://www.iucnredlist.org/species/22726142/94912630. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Salomon Müller (1835). "Aanteekeningen over de natuurlijke gesteldheid van een gedeelte der westkust en binnenlanden van Sumatra, met bijvoeging van eenige waarnemingen en beschrijvingen van verscheid dieren" (in Dutch). Tijdschrift voor Natuurlijke Geschiedenis en Physiologie 2: 315–355 [339]. https://books.google.com/books?id=XERnAAAAcAAJ&pg=PA339. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Jacamars, puffbirds, toucans, barbets, honeyguides". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psilopogon rubricapillus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_குக்குறுவான்&oldid=3788601" இலிருந்து மீள்விக்கப்பட்டது