இரியூக்கியூ பூச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியூக்கியூ பூச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பேபாசிடே
பேரினம்:
பெரிக்ரோகோடசு
இனம்:
பெ. டெஜிமே
இருசொற் பெயரீடு
பெரிக்ரோகோடசு டெஜிமே
இசுடெஜிநீகர், 1887

இரியூக்கியூ பூச்சிட்டு (Ryukyu minivet)(பெரிக்ரோகோடசு டெஜிமே) என்பது கேம்பேபாஜிடேகுடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது யப்பானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்த சிற்றினம் முன்பு சாம்பல் பூச்சிட்டின் துணையினமாகக் கருதப்பட்டது. இதன் குறிப்பிட்ட பெயர் யப்பானிய இயற்கை ஆர்வலர் செய்ச்சி டெகிமாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

பரவல்[தொகு]

இரியூக்கியூ பூச்சிட்டு முதலில் யப்பானின் இரியூக்கியூ தீவுகளில் மட்டுமே காணப்பட்டது. ஆனால் 1970களில் இது தெற்கு கியூஷூ தீவுகளுக்கும் பரவியது. 2010-ல் இந்த தீவு முழுவதும் மற்றும் சிகொக்கு மற்றும் மேற்கு ஒன்சூ தீவுகளிலும் காணப்பட்டது. இதனுடன் தொடர்புடைய சாம்பல் பூச்சிட்டின் எண்ணிக்கை குறைவு காரணமாக இந்தச் சிற்றினங்கள் பரவ முடிந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]

இந்த சிற்றினத்தின் இயற்கை வாழ்விடம் பசுமையான மற்றும் கலப்பு இலையுதிர் காடுகள் ஆகும். தேவதாரு தோட்டங்கள் மற்றும் தோட்டங்கள் உட்பட மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வாழ்விடங்களையும் இது பயன்படுத்தும். இது கடல் மட்டத்திலிருந்து 1,700 m (5,600 அடி) உயரம் வரை காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pericrocotus tegimae". IUCN Red List of Threatened Species 2018: e.T22706738A130428811. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706738A130428811.en. https://www.iucnredlist.org/species/22706738/130428811. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 2.2 del Hoyo, J; Kirwan, G. M. (2019). del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi; Christie, David A; de Juana, Eduardo (eds.). "Ryukyu Minivet (Pericrocotus tegimae)". Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியூக்கியூ_பூச்சிட்டு&oldid=3579451" இலிருந்து மீள்விக்கப்பட்டது