இயக்கவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
| இயக்கவியல் கட்டுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்குடைய விக்கித் திட்டம் பொறியியலின் ஒரு பகுதியாகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இயக்கவியல் (Dynamics) விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.
இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.
இயக்கவியலின் அடிப்படை விதிகளை நீயூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மெதெமேட்டிகா (Principia Mathematica) என்னும் படைப்பு நூலை 1687இல் வெளியிட்டார். மேலும் ஆய்லர், மேக்சுவெல் போன்றோர் முறையே சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் குறித்து விதிகளை வகுத்தனர்.
|
விக்கித் திட்டம் பொறியியலின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |