நியூட்டனின் இயக்க விதிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மரபார்ந்த விசையியல் | ||||||||
![]() நியூட்டனின் இரண்டாவது விதி |
||||||||
வரலாறு...
|
||||||||
பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். அவை நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். முதல் விதி விசையின் அடிப்படை வரையறையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன
[தொகு] நியூட்டனின் முதல் இயக்க விதி
முதன்மை கட்டுரை நியூட்டனின் முதலாவது விதி
இவ்விதியின்படி "வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்." இவ்விதி நிலைமக் குறிப்பாயங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புற விசைகள் இல்லாத நிலையில், பொருள் ஒன்று தன்னிச்சையாகத் தானே தனது நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு நிலைமம்(Inertia) எனப்படும்.
[தொகு] நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
முதன்மை கட்டுரை நியூட்டனின் இரண்டாம் விதி
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்
[தொகு] நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
முதன்மை கட்டுரை நியூட்டனின் மூன்றாம் விதி
ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது.
- ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
