இசுட்ரோன்சியம்-90

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுட்ரோன்சியம்-90
பொது
பெயர், குறியீடு இசுட்ரோன்சியம்-90,90Sr
நொதுமிகள் 52
நேர்மின்னிகள் 38
அணுக்கருத் தரவு
Natural abundance syn
அரைவாழ்வுக் காலம் 28.79 ஆண்டுகள்
சிதைவு ஆகுபொருள் 90Y
கதிரியக்கம் சிதைவு ஆற்றல்
Beta decay 0.546 eV

இசுட்ரோன்சியம்-90 அல்லது இசுட்ரான்சியம்-90 (ஸ்டிரான்சியம்-90; Strontium-90) என்பது இசுட்ரோன்சியம் தனிமத்தின் கதிரியக்கமுள்ள ஓரிடத்தான் (இலங்கை வழக்கு:சமதானி) ஆகும். இதன் வேதியியல் குறியீடு 90Sr. இது அணுக்கருப் பிளவு மூலம் உருவாகின்றது. அணு ஆயுதங்களில் இருந்தும் அணு விபத்துக்களின் போதும் ஏற்படும் சிதறலில் இவ்வோரிடத்தான் வெளிவிடப்படுகின்றது, இதைத்தவிர அணு ஆலைக் கழிவுகளிலும் உண்டாகின்றது. இசுட்ரான்சியம்-90 இன் அரைவாழ்வுக் காலம் 28.8 ஆண்டுகள்.

தொழிற்துறையில் கதிரியக்க தனிமத்தின் தேவைக்காகவும், மருத்துவத்தில் சிறிய அளவுப் பயன்பாட்டில் மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. இது எலும்புகளைப் பாதிக்கும் ஒரு கதிரியக்கத் தனிமமாக விளங்கி புற்றுநோயை உண்டாக்கவல்லது.

உயிரியல் விளைவுகள்[தொகு]

உயிரியல் தொழிற்பாடு[தொகு]

இசுட்ரோன்சியம்-90 ஒரு "எலும்பு தேடி" ஆகும். இது காரக்கனிம மாழைகள் வகுப்பைச் சேர்ந்தமையால் கல்சியத்தின் வேதியல் தொழிற்பாட்டை ஒத்து உள்ளது. மாசுற்ற நீர் அல்லது உணவு மூலம் உடலை அடைந்த இசுட்ரோன்சியம்-90 இன் 70 - 80% கழிவகற்றல் மூலம் வெளியேறிவிடுகின்றது, ஒரு வீதமானது குருதியிலும் மெல் இழையங்களிலும் சேர, ஏறத்தாழ எஞ்சியிருக்கும் மிகுதி இசுட்ரோன்சியம்-90 எலும்புகளிலும் என்புமச்சையிலும் படிகின்றது. எலும்புகளில் இதன் தேக்கம் எலும்புப் புற்றுநோயையும் அதை அண்மித்துள்ள இழையங்களில் புற்றுநோயையும் உண்டாக்கும், இதைவிட குருதிப்புற்றுநோயும் உருவாகலாம். இசுட்ரோன்சியம்-90 உடலில் செறிவடைந்துள்ளதா என்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறியலாம்.

சீசியம் (134Cs, 137Cs), அயோடின் (131I) ஓரிடத்தான்களுடன் சேர்ந்து செர்னோபில் அணு உலை விபத்தில் வெளிச்சிதறப்பட்ட மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த கதிரியக்கத் தனிமமாக இசுட்ரோன்சியம்-90 விளங்குகின்றது. கல்சியத்தின் தொழிற்பாட்டை ஒத்து இருப்பதால் பாராதைராய்டு சுரப்பிகளில் உள்ள ஏற்பிகளில் இலகுவில் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவல்லது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Boehm, Bernhard O.; Rosinger, Silke, Belyi, David, Dietrich, Johannes W. (08 2011). "The Parathyroid as a Target for Radiation Damage". New England Journal of Medicine 365 (7): 676–678. doi:10.1056/NEJMc1104982. பப்மெட் 21848480. http://www.nejm.org/doi/full/10.1056/NEJMc1104982. பார்த்த நாள்: 19 August 2011. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்-90&oldid=1354869" இருந்து மீள்விக்கப்பட்டது