ஆர்பியூ பெர்த்தோலாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்பியூ பெர்த்தோலாமி (Orfeu Bertolami) (சாவோ பாலோ பிரேசில் 1959) என்பவர் வானியற்பியல் , அண்டவியல் , பொது சார்பியல் மற்றும் குவைய ஈர்ப்பு ஆகியவற்றில் பணிபுரியும் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். அவர் 1991 முதல் 2010 வரை போர்ச்சுகீசு இலிசுபனில் உள்ளசூயர்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் தற்போது போர்டோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.

வானியல் , அண்டவியல், ஈர்ப்பு கோட்பாடுகளில் கருத்துக்களின் வரலாறு பற்றிய அறிவியலில் பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நூலையும்(போர்த்துகீசிய மொழியில்) ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விண்வெளியில் ஈர்ப்பு, செலுத்தல் கூறுபாடுகள் குறித்த தொழில்நுட்ப பாடநூலையும் எழுதியுள்ளார்.

  • ஓ லிவரோ தாசு எஸ்கோலாசு கோஸ்மிக்காசு, எடிட்டரா கிராடிவா, 2006
  • ஈர்ப்பு கட்டுப்பாடும் விண்வெளிச் செலுத்தம் மீது அதன் செல்வாக்கு: ஒரு அறிவியல் ஆய்வு 2002

குறிப்பாக பெர்த்தோலாமி , அண்டவியல் மாறிலிச் சிக்கலை, சமன்மைக் கொள்கையுடன் தொடர்புபடுத்தி அடர்துகளாக்கத்தை ஆய்வு செய்தார் - இருண்ட ஆற்றலின் ஒருங்கிணைப்புக்கான பொதுமைப்படுத்தப்பட்ட சாப்லிஜின் வளிமப் படிமத்தைஅண்ட முடுக்கத்தை விளக்கவும், இருண்ட பொருளைப் பால்வெளிகளின் சுழற்சி வளைவுகளின் தட்டையான தன்மையை விளக்கவும் சில மாற்றியமைக்கப்பட்ட ஈர்ப்பு படிமங்களை வளைவுக்கும் பொருளுக்கும் இடையில் குறைந்தபட்சமற்றபிணைப்பு உள்ளதை விலக்கவும் உருவாக்கினார்.. அவர் முன்னோடிப் பிறழ்வைப் பற்றியும் பணியாற்றியுள்ளார் , இது பெரும்பாலும் விண்கல வெப்ப விளைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதினார். மிக அண்மைய பணி, விண்வெளித் தறுவாயின் பரிமாறாமை சார்ந்த குவைய இயக்கவியலின் நீட்டிப்புகளைப் பற்றியதாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்பியூ_பெர்த்தோலாமி&oldid=3769942" இலிருந்து மீள்விக்கப்பட்டது