ஆனந்தூர், போச்சம்பள்ளி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ஆனந்தூர் (Anathur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

ஆனந்தூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள பாறையில் கி.பி. 1188 ஆண்டின் வீரராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் ஆனந்தூர் இறைவனுக்குத் துறுமூருடையாத் எடுத்தான் என்பவன் நொந்தா விளக்கு எரிக்க நிவந்தம் அளித்த செய்தி உள்ளது. அக் கல்வெட்டில் ஆனந்தூர் என்று ஊர் பெயர் குறிப்பிடபட்டுள்ளது. இதைக்கொண்டு பார்க்கும்போது இந்த ஊர்ப் பெயர் அக்காலத்தில் இருந்து மாறாமல் இருப்பது அறியவருகிறது. [2]

மேற்கோள்[தொகு]

  1. "குண்டும், குழியுமான சாலையில் பேருந்து இயக்க மறுப்பு : போச்சம்பள்ளி அருகே 5 கிமீ நடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 111.