ஆடுஜீவிதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுஜீவிதம்
இயக்கம்பிளெஸ்ஸி
தயாரிப்பு
  • பிளெஸ்ஸி
  • கே. ஜி. ஆப்ரகாம்
  • ஜிம்மி ஜீன்-லூயிஸ்
  • ஸ்டீவன் ஆடம்ஸ்
திரைக்கதைபிளெஸ்ஸி
இசைஏ. ஆர். ரகுமான்[1]
நடிப்புபிரித்விராஜ் சுகுமாரன்
ஒளிப்பதிவு
  • சுனில் கே. எஸ்.
  • கே. யு. மோகனன்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
வெளியீடுமார்ச்சு 28, 2024 (2024-03-28)
நாடு
  • இந்தியா
  • அமெரிக ஐக்கிய நாடுகள்
மொழி

ஆடுஜீவிதம் ( Aadujeevitham ), தி கோட் லைஃப் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ஆகும். மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி திரைக்கதை எழுதியதுடன், இணைந்து தயாரித்துள்ளார். இத்திரைப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கிடையேயான ஒரு சர்வதேச கூட்டுத் தயாரிப்பாகும். மேலும் அரபு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடல்களைக் கொண்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் என்ற இதே பெயரில் எழுத்தாளார் பென்யாமின் எழுதிய மலையாள புதினத்தின் தழுவலாகும்.[2] இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இது சவூதி அரேபியாவில் தனது விருப்பத்திற்கு மாறாக ஆடு மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த மலையாளத் தொழிலாளியைப் பற்றிய கதையாகும்.[3][4]

2008 ஆம் ஆண்டு ஆடுஜீவிதம் புத்தகத்தைப் படித்ததிலிருந்து அக்கதையை படமாக்க பிளெஸ்ஸி விரும்பினார். அதே ஆண்டில் பிரித்விராஜ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5] ஆனால் செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு படம் இறுதியாக 2015 இல் இயக்கப்பட்டது. ஜிம்மி ஜீன்-லூயிஸ் மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ் ஆகியோரும் பிளெஸ்ஸியுடன் தயாரிப்பாளராக இணைந்தனர்.[6] படத்தின் அசல் இசை மற்றும் பாடல்களை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

முதன்மை படப்பிடிப்புப் பணி மார்ச் 2018 மற்றும் சூலை 2022 க்கு இடையில் வாடி ரம், ஜோர்தான் மற்றும் அல்சீரியாவின் சகாரா பாலைவனங்களிலும், சில காட்சிகள் இந்தியாவின் கேரளத்திலும் படமாக்கப்பட்டது.[7][8][9] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக படக்குழுவினர் 70 நாட்கள் ஜோர்தானில் சிக்கித் தவித்தனர். படத்தின் முதன்மை புகைப்படம் 14 ஜூலை 2022 அன்று நிறைவடைந்தது.[10][11]

முப்பரிமாண திரைப்படமாக எடுக்கப்படும்[12] ஆடுஜீவிதம், 2023 கான் திரைப்பட விழாவில் திரையிடத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[13]

நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. R., Manoj Kumar (17 January 2018). "After 25 years, AR Rahman to return to Malayalam film industry with Prithviraj's Aadujeevitham". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 8 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180308022048/http://indianexpress.com/article/entertainment/malayalam/ar-rahman-to-return-to-malayalam-film-industry-with-prithviraj-aadujeevitham-5028303/. 
  2. Benyamin (8 February 2023). "ആടുജീവിതം: നോക്കിനിൽക്കേ പിടിവിട്ട് ഉയരങ്ങളിലേക്കെത്തി, സിനിമയെന്നത് വലിയ ഭാരം- ബെന്യാമിൻ" (in ml). Mathrubhumi. https://www.mathrubhumi.com/books/excerpts/benyamin-new-book-ethoru-manushyanteyum-jeevitham-aadujeevitham-novel-and-film-1.8292154. 
  3. Anandan, S. (6 December 2012). "Three Malayalis on the Man Asian longlist". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/three-malayalis-on-the-man-asian-longlist/article4169108.ece. 
  4. "aadujeevitham". Indulekha.com.
  5. Nagarajan, Saraswathy (29 April 2010). "Friday Rushes". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221214171212/https://www.thehindu.com/features/cinema/Friday-Rushes/article16373432.ece. 
  6. Tomeo, Marissa. "Actor Jimmy Jean-Louis to Host Second Annual GHESKIO Fundraiser in Cannes". BroadwayWorld.com. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.
  7. "'Aadujeevitham' last schedule in Jordan" இம் மூலத்தில் இருந்து 6 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220406060827/https://www.manoramaonline.com/movies/movie-news/2022/04/05/prithviraj-resumes-aadujeevitham-shoot.html. 
  8. Jayaram, Deepika (1 March 2018). "Prithviraj's Aadujeevitham starts rolling". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 27 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221227100527/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/prithvirajs-aadujeevitham-starts-rolling/articleshow/63126677.cms. 
  9. Deccan Chronicle (2 March 2018). "Aadujeevitham begins". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 1 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180301233928/http://www.deccanchronicle.com/entertainment/mollywood/020318/aadujeevitham-begins.html. 
  10. Nagarajan, Saraswathy (22 May 2020). "'Aadujeevitham' director Blessy on shooting in Jordan and being stranded there for 70 days". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221228162622/https://www.thehindu.com/entertainment/movies/aadujeevitham-director-blessy-on-shooting-in-jordan-and-being-stranded-there-for-70-days/article61654101.ece. 
  11. Special correspondent (22 May 2020). "Coronavirus lockdown | Kerala film crew returns from Jordan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221228162620/https://www.thehindu.com/news/national/kerala/coronavirus-lockdown-kerala-film-crew-returns-from-jordan/article31653214.ece. 
  12. Krishnakumar, G. (29 November 2015). "From word to reel". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221226084553/https://www.thehindu.com/news/national/kerala/from-word-to-reel/article7929189.ece. 
  13. Express News Service (21 December 2022). "'Aadujeevitham' will hit theatres after festival premiere: Prithviraj". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 25 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221225100247/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2022/dec/21/aadujeevitham-will-hit-theatresafter-festival-premiere-prithviraj-2530081.html. 
  14. Pudipeddi, Haricharan (22 February 2018). "Aadujeevitham will fully realize Amala Paul's potential, says director Blessy". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 28 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221228162620/https://www.hindustantimes.com/regional-movies/aadujeevitham-will-fully-realize-amala-paul-s-potential-says-director-blessy/story-JRVNoXxBjIRuf5je58TNjI.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுஜீவிதம்_(திரைப்படம்)&oldid=3921645" இலிருந்து மீள்விக்கப்பட்டது