அட்டன், இலங்கை
| அட்டன் | |
| தொடருந்து நிலையம் | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1263 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 22000 - +9451 - CP |
அட்டன் (ஆங்கிலம்:Hatton, சிலவேளைகளில் ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.
மக்கள் பரவல் [தொகு]
| இனக்கள் | சனத்தொகை | மொத்த தொகையின் வீதம் |
|---|---|---|
| சிங்களவர்கள் | 3,752 | 26.32 |
| இலங்கைத் தமிழர்கள் | 3,278 | 23.00 |
| இந்தியத் தமிழர்கள் | 4,713 | 33.06 |
| இலங்கை மூர் இனத்தவர் | 2,309 | 16.20 |
| ஏனையவர்கள் (including Burgher, Malay) | 203 | 1.42 |
| மொத்தம் | 14,255 | 100 |
| Coordinates | 6°53′14.45″N, 80°35′55.03″E | அட்டன் |
Source: [1]
முக்கியமான பாடசாலைகள் [தொகு]
1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். சிங்கள மாணவர்களுக்கான தனிப் பிரிவும் இந்தப் பாடசாலையில் இயங்குகின்றது.
இது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும். தமிழ் மாணவர்களுக்கான தனிப் பிரிவும் இந்தப் பாடசாலையில் இயங்குகின்றது.
இது பெண்களுக்கான பாடசாலையாகும்.
இது ஆண்களுக்கான பாடசாலையாகும்.
| இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
| நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | |
| சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசெல்லாவை | உலப்பனை | |