ராமேசியம் மன்னர்கள் பட்டியல்
ராமேசியம் மன்னர்கள் பட்டியல், பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசேசின் நினைவுக் கோயிலின் சுவரில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்தின் 18-ஆம் வம்சம் மற்றும் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயர்ப் பட்டியல் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது.
இந்த மன்னர்களின் பட்டியலை முதலில் கண்டறிந்து 1845-ஆம் ஆண்டில் வெளியிட்டவர் ஜீன்-பிராகோய்ஸ் சாம்போலியன் ஆவார்.[1] பின்னர் 1849-ம் ஆண்டில் இந்த மன்னர்களின் பட்டியலை மறுசீரமைத்தவர் கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ் ஆவார்.[2]
இப்பட்டியலில் 19 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அமர்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்களின் பட்டியல் விடுபட்டுள்ளது.
பட்டியலில் உள்ள மன்னர்கள் பெயர்[தொகு]
ராமேசியம் நினைவுக் கோயில் சுவரில் இரண்டு வரிசையில் 14 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. மேல் வரிசையில் 5 பார்வோன்களின் பெயரும், கீழ் வரிசையில் 9 பார்வோன்களின் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சுவரில் இரண்டு காட்சிகள் உள்ளது. இடப்புற காட்சியில் 14 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போன்றும், வலதுபுறத்தில் 5 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வது போன்று சித்திரம் வரையப்பட்டுள்ளது.
இடது வரிசை | வலது வரிசை | ||||
---|---|---|---|---|---|
வரிசை எண் | மன்னர் | குறுங்கல்வெட்டில் அரியணைப் பெயர் | வரிசை எண் | மன்னர் | குறுங்கல்வெட்டில் அரியணைப் பெயர் |
1 | முதலாம் தூத்மோஸ் | ஆக்கேபெர்கரே | 15 | ஹொரெம்ஹெப் | ஜெசேர்கெபெருரேரே-செதெபென்ரே |
2 | முதலாம் அமென்கோதேப் | ஜேசேர்கரே | 16 | மூன்றாம் அமென்கோதேப் | நெப்மாத்திரி |
3 | முதலாம் அக்மோஸ் | நெப்பெடையர் | 17 | நான்காம் தூத்மோஸ் | மென்கெபெருரே |
4 | இரண்டாம் மெண்டுகொதேப் | நெப்ஹெபேப்திரி | 18 | இரண்டாம் அமென்கோதேப் | ஆக்ஹெபெருரே |
5 | மெனஸ் | மெனி | 19 | மூன்றாம் தூத்மோஸ் | மெகெபெர்ரே |
6 | இரண்டாம் ராமேசஸ் | உசர்மாத்திரி-செதெபென்ரே | |||
7 | முதலாம் சேத்தி | மென்மாத்திரி | |||
8 | முதலாம் ராமேசஸ் | மென்பெத்தியரே | |||
9 | ஹொரெம்ஹெப் | ஜேசெர்கெபெருரெ-செதெப்பனரே | |||
10 | மூன்றாம் அமென்கோதேப் | நெப்மாத்திரி | |||
11 | நான்காம் தூத்மோஸ் | மென்கெபெருரே | |||
12 | இரண்டாம் அமென்கோதேப் | ஆக்கேபெருரே | |||
13 | மூன்றாம் தூத்மோஸ் | மென்கெபெர்ரே | |||
14 | இரண்டாம் தூத்மோஸ் | ஆக்கெபெரேன்ரே |
இதனுடன் மூன்றாம் ராமேசேசின் மெடிநெத் அபு மன்ன்னர்கள் பட்டியலை ஒப்பிடும் போது வடிவத்தில் ஒன்றாக உள்ளது.
இதனையும் காண்க[தொகு]
- பலெர்மோ மன்னர்கள் பட்டியல்
- துரின் மன்னர்கள் பட்டியல்
- அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
- கர்னாக் மன்னர்கள் பட்டியல்
- மெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்
- பண்டைய எகிப்திய அரசமரபுகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jean-François Champollion (1845). Monuments de l'Égypte et de la Nubie, Vol II, plates 149bis-150, Paris
- ↑ Carl Richard Lepsius (1849). Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plate 163, Leipzig
உசாத்துணை[தொகு]
- Jean François Champollion: Monuments de l'Égypte et de la Nubie, II, plates 149bis-150 (Paris: 1845)
- Carl Richard Lepsius: Denkmaeler aus Aegypten und Aethiopien, III, plate 163, (Berlin: 1849)
- The Epigraphic Survey: Medinet Habu: Volume IV, OIP 51, Plate 213 (Chicago: 1940)
- Kenneth A. Kitchen: Ramesside Inscriptions, Vol V, pp. 205:9-11; 209:9-10 (Oxford: 1983)