பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பற்று (attachment) என்பது ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும். இது முற்றிவிட்டால் பற்று கொண்ட பொருளுக்கு ஒருவர் அடிமையாகவும் (addiction) கூடும். இவ்வுணர்ச்சியின் மிகுதியால் ஒருவர் தான் பற்று கொண்ட பொருளை அடையவோ, காக்கவோ, மறைக்கவோ, வளர்க்கவோ, குறைக்கவோ கூடும்.

வகைகள்[தொகு]

  1. நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று
  2. மொழிப்பற்று (எ-டு: தமிழ்ப் பற்று)
  3. கடவுள் பால் பற்று (பக்தி)
  4. காதலரிடைப்பற்று (காதல்)
  5. இயற்கைப்பால் பற்று
  6. பொருள் (பணம்) பால் பற்று

நேர்மறை நிகழ்வுகள்[தொகு]

  1. பற்று கொண்ட பொருள்களை கவனமாக காப்பர் (நாட்டுப்பற்று, இயற்கைப்பற்று)
  2. பற்று கொண்ட பொருள்களையோ உணர்வுகளையோ கவனமாக வளர்க்கும் நிலை (மொழிப்பற்று, காதல், பக்தி)

எதிர்மறை நிகழ்வுகள்[தொகு]

பல நன்மைகளினை பற்று ஏற்படுத்தினாலும் சில எதிர்மறை விளைவுகளும் அளிக்கும்.

  1. பற்று கொண்ட பொருள்கள் அதிகம் தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் என்ற பேராசைக்கு வித்தாகும்
  2. ஒரு பொருளின் மீதான பற்றினால் வேறேதும் எண்ணா நிலைமை உண்டாக வாய்ப்புண்டு (பக்தி மற்றும் காதல்)
  3. முற்றிவிட்டால் பற்று கொண்ட பொருளுக்கு ஒருவர் அடிமையாகவும் (addiction) கூடும்
  4. இது நாட்போக்கில் ஒரு வெறியாக உருமாறவும் வாய்ப்புண்டு
  5. தேவையில்லா ஆசைகளை வளர்க்கும் (மாற்றான் மனை நோக்கல் என்பன போல்)

பற்றற்ற தன்மை[தொகு]

பற்று என்பது நல்லன செய்தாலும் பல தீமைகளை அதிகமாக செய்வதனால், இலக்கியங்கள், பக்தி நன்னெறிகளும் (இந்து, பௌத்தம், சமணம் சமூக கலாச்சாரங்களும், போன்றன) என்பன மக்களுக்கு பற்றற்ற நிலைக்கு செல்லுமாறு அறிவுறுத்திகின்றன. அநாதை மற்றும் வீடில்லா சிறுவர்கள் இரண்டாம் உலகப்போரிற்கு பிறகு யாருடனும் பற்றில்லாது இருப்பதைக்கண்ட உளவியல் நிபுனர் ஜான் பௌல்பி (John Bowlby) ஐக்கிய நாடுகள் அவையின் தூண்டுதலால் ஒரு ஆய்வினை நடத்தினார். பற்றினைப்பற்றி இவ்வாய்வு தெள்ளத்தெளிவாக விரிவாக்குகிறது[1].

உசாத்துணை[தொகு]

  1. Cassidy J (1999). "The Nature of a Child's Ties". Handbook of Attachment: Theory, Research and Clinical Applications. Ed. Cassidy J, Shaver PR. New York: Guilford Press. 3–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1572300876. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்று&oldid=2226998" இலிருந்து மீள்விக்கப்பட்டது