சாம்பல் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த அலகினையும், சிறிய, சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டுப்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணப்படும்.

விளக்கம்[தொகு]

பறக்கும் போது இறக்கைகளின் தோற்றம் (ஐதராபாத்து)

சாம்பல் தகைவிலான் கொண்டைக்குருவியை விடச் சற்றுப் பருத்த தோற்றம் கொண்டதாக சுமார் 18 செ. மீ. நீளமாக இருக்கும். இதன் அலகு நீலந்தோய்ந்த சாம்பல் நிறத்திலும், விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் சிலேட் நிறத்திலும் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி சிலேட் சாம்பல் நிறமாகவும், பிட்டம் வெளுத்தும், மார்பும் வயிறும் வைன் நிறம் தோய்ந்த சாம்பல் நிறமாக இருக்கும். வாலடியும், வாலடிப்போர்வை இறகுகளும் சாம்பல் நிறந்தோய்ந்த வெண்மையாக இருக்கும்.

பரவல்[தொகு]

இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி (வடமேற்குப் பகுதி நீங்கலாக), தெற்கே இலங்கை வரை; கிழக்கே மியன்மார், தென்/தென்கிழக்கு சீனா (ஹைனான் உட்பட) வரை; தாய்லாந்து, இந்தோசீனா வரையிலுள்ள பகுதிகள்[2].

வாழ்விடம்[தொகு]

மரங்களடர்ந்த. திறந்த வெளிகள், குறிப்பாகப் பனை மரங்களுள்ள வெளிகள்; வேளாண்மை செய்யும் பகுதிகள்; 2100 மீட்டர் வரை காணப்படும்.

இனப்பெருக்கம்[தொகு]

இனப்பெருக்கக் காலம்: மார்ச்சு முதல் சூலை வரை;

கூடு: சல்லிவேர்கள், நார்ப்பொருள்களால் ஆன ஆழம் அதிகமில்லாத கிண்ணம். பனையின் நடுமரத்திலிருந்து மட்டை பிரியும் இடத்தில், தரையிலிருந்து ஏறக்குறைய 12 மீ உயரம் வரையில், கூடு கட்டும். உயர் மின்னழுத்தக் கோபுரங்களிலும் கூடு வைக்கும். ஓர் ஈட்டில் 2 முதல் 2 முட்டைகள் வரை இடும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Artamus fuscus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Birds of the world -- Ashy Woodswallow -- Distribution". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  3. "BOW -- Breeding". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தகைவிலான்&oldid=3804146" இலிருந்து மீள்விக்கப்பட்டது