வின்வர்டு தீவுகள்
ஆங்கில மொழி: வின்வர்டு தீவுகள் பிரெஞ்சு மொழி: Îles du Vent | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | கரிபியக் கடல் & அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 14°N 61°W / 14°N 61°W |
மொத்தத் தீவுகள் | 90+ |
முக்கிய தீவுகள் | டொமினிக்கா செயிண்ட் லூசியா செயிண்ட் வின்செண்டு கிரெனடா |
பரப்பளவு | 2,099 km2 (810 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 1,467 m (4,813 ft) |
உயர்ந்த புள்ளி | லா கிராண்டெ சூபிரெர், குவாதலூப்பே |
நிர்வாகம் | |
பெரிய குடியிருப்பு | உறொசோ |
பெரிய குடியிருப்பு | காஸ்ட்ரீஸ் |
Largest settlement | கிங்சுடவுன் |
Largest settlement | செயிண்ட். ஜோர்ஜ்ஸ் |
மக்கள் | |
மக்கள்தொகை | 476,425 |
அடர்த்தி | 227 /km2 (588 /sq mi) |
வளிப்புறத் தீவுகள் அல்லது வின்வர்டு தீவுகள் (Windward Islands) மேற்கிந்தியத் தீவுகளில் சிறிய அண்டிலிசின் தெற்கிலுள்ள, பொதுவாக பெருந்தீவுகள் ஆகும். இவை வளிமறைவுத் தீவுகளுக்கு தெற்கே உள்ளன. நிலநேர்க்கோடுகள் 12°வடக்கிற்கும் 16° வடக்கிற்கும் இடையிலும் நிலநிரைக்கோடுகள் 60°மேற்கிற்கும் 62° மேற்கிற்கும் இடையிலும் இத்தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுக் குழுமம் டொமினிக்காவில் துவங்கி தெற்குநோக்கி நீண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் வடக்கு வரை பரந்துள்ளன.
பெயரும் புவியியலும்
[தொகு]பாய்க்கப்பல்களின் காற்றுவீசும் பக்கத்தில் இருந்தமையால் இவை வளிப்புறத் தீவுகள் என்றழைக்கப்பட்டன. பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் வணிகக் காற்று பொதுவாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும்; எனவே புதிய உலகிற்கு வந்த கப்பல்களுக்கு வளிமறைவுத் தீவுகளை விட இத்தீவுகளில் காற்று சாதகமாக இருந்தது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் நீரோட்டங்களும் காற்று வீசும் திசைகளும் இக்கபல்களுக்கு மிக விரைவாக பெருங்கடலைக் கடக்க உதவிய வழி இத்தீவுக் குழுமத்தை வளிப்புறத் தீவுகள் என்றும் வளிமறைவுத் தீவுகள் என்றும் பிரித்தன. டொமினிக்கா மையமாகக் கொண்டு இந்த பிரிவுக்கோடு ஏற்பட்டது. குவாதலூப்பேயும் தெற்கிலுள்ள தீவுகளும் "வளிப்புறத் தீவுகள்" எனப்பட்டன. பின்னர், மர்தினிக்கு தீவின் வடக்கிலிருந்த அனைத்தும் லீவர்டு தீவுகள் அல்லது வளிமறைவுத் தீவுகள் எனப்பட்டன. அடிமை வணிகத்திற்காக ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையிலிருந்தும் கினி வளைகுடாவிலிருந்தும் கிளம்பும் கப்பல்கள்மேற்கு-வடமேற்கு திசையில் கரிபியன், வட மற்றும் நடு அமெரிக்காக்களை நோக்கி பயணிக்கும்போது முதலில் சிறிய அண்டிலிசின் மிகத்தென்கிழக்கிலுள்ள தீவுகளை எதிர்கொள்வர். இத்தீவுக் கூட்டம் கரிபியக் கடலின் மிகக்கிழக்கு எல்லையாக விளங்குகின்றன.[1][2] தற்போதைய "வளிப்புறத் தீவுகளில்" பெரும்பாலானவை ஒருகாலத்தில் பிரான்சு ஆட்சியில் பிரான்சிய அண்டிலிசின் பகுதியாக இருந்தவையாகும்.
வளிப்புறத் தீவுகள் (வின்வர்டுத் தீவுகள்):[1][3]
- டொமினிக்கா (முன்பு லீவர்டு தீவுகளின் அங்கமாக நிர்வகிக்கப்பட்டது)
- மர்தினிக்கு
- செயிண்ட் லூசியா
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
- கிரெனடா
- ↑ 1.0 1.1 "Windward Islands". Encyclopaedia Britannica.
[A] line of West Indian islands constituting the southern arc of the Lesser Antilles, at the eastern end of the Caribbean Sea, between latitudes 12° and 16° N and longitudes 60° and 62° W. They include, from north to south, the English-speaking island of Dominica; the French département of Martinique; the English-speaking islands of Saint Lucia, Saint Vincent, and Grenada; and, between Saint Vincent and Grenada, the chain of small islands known as the Grenadines. Though near the general area, Trinidad and Tobago (at the south end of the group) and Barbados (just east) are usually not considered part of the Windward Islands.
- ↑ Chapter 4 - The Windward Islands and Barbados - U.S. Library of Congress
- ↑ "Windward Islands". Footprint Travel Guides. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)