விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்
விக்கிப்பீடியாவில், ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் காணப்படும் பொதுவான குறைகள் (எழுத்துப்பிழைகள், மென்பொருள் கோளாறுகள்..)குறித்து இந்தப் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
எழுத்துப்பிழைகள்
[தொகு]editing a section
[தொகு]ஒரு பக்கதின் ஒரு பகுதியை தொக்குத்தால், "தொகுத்தல் (Editting) XYZ (பிரிவு)" என்று வருகிறது. 'Editing' spellingஐ கவனிக்கவும். --Harikishore 12:48, 5 ஏப் 2005 (UTC)
- I removed the English word. Mayooranathan 19:13, 13 ஏப் 2005 (UTC)
- m:LanguageTa.php இங்கே பல மொழிபெயர்ப்புக்களை ஒரு முறை நான் சரி செய்தேன். இருந்தும் இந்த எழுத்துப்பிழை எங்குள்ளதென்று தெரியவில்லை. மயூர நாதன் விளக்கவும். -- Sundar 05:24, 7 ஏப் 2005 (UTC)
- m:LanguageTa.php இல் திருத்தங்கள் செய்தால், ஒரு bureaucrat தரத்திலுள்ள ஒருவர்தான் அவற்றைச் செயற்படுத்த முடியும். ஆரம்பத்தில் Brian மூலம் தான் இதனைச் செய்வித்து வந்தேன். இப்பொழுது இந்த முறையைக் கைவிட்டுவிட்டார்கள்போல் தெரிகிறது. இப்பொழுது அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை பக்கத்தில் அனைத்து Namespaces களிலுமுள்ள பெரும்பாலான Messages அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இங்கே தனித்தனியாக Message களைத் தொகுக்க முடியும். உடனடியாகவே அது செயற்படுத்தப்படும். சிக்கல் என்னவெனில் இதையும் ஒரு administrator மட்டும்தான் செய்ய முடியும்.Mayooranathan 13:03, 7 ஏப் 2005 (UTC)
- Sorry, I was wrong in saying that the bureaucrats could give effect to the changes made to language.php files. I think a developer or few selected people only can do it. Mayooranathan 15:00, 7 ஏப் 2005 (UTC)
இப்பிழை இன்னமும் இருக்கிறது. அண்மையில் en:User:Nichalp இதைப் பற்றி தெரிவித்தார். -- Sundar \பேச்சு 13:37, 13 செப்டெம்பர் 2005 (UTC)
Redirecting the donations page
[தொகு]I obsereved that most of the other language wikipedias redirect the nankodaikaL page found in the navigation pane to the donations page in wikimedia foundation.Currently I have just given a link to the foundation page.I request the page be redirected until we come up with a tamil version of wiki foundation website.Thanks.--ரவி (பேச்சு) 09:43, 13 ஏப் 2005 (UTC)
சிறப்புப் பக்க வழு?
[தொகு]சிறப்பு:Most linked to pages பக்கத்தில் உள்ள ஏற்கனவே உள்ள பக்கங்களுக்கான இணைப்புகள் அனைத்தும் சிகப்பு வண்ணத்தில் உள்ளன. இது ஒரு வழு என்றால், வழு அறிக்கை பதியலாம்--ரவி (பேச்சு) 14:22, 1 செப்டெம்பர் 2005 (UTC)
முதற் பக்க இற்றைப்படுத்தல்
[தொகு]புகு பதிகை செய்யாமல் முதற் பக்கத்தை பார்த்தால் பெரும்பாலும் இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இது ஏன்? எல்லா பக்கங்களும் இப்படி இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறதா? இதை எப்படி சரி செய்வது?--ரவி (பேச்சு) 11:39, 13 செப்டெம்பர் 2005 (UTC)
- நான் புகுபதிகை செய்யாமல் பார்த்தேன். சரியாக இருக்கிறது. ஒருவேளை அண்மையில் Mediawiki:Common.css மற்றும் Mediawiki:Monobook.css ஆகிய ஸ்டைல்ஷீட்டுகளினால் இருக்கலாம். புகுபதிகை செய்யாமல் முன்னுரிமைகளில் சென்று எந்த ஸ்டைல்ஷீட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று பாருங்களேன். -- Sundar \பேச்சு 12:06, 13 செப்டெம்பர் 2005 (UTC)
சுந்தர், புகுபதிகை செய்யாமல் என்னுடைய கணினியில் பக்கங்கள் இற்றைப்படுத்தப்பட்டு தான் இருக்கிறது. ஆனால்,வேறு கணினிகள், browsing centreகளில் புகுபதிகை செய்யாமல் பார்க்கும் போது முதற்பக்கம் ஒன்றிரண்டு நாட்கள் பின் தங்கி இருக்கிறது.பக்கங்கள் தானாக purge ஆவது போல் ஏதாவது செய்ய முடியுமா? அதே போல புகுபதிகை செய்யவிட்டால் வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு கட்டுரை எண்ணிக்கைகள் காண்பிக்கின்றன. இதையும் கவனிக்க வேண்டும். என்னுடைய முன்னுரிமைகளில் Monobook skin தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்புறம், உங்கள் ஆலோசனை படி புகுபதிகை செய்யாமல் எப்படி முன்னுரிமைகளை பார்ப்பது என புரிபடவில்லை. புகுபதிகை செய்தால் தானே முன்னுரிமைகளை பார்க்க முடியும்??--ரவி (பேச்சு) 13:03, 13 செப்டெம்பர் 2005 (UTC)
- புகுபதிகை செய்யாத பயனர்களுக்கு மட்டும் "ஸ்குவிட் கேஷ்" (en:Squid cache) என்கின்ற வகை இணையத்தளத் தேக்கிகளைப் (?) பயன்படுத்துகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு .இங்கே பார்க்கவும். மற்றபடி முன்னுரிமைகள் தொடர்பான என் கருத்து தவறு. -- Sundar \பேச்சு 13:21, 13 செப்டெம்பர் 2005 (UTC)
இப்பொழுது விளங்குகிறது, சுந்தர். ஆக, இதை ஒன்றும் பண்ண முடியாது :)--ரவி (பேச்சு) 14:23, 13 செப்டெம்பர் 2005 (UTC)
- ஆம். :-) -- Sundar \பேச்சு 14:25, 13 செப்டெம்பர் 2005 (UTC)
படிமப்´பேச்சுப்பக்கங்கள்
[தொகு]படிமப் பேச்சு:Tamilpolice.jpg பக்கம், படிமம்:Tamilpolice.jpg பக்கத்தின் பேச்சுப் பக்கம் போல் இல்லாது தனிக்கட்டுரைப்பக்கம் போல் உள்ளது. இது வழு தான் என நினைக்கிறேன். சுந்தர், இது குறித்த வழுவை பதிய முடியுமா? எல்லா முறையும் உங்களையே வழு பதிய சொல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என நினைக்கிறேன். wikipedia jargonல் உங்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதால் நீங்கள் மெடா விக்கி காரர்களுக்கு எளிதில் விடயத்தை புரிய வைத்து விடுவீர்கள் என்பதால் தான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கூடிய சீக்கிரம் நானும் இவ்விடயத்தில் பரிச்சயம் பெற முயல்கிறேன்.--ரவி (பேச்சு) 09:58, 17 அக்டோபர் 2005 (UTC)
- வியப்பாக உள்ளது. படிமம் இங்கே உள்ளது பேச்சுப் பக்கம் மட்டும் எப்படு கட்டுரையாகக் கருதப்படுகிறது என்று தெரியவில்லை. நாளை கண்டிப்பாக வழு பதிகிறேன். -- Sundar \பேச்சு 13:35, 17 அக்டோபர் 2005 (UTC)
- அனைத்து படிமப் பேச்சுப் பக்கங்களிலும் இச்சிக்கல் உள்ளது. எவரேனும் இங்கே நான் விளக்கியுள்ளதுபோல் விளக்கி ஒரு வழு பதியுங்கள். எனக்கு இன்றும் வேலை கூடுதலாக உள்ளது. என்னையும் (எனது மின்னஞ்சல் முகவரியைக் [sundarbecse yahoo டாட் காம்] கொண்டு) கவனிப்பவர்/அவதானிப்பவர் பட்டியலில் (CC-list in the bug) இணைத்து விடுங்கள். -- Sundar \பேச்சு 10:12, 18 அக்டோபர் 2005 (UTC)
கோப்புப்பெயர்கள்
[தொகு]இந்த குறையை சொல்வதற்கான இடம் இதுதானோ தெரியவில்லை. அத்தோடு இது ஏற்கனவே அல்கசப்பட்ட விடயமாகவும் இருக்கலாம். விக்கியின் ஒரு பொதுவான குறைபாடாக நான் காண்பது கோப்புப்பெயர்கள். ( ஒவ்வொரு கட்டுரையும் வழங்கியில் சேமிக்கப்படும் உரைக்கோப்புகளின் பெயர்கள்) நீண்ட அர்த்தமற்ற குறியீடுகளாய் அமைகிறது. இதனால் தொடுப்பு(URL) கூட இவ்வாறே அமைந்துவிடுகிறது. தொடுப்பை உலாவியின் முகவரிப்பெட்டியிலிருந்து அப்படியே நகலெடுத்து பொது இடங்களில் பயன்படுத்த முடியாதுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் நான் பயன்படுத்தும் டொக்குவிக்கியும் இதே குறைபாட்டை கொண்டிருக்கிறது. இதைப்பற்றி மீடியாவிக்கியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா?
--மு.மயூரன் 10:20, 17 அக்டோபர் 2005 (UTC)
- மயூரன், உங்கள் வலைப்பக்கத்தில் இருந்து இங்கு இணைப்பு தரும்போது அர்த்தமற்ற நீண்ட குறியீடுகளை அப்படியே URLஆகத் தருவதற்கு பதில் அப்படியே கட்டுரையின் பெயரைத் தரலாம். எடுத்துக்காட்டாக. இந்தியா கட்டுரைக்கு இணைப்பு தர http://ta.wikipedia.org/wiki/இந்தியா என்றே இணைப்பு தரலாம். இந்த பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. அந்த நீண்ட அர்த்தமற்ற குறியீடுகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களுக்கான குறிகளாக இருக்காலம் என நினைக்கிறேன்.--ரவி (பேச்சு) 10:35, 17 அக்டோபர் 2005 (UTC)
- என்னுடைய வலைப்பக்கத்தில் தொடுப்பு கொடுப்பதானால் பரவாயில்லை. சில இடங்களில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.
ஆனால் முடிந்தவரை நீங்கள் சொன்னவாறு தான் செய்துவருகிறேன். ஆனாலும் இந்த பிரச்சனை கவனத்திலெடுக்கப்படவேண்டியது. தமிழ் யுனிகோட் குறியீடுகளின் 16 பிட் அளவை எட்டு எட்டாக உடைத்து ஹெக்சாடெசிமல் பெறுமானங்களாக மீடியாவிக்கி கோப்புகளுக்கு பெயரிடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சனை. இதன் தொழிநுட்பரீதியான பரிகாரம் என்ன என்று தெரியவில்லை. --மு.மயூரன் 14:14, 17 அக்டோபர் 2005 (UTC)
பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் எழுத்துக்கூட்டல்களில் பொதுத் தரம் பேணப்படுதல்
[தொகு]கீழே உள்ள உரையாடலானது பாலி வைனைல் குளோரைடு என்னும் பக்கத்தில் இருந்து எடுத்து இங்கே இடுகிறேன். பொதுத்தரம் பேணா இக்குறைபாடு மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றது. வருங்காலத்தை நினைவில் கொண்டு பொதுநலம் பேணுவது நல்லது என்னும் நோக்கில் உங்கள் கவனத்திர்கு இங்கே இடுகின்றேன். --செல்வா 14:18, 29 ஜனவரி 2007 (UTC)
- கட்டுரையை முதலில் எழுதுபவரின் எழுத்துக்கூட்டலுக்கும் மதிப்புத் தருவது என்ற கருத்தை ஸ்ரீநிவாசன் முன்வ்வைத்ததாக ஞாபகம். அது தொடர்பான உரையாடல் எங்குள்ளது என்பதை யாராவது தேடித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --கோபி 11:44, 29 ஜனவரி 2007 (UTC)
- கோபி, அது ஒரு நீண்ட உரையாடல் இல்லை என்று நினைக்கின்றேன். இருப்பினும் ஸ்ரீநிவாசனின் கருத்தின் மூலம் என்ன வென்றால் மொழியைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், உள்ளடக்கத்தைப் விரிவாக்குவதில் கவனத்தை தந்தால் நன்று என்பதாகும். குறிப்பாக அவர் சமஸ்கிரத எழுத்துக்களை தவிர்ப்பது போன்ற விடயங்களில் த.வி. ஆற்றல் விரயம் போன்வதை விரும்பவில்லை என்று நினைக்கின்றேன். --Natkeeran 15:17, 29 ஜனவரி 2007 (UTC)
கோபி, மயூரநாதன் அவர்களின் எழுத்தை, ஆக்கங்களை மிகவும் போற்றி மதிப்பவன் நான். தலைப்பில் பாலி என்றும் குளோரைடு என்றும் மாற்றியதற்கு காரணம் அவையே சரியானவை. மேலே நான் police, poly ஆகிய சொற்களை எடுத்துக்காட்டியுள்ளேன். Police, poker, potasium, position என்னும் சொற்களில் வழங்கும் முதல் உயிர்மெய் ஒலியானது குறில், நெடில் அல்லது இரண்டிற்கும் இடைபட்ட ஒகரம் ஆகும். policy, poly, positive, possible, point முதலியன அகர வேறுபடுகள் கொண்ட உயிர்மெய் ஒலி. பாலி போன்ற அறிவியல் முன்னொட்டுகள் நூறுக்கணக்கான இடங்களிலே பயன்படுவன. சரியான ஒலிப்பில் இருத்தல் நலம் என்று நினைத்தே திருத்தினேன். நாம் பொதுத்தரம் பேணத் தவறினால், நம் தமிழ் விக்கி தரம் குறைந்ததாக மதிப்பிடப்படும். பொதுத்தரம் பேணுவது நம் எல்லோருக்கும் நல்லது. ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. இதனை அடையாளப் பிரச்சினையாகக் கொண்டால், பிரிவுணர்வும் தாழ்ச்சியும்தான் ஏற்படும். சுமார் 70-75 மில்லியன் தமிழர்களும் பயன்பெறுமாறும், வழி வழியாக சீரான வளர்ச்சி பெறுமாறும் செயல்படுவதே நல்லது. அருள்கூர்ந்து தவறாக எண்ணாதீர்கள். பொது நலம்தான் கருத்தித்தான் இவைகளைக் கூறுகிறேன்.--செல்வா 14:05, 29 ஜனவரி 2007 (UTC)
- செல்வா, சிறு தகவல். சில காலத்தின் முன்னர் நோபல் பரிசு பெற்றவர்கள் தொடர்பாக குறுங்கட்டுரைகளை எழுத முனைந்த பின்னர் அதனை நான் கைவிடக் காரணம் தலைப்புக்கள் மாற்றப்படுவதிலான அதிருப்தியே. comedy உங்களுக்குக் காமடியாக இருப்பது எங்களுக்குக் கொமடியாக இருக்கிறது :-) இவ்விடயத்தில் நான் விவாதிக்கப் போவதில்லை. 80% சிங்களவர் இருக்கிறோம். ஆதலால் நீங்களும் சிங்களம் படியுங்கள் என்பதைப் பல்லாண்டுகள் கேட்டு வந்துள்ளோம் என்ற குறிப்பை மட்டும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். 70-75 மில்லியன் தமிழர்களில் 5 மில்லியன் கூடத் தேறாது ஈழத் தமிழர் எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை விக்கிபீடியாப் பயனர்களிலும் பிரதிபலித்தால் மிக இயல்பாக பொதுத்தரம் பேணப்படுமே...கோபி 14:30, 29 ஜனவரி 2007 (UTC)
- கோபி, பொதுத் தரம் என்பது பெரும்பான்மையினரின் தரம் என்று பொருள்படாது. எழுத்து தமிழ் சீராக அமைவதே, அனைத்து தமிழர்களுக்கும் நன்று. எமது தனித்தன்மையை எங்கு நிலைப்பாட்ட வேண்டும், எங்கு நாம் இணங்கி செல்ல வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்வதே நன்று. --Natkeeran 15:06, 29 ஜனவரி 2007 (UTC)
- கோபி, நான் 1999-2002 காலப்பகுதியில் பெங்களுரில் இருந்தேன். ஒருசமயம் எனது அம்மா என்னைப் பார்பதற்காக பெங்களூர் வந்திருந்தா அப்போது ஒருநாள் அம்மாவுடன் சந்தைக்குச் சென்றிருந்தேன் அப்போது ம்ரக்கறிகள் வாங்கினேன் நான் நேரடியாக வியாபாரியுடன் கன்னடத்தில் உரையாடினேன் அம்மாவுடன் இலங்கைத் தமிழில் உரையாடினேன் இதைக் கேட்டவியாபாரி "நீ என்னா தமிழ் பேசுறா நானும் தமிழ்தான் எனக்கு ஒண்ணும் புரியலை" என்றார். பலநாட்டுக்காரர்களிடமும் இலங்கையில் வடக்குக்கிழக்கு மாகாணங்களிலும் பல பகுதிகளில் கடமையாற்றியன் என்ற முறையில் சொல்கின்றேன் ஒவ்வொரு வட்டாரா வழக்குகளும் மாறுபடத்தான் செய்யும் "மாற்றமாம் வையகத்தில்" அன்றே (அப்பர் சுவாமிகள்?) கூறியுள்ளார். தமிழில் மாத்திரம் அல்ல ஆங்கிலத்தில் ஒவ்வொரு நாட்டுக்காரர்கள் ஒவ்வொருமாதிரியே உச்சரிப்பார்கள். இன்று அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறியுள்ளதால் அவர்களின் உச்சரிப்புத்தான் இன்று பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக Router ஐ ரவுட்டர் என்றும் My Documents ஐ மை டாக்கியூமண்ட்ஸ் என்றவாறும் Microsoft ஐ மைக்ரோசாப்ட் என்றவாறே மைக்ரோசாப்ட் பயிற்சி CD களில் கிடைக்கின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று புறநானூறு கூறுவதற்கமைய நாம் இவற்றை ஏற்றுக்கொள்வதே நல்லது. "தமிழின் வளர்ச்சி தொன்மையில் அல்ல தொடர்ச்சியிலேயே" என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவதற்கு அமையவும் இவற்றை கையாள அனுமதிப்பதே நல்லது. தமிழ்ப் பழமொழியில் உள்ளது போல் "யதார்தவாதி வெகுசன விரோதி" என்பது போல் நாம் இறுக்கமான கொள்கைகளை வைத்திருந்தால் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையும் ஏற்கனவே பங்களிப்பவர்கள் குறைவாக உள்ளது. செல்வாவின் கருத்துக்கள் ஏற்புடையனவே அவர் எழுதிய கட்டுரைகள் பட்டாம்பூச்சி மற்றும் எழுதி வரும் கட்டுரைகள் சிறப்பானவை. நீங்கள் ஆரம்பித்த மடிக்கணினி நல்லதோர் கட்டுரை. தொடர்ந்தும் எழுதுங்கள். இவ்வாறான உச்சரிப்பில் ஏதேனும் உடன்பாடில்லை என்றால் அல்லது வட்டார வழக்கு வேறுபட்டால் (எடுத்தக்காட்டாக மட்டக்களப்பில் கிடங்கு வெட்டுவதை பள்ளம் தொண்டுவதாக் கூறுவார்கள், இலங்கையில் நுளம்பு என்பதை இந்தியாவில் கொசு என்பார்கள்) நிலையில் வழிமாற்றுப் பக்கங்களே பொருத்தமானவை பார்க்க பேச்சு:கொசு. --Umapathy 02:54, 30 ஜனவரி 2007 (UTC)
எழுத்து தமிழில் பொதுத் தரம் பேணப்படுதலே தமிழின் மரபு, தமிழின் சிறப்புக்களில் ஒன்று. அனேகமாக இந்தப் பண்பு பேணப்படுகின்றது எனலாம். இருப்பினும் சில இடங்களில் நாம் இன்னும் மேம்படலாம், குறிப்பாக வேற்று மொழிச் சொற்களின் எழுத்துக்கூட்டலில்.
தமிழில் பலக்குவது போலவே எழுத்துக்கூட்டல் அமையும். இதுவும் தமிழின் சிறப்பே. இந்த இயல்பு சொற்களுக்கான எழுத்துக்கூட்டலை நினைவில் சேகரிக்கும் தேவையை தவிர்க்கின்றது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்தின் சீரற்ற எழுத்துக்கூட்டலின் (பலக்குவது போன்று எழுத்துக்கூட்டல் அமையாத தன்மை) குறைகளை நன்கு அறிவர்.
நாம் வேற்று மொழிச் சொற்களுக்கான எழுத்துக்கூட்டலுக்கான ஒரு பொதுத் தரம் என்ற பிரச்சினையில் மனிதர்களின் பெயர்களை, இடங்களின் பெயர்களையும் எழுத்துக்கூட்டும்பொழுது ஒரு விதியையும், நுட்ப மற்றும் பிற சொற்களை எழுத்துக்கூட்டும் பொழுது இன்னொரு விதியையும் இங்கு கடைப்பிடிக்க வேண்டி வரலாம். இலங்கையில் ஒரு சிங்கள இடத்தை இப்படித்தான் தமிழில் எழுதவார்கள் என்றால், அதைப் பின்பற்றி எழுதுவது நன்று. அதே இடத்தை தமிழ்நாட்டில் எப்படி பலக்குவார்கள் என்று எண்ணி எழுதவது நடைமுறைச் சாத்தியம் அற்றது. ஒருவரின் பெயரும் அப்படியே. இங்கே, தமிழர்கள் வாழும் இடங்களையும் அங்கே வாழும் மனிதர்களையும் பற்றியே குறிப்பிடுகின்றேன். பிற இடங்கள் பெயர்களில் ஒரு பொதுத் தரம் பேணப்படுவது நன்றே. அதற்கான கையேடு ஒன்றைத் தயாரித்தலும் அவசியம். எனவே மொழிபெயர்ப்பு எழுத்துக்கூட்டலில் பொதுத் தரம் (குறைந்த பட்சம் தமிழ் விக்கிபீடியாவில்) விரும்பத்தக்கதே. ஆனால் அது நன்கு ஆராயப்பட்டு விபரமாக (comprehensive) உருவாக்கப்படவேண்டு. --Natkeeran 14:51, 29 ஜனவரி 2007 (UTC)
இது போன்ற உரையாடல்கள் திரும்பத் திரும்ப வருவது கவலையளிக்கிறது. மேம்பட்ட புரிந்துணர்வுடன் நான் செயல்பட வேண்டும். குளோரைட்டு என்பதை chlorite என்று தான் உச்சரிக்க முடியும். ஆனால், cholride, chlorite ஆவது வேதிப்பூர்வமாகவே பிழையாகிவிடும். chloride என்பதற்கான சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துக்கூட்டலாக குளோரைடு தான் இருக்க முடியும். இது விதயத்தில் மாற்றுக் கருத்துக்கள் அதிகம் இருக்காது என நம்புகிறேன்.
Poly என்பதை பாலி என்று எழுதக் கோருதல் தமிழகத் தமிழர்கள் அப்படி உச்சரிப்பதால் அல்ல. உலகில் ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையோர் அப்படி உச்சரிப்பதால் தான். பாலி, பொலி - இரண்டுமே தமிழ் ஒலி மரபுக்கு ஏற்ப இருக்கும்போது அவற்றில் சரியானதை தேர்ந்து எழுதுவது தானே முறை? ஒரு வேளை பாலி - தமிழ் ஒலி மரபுக்கு ஏற்பில்லாததாகவும், பொலி - தமிழ் ஒலி மரபுக்கு ஏற்புடையதாகவும் இருந்தால், நிச்சயம் பொலி என்று தான் எழுத வேண்டும்.
ஸ்ரீநிவாசனின் கருத்துக்கள் குறித்து நற்கீரன் தெரிவித்திருப்பது சரியான புரிதலே. முதலில் எழுதியவரின் எழுத்துக்கூட்டலுக்கு மதிப்பளிப்பது என்பது அது சரியாக இருக்கும் பட்சத்தில் தான். தவறான ஒரு எழுத்துக்கூட்டலை அது முதலில் எழுதப்பட்டது என்பதற்காக எப்படி அனுமதிக்க முடியும்? poly என்பதற்கு பொலி என்ற உச்சரிப்பை எந்த ஆங்கில அகராதியிலும் நான் கண்டதில்லை. கோபி, தயவு செய்து இதை பெரும்பான்மை - சிறுபான்மை வழக்காக கருத வேண்டாம். இலங்கை வழக்கு சரியாக இருக்கும் தருணங்களில் அதை மறுத்து நாம் என்றேனும் தமிழ் விக்கியில் செயல்பட்டதுண்டா? எழுத்துத் தமிழில் சீர்மை கொள்வது தமிழின் எதிர்காலத்துக்கு நன்று. தமிழ்நாட்டிலேயே எண்ணற்ற வட்டார வழக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆங்கில, தமிழ்ச் சொற்களின் பலுக்கல் வேறுபடும். அவற்றை நாம் பொதுத் தமிழில் நாம் கொண்டு வருவதில்லையே?--Ravidreams 07:05, 30 ஜனவரி 2007 (UTC)
- ரவி கூறியது போலத் திரும்பத்திரும்ப இப்படியான உரையாடல்கள் வருவது கவலையளிப்பதுதான் ஆனாலும் என்ன செய்யலாம். முழுமையான புரிந்துணர்வு ஏற்படும்வரை இது தவிர்க்க முடியாததாகத் தான் இருக்கும் போலிருக்கிறது. இந்த விடயத்தில் மௌனமாக இருந்து விடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனாலும் உரையாடலின் போக்கைப் பார்க்கும்போது என்னுடைய கருத்தையும் இங்கே கலந்துவிடாமலிருப்பது நியாயமானதாகப் படவில்லை.
- முதலாவதாக, ரவியின் Chlorite, Chloride தொடர்பான விடயத்துக்கு வருகிறேன். குளோரைட்டு என்று நான் எழுதியிருப்பது வேதிப்பூர்வமாகப் பிழை என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இலங்கையில் படித்த இலட்சக்கணக்கான தமிழ் மாணவர்கள் இவ்வாறுதான் எழுதுகிறார்கள். அப்படியானால், தமிழ்நாட்டுக் காரர்களுக்கு இருக்கும் குழப்பம் இலங்கையர்களுக்கு ஏன் ஏற்படவில்லை என்று கேள்வி எழும். இலங்கைத் தமிழர் ற்ற என்பதை இன்னும் பழந்தமிழர் உச்சரித்தது போலவே tta என உச்சரித்துவருவதுதான் இதற்குக் காரணம். இது இலங்கைத் தமிழருக்கு ஒரு சாதகமான நிலை என்றுதான் நான் கூறுவேன். நாங்கள் குளோரீன் கலந்த சேர்வைகளின் பெயர்களைப் பின்வருமாறு எழுதுகிறோம்:
- Chlorate (-ClO2) - குளோரேற்(று)
- Chlorite (-ClO3) - குளோரைற்(று)
- Chloride (-Cl) - குளோரைட்(டு)
- இலங்கையில், குளோரைட்டு என்று எழுதினால் அதை எவரும் Chlorite எனக் குழப்பிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இலங்கையில், t, ஐ ட்ட மூலம் குறிக்கவேண்டிய தேவை இல்லை.
- அடுத்ததாக ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையினர் பாலி என்றுதான் உச்சரிக்கிறார்கள் என்று எழுதியிருப்பதுடன் அதுதான் சரி என்றும் எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட பாலி என உச்சரிப்பதில்லை. poly என்பதை உச்சரிப்பதில், அமெரிக்கர்களுக்கும், இங்கிலாந்துக்காரர்களுக்கும் கூட வேறுபாடு உள்ளது. அமெரிக்கர்கள் o என்பதை உச்சரிக்கும்போது கூடுதலான ஆகாரம் கொடுப்பது உண்மைதான். ஆனால் அவர்களும் ஆ வுக்கும் ஓ வுக்கும் இடையில்தான் உச்சரிக்கிறார்கள். நீங்கள் ஆ வை எடுத்துக்கொண்டீர்கள் நாங்கள் ஓ வை எடுத்துக்கொண்டோம். நிற்க, இந்தியாவிலும் கூட o வுக்குக் கூடுதலான ஆகாரம் கொடுத்து உச்சரிப்பது தமிழ் நாட்டவர்தான். வங்காளிகளோ, மலையாளிகளோ, குஜராத்திகளோ, மராட்டியரோ, மணிப்புரிகளோ, பாலி என்று உச்சரித்து நான் கேட்டதில்லை. பொலி என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆங்கிலேயர் தவிர்ந்த பல இனங்களைச் சேர்ந்த ஐரோப்பியர்களுடன் எனக்கு இங்கே பழக்கம் உண்டு. அவர்களும் பாலி என்று உச்சரிப்பதில்லை. பிலிப்பைன் மக்கள், color என்பதைக்கூட கொலொர் என்றுதான் உச்சரிப்பார்கள். இன்று ஆங்கிலம் ஒரு உலக மொழி. அதைப் பலரும் பலவிதமான உச்சரிப்புகளுடன் பேசிவருகிறார்கள். இதிலே அவரவர் தான் பேசுவதுதான் சரி என்று வாதிடுவது அர்த்தமற்றது. அதிலும் மற்றவர்களும் அதையே கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதைவிட அர்த்தம் அற்றது. ஆங்கிலேயரே ஒருவர் COLOUR என்றால் இன்னொரு சாரார் COLOR என எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவரவர் முறைகளைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையா?
- அகராதியில் சும்மா பார்த்து பாலி என்று உள்ளதா பொலி என்றுள்ளதா என்று கண்டுபிடித்துவிடமுடியாது. இங்கே கிளிக் செய்து பாலி என்றுதான் உச்சரிக்கிறார்களா எனக் கேட்கவும். மேலும் இதே பக்கத்தில் poly என்பதற்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ள உச்சரிப்புக்கான குறியீட்டைப் பார்க்கவும். அக் குறியீட்டின் மீது கிளிக் செய்து, வரும் Pronunciation Key யில் poly என்பதில் வரும் o வை pot என்பதில் காணும் o போல் உச்சரிக்கவேண்டும் எனக் குறித்திருப்பதைக் கவனிக்கவும். .
- pot என்பதன் உச்சரிப்புக்கு இங்கே செல்லவும். நீங்கள் சொல்வதுபோல் பாலி என்பதே சரி என்றால், poly யில் வரும் o வுக்காக father இல்வரும் a இன் உச்சரிப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பார்கள் அல்லவா? Mayooranathan 18:47, 30 ஜனவரி 2007 (UTC)
//ஆங்கிலேயரே ஒருவர் COLOUR என்றால் இன்னொரு சாரார் COLOR என எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவரவர் முறைகளைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையா?// விரிவான விளக்கத்துக்கு நன்றி. --கோபி 19:02, 30 ஜனவரி 2007 (UTC)
- இரண்டு எழுத்துக்கூட்டல் இருப்பது ஆங்கிலத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அது எழுத்து தமிழுக்கு தேவையா? தமிழ் ஒரு சீரான எழுத்துக்கூட்டல் உச்சரிப்பு முறையைக் (குறைந்தது எழுத்து தமிழுக்காவது) கொண்டிருத்தல் நன்று என்றே தோன்றுகின்றது. இருப்பினும் இதில் பல பிரச்சினைகள், முகம்கள் உள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. ஒரு Common Minimum Understanding வரமுடியுமா என்று பார்த்தால் நன்று. அதாவது எங்கு எங்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்காண தீர்வுகள் எவையாக இருக்க முடியும். இதை தகுந்தவாறு ஆவணப்படுத்தினால் மீண்டும் மீண்டும் அசைபோடத்தேவையில்லை. --Natkeeran 19:52, 30 ஜனவரி 2007 (UTC)
பொதுத்தரம்-2
[தொகு](1)) நம் கருத்துரையாடல்கள் மிகவும் கவலைக்கிடமான வழிகளில் செல்லுகின்றன. தீர்வு தரும் வகையில் பலவகையான முடிவுகள் எடுக்கலாம் (ஆனால் அவை அனைத்தும் நலம் பெருக்குவதல்ல, நம் அனைவருக்கும் தாழ்வுதரும் வழிகளே, எனவே அவற்றை தவிர்க்கிறேன்).
(2) மயூரநாதன், நீங்கள், //தமிழர் ற்ற என்பதை இன்னும் பழந்தமிழர் உச்சரித்தது போலவே tta என உச்சரித்துவருவதுதான்//. பழந்தமிழர் உச்சரித்தது எப்படி என்று அறிவது கடினம், ஒலிப்பதிவுகள் அன்று இல்லை. நூலில் யாரேனும் எழுதியிருப்பின் அது உடனே உண்மையாகாது. நீங்கள் கூறுவது உண்மையாயின், தமிழர்கள் கற்ற-கட்ட, வற்ற-வட்ட, சுற்ற-சுட்ட, கற்று-கட்டு, சுற்று-சுட்டி, குற்றி-குட்டி, புற்று-புட்டு, பெற்றி-பெட்டி, போற்றி-போட்டி போன்ற நூற்றுக்கணக்கான சொற்களை எப்படி வேறுபாடு காட்டினர்? அதற்கு உறுதி பயப்பவை யாவை? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுவது நல்லது: குட்டி, பட்டி, பட்டு என்பனவற்றில் ஒற்று மிகுவதால் இவைகளை kuTTi, paTTi, paTTu என்றுதான் ஒலித்தல் வேண்டும்.
(3) * Chloride (-Cl) - குளோரைடு
- Chlorite (-ClO3) குளோரைட்டு என்பவைதான் சரி. ஒற்று மிகுந்து வருவதால் வரும் விதியை நினைவில் கொள்க.
(4) பாலி (poly) பாட் (pot) முதலியவை நன்கு அறிந்தவை. நாள்தோறும் கேட்பவையும். எனவே ஒலிக்கோப்ப்புகள் ஒரு சிறிதும் தேவை இல்லை, எனினும் நீங்கள் கொடுத்த இணைப்பிலும் நான் ஏற்கனவே கூறியதுதான் மெய்யாகின்றது. பாட் பாலி என்பனவற்றை மெர்ரியம்-வெப்ஸ்ட்டர் (Merriam-Webster)ல் பார்க்கவும் (ஒலிக்கோப்பு):
மேலும், நெடிலா, குறிலா என்றும் அகர நெடில் வேறுபாடா, ஒகர நெடில் வேறுபாடா என்றும் உணரற்பாலது. நிங்கள் பொட்டு (பொற்று) அல்லது போட்டு (போற்று) என்பனவற்றை எப்படிப் பலுக்குவீர்கள் என்றும் பட்டு (பற்று) அல்லது பாட்டு (பாற்று) என்பனவற்றை எப்படிப் பலுக்குவீர்கள் எனவும் தெளிவாகத் தெரிய வேண்டும். தமிழ் மொழியானது எழுத்தொலிப் பாங்குடைய மொழி அதனை ஆங்கிலத்தோடு ஒப்பிடுவது சரியில்லை. தமிழில் எழுதும்பொழுது பொதுத்தரம் பேணப்படுவது இன்றியமையாதது. --செல்வா 22:39, 30 ஜனவரி 2007 (UTC)
(5) மேலும், மயூரநாதன் குறிப்பிட்ட father என்னும் ஒலி ஒரு குறிப்பிட்ட அகர நெடில்தான். ஆங்கிலத்தில் policy, pawn, fawan, popular முதலிய பல சொற்கள் பல நுட்ப வேறுபாடுகள் கொண்டவை ஆனால் அவை அனைத்தும் அகர நெடில் வேறுபாடுகள் ஒகரக் குறில் அல்ல.
(6) தமிழ் எழுத்தொலிப்பாங்குடைய மொழி என்பதை நினைவில் கொள்ளுக. ஆங்கிலத்தில் schedule என்னும் எழுத்துக்கூட்டலை ஸ்கெ'ட்யூல் அல்லது ஷெ'ட்யூல் இருவிதமாகவும் ஒலிக்கலாம் ஆனால் எழுத்துக்கூட்டல் schedule என்பதுதான். இது போலவே education என்பதும். --செல்வா 22:55, 30 ஜனவரி 2007 (UTC)
(7) Father என்பதற்கான ஒலிக்கோப்பும் கீழே கொடுத்துள்ளேன். Poly , Pot, Father ஆகிய மூன்றுக்குமே ('pä-lE, 'pät, 'fä-[th]&r) உயிரொலியாகிய ä (a with umlaut) ஐ குறிப்பதைப் பாருங்கள். --செல்வா 23:03, 30 ஜனவரி 2007 (UTC) http://www.m-w.com/dictionary/father
(8)மெர்ரியம்-வெப்ஸ்டர் அகராதியின் ஒலிப்புக்கான குறிகள்:http://www.m-w.com/help/pronguide.htm
- செல்வா அமெரிக்கக் கண்டத்தில் இருப்பதால் அமெரிக்க அகராதியை மேற்கோள் காட்டுகிறார் போலும். ஆங்கில அகராதிகளில் Poly என்பது எப்படி உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனிக்கவும்.--Kanags 07:37, 31 ஜனவரி 2007 (UTC)
- கனகு, poly என்பதற்கு Oxford English Dictionary அமெரிக்க, பிரித்தானிய பலுக்கல்கள் ஒன்றே என்பதை உறுதி செய்கின்றது. p க்கு அடுத்தாற்போல உள்ள உயிரொலியைக் குறிக்க கையெழுத்து a ன்பது போன்ற குறியைப் பயன்படுத்துகின்றனர். அதனை, இங்கே படியெடுத்து ஒட்ட இயலவில்லை. Oxford English Dictionary க்கான வலைத்தளம் இங்கே http://dictionary.oed.com/ உள்ளது ஆனால் இத்னைப் பயன்படுத்த பதிவு செய்திருக்க வேண்டும். எங்கள் பல்கலைக்கழத்தில் இது உள்ளதால் poly, pot, policy, father போன்ற சொற்களுக்குப் பார்த்தேன். மெர்ரியம்-வெப்ஸ்ட்டரில் கொடுத்துள்ள அதே ஒலிப்பைத்தான் கொடுத்துள்ளனர். Oxford English Dictionary யில் அமெரிக்க-பிரித்தானிய ஒலிப்பு முறைகள் என்று இரண்டிற்கும் கொடுத்துள்ளனர். மேற்கண்ட சொற்களில் வேறுபாடு ஏதும் இவ்விரு ஒலிப்பு முறைகளுக்கும் கொடுக்க வில்லை. எடுத்துக்காட்டாக Policy என்னும் சொல்லுக்கு அமெரிக்க-பிரித்தானிய ஒலிப்புகள் இரண்டிற்கும், முதல் உயிர்மெய் ஒலி ஒன்றாகவே டொடுத்துள்ளனர், ஆனால் லி என்னும் இரண்டாவது உயிரொலிக்கு வேறுபாடு காட்டுகின்றனர், மூன்றாவது சி என்னும் உயிரொலி ஒன்றாகவே கொடுத்துள்ளனர். இந்த Policy என்னும் சொல்லுக்கும் poly என்னும் சொல்லுக்குக் குறித்த அதே அகர ஒலிப்புக் குறிதான் கையாளுகின்றனர். --செல்வா 13:22, 31 ஜனவரி 2007 (UTC)
பொதுத்தரம் பேணல்-அனைவருக்கும் பொதுவாக ஒரு வழி!
[தொகு]மதிப்பிற்குரிய செல்வா, கோபி, நக்கீரன், உமாபதி, மயூரநாதன், ரவிச்சந்திரன், கனகரத்தினம் சிறீதரன் ஆகிய அனைவருக்கும் அன்பு வணக்கம்!
விக்கிப்பீடியாவில் பொதுவான எழுத்துத் தரம் பேணல் பற்றிய உங்கள் விவாதங்களை மேலே படித்தேன். மிகவும் ஆழமாகவும் அருமையாகவும் ஆதாரங்களோடு விவாதித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி! ஆனால் கூடவே உணர்ச்சிகரமாகவும் விவாதித்திருப்பதுதான் வருத்தம்!
விக்கிப்பீடியாவிற்கு நான் புதியவன். ஆயினும் இதற்காக எனக்குத் தெரிந்த ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன். கனிவு கூர்ந்து அனைவரும் இதைப் பரிசீலிப்பீர்களாக!
ஈழம், தமிழ்நாடு ஆகிய இரு தரப்புத் தமிழர்களுமே இதுவரை எடுத்து வைத்திருக்கும் மேற்கண்ட விவாதங்களிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகிறது. இருவரின் ஒலிப்பு முறையுமே சரிதான் என்பதுதான் அது. ஏனெனில் இரு தரப்பினருமே தத்தம் ஒலிப்பு முறைதான் சரி என்பதற்கு அந்த அளவுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்.
எனவே இனி நாம், ஓர் ஆங்கிலச் சொல்லைத் தமிழ் ஒலிப்படுத்தி எழுதுவதாக இருந்தால் அதன் பக்கத்திலேயே அடைப்புக்குறிக்குள் அந்தச் சொல்லை ஆங்கிலத்திலும் ஒருமுறை எழுதி விடுவது இச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக இருக்குமென நம்புகிறேன். இதன்படி யாரும் அவரவர் ஒலிப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. அவரவர் ஒலிப்பு முறைப்படியே எழுதப்பட்டிருந்தாலும் அடைப்புக்குறிக்குள் அந்தந்த ஆங்கில வரிவடிவமும் இருப்பதால் யாருக்கும் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. இதனால் யாரும் அவரவர் ஒலிப்பு முறையை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்காது.
ஆனால் இந்த முறையிலும் ஒரே ஆங்கிலச் சொல்லை ஒவ்வொருவரும் அவரவர் ஒலிப்பு முறைப்படித்தானே எழுத வேண்டி வருகிறது? இஃது எப்படி பொதுத்தரமாகும் எனக் கேட்டால், 'இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்பது போல் எந்த வகையான பொதுத்தரத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்கு அல்லது பயனர் உளம் நோக ஒருதலைப்பட்சமாக ஒரு பொதுத்தரத்தைப் பின்பற்றுவதற்கு, இது மேல் இல்லையா? அது மட்டுமின்றி, நோபல் பரிசு பெற்றவர்கள் பற்றிப் பல குறுங்கட்டுரைகள் எழுத விரும்பிய திரு. கோபி அவர்கள் இந்த ஒருதலைப்பட்சமான பொதுத்தரம் பேணும் முறையால் அவற்றை எழுதும் எண்ணத்தையே கைவிட்டதாகக் கூறினாரே அஃது எவ்வளவு வேதனையான செய்தி!? அப்படியொரு முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்றால் அவர் உள்ளம் எந்த அளவுக்குப் புண்பட்டிருக்கும்?! நம் நண்பர்களுள் ஒருவர் அப்படி வேதனையடைய நாம் விடலாமா? அப்படி அவர் வேதனையடைந்த பின்னும் அனைவருக்கும் பொதுவான ஒரு பொதுத்தர முறைக்கு மாறுவது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டாவா? அருள் கூர்ந்து சிந்தியுங்கள் கிளைஞர்களே!
நான் முன்வைத்துள்ள இந்த 'அடைப்புக்குறி முறை' பற்றிய உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள் நண்பர்களே!
அவற்றைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் அன்பன்: --இ.பு.ஞானப்பிரகாசன் 10:56, 1 ஜூலை 2010 (UTC)