வலைவாசல்:கணினி நிரலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி நிரலாக்கம்

கணினி நிரலாக்கம் (நிரலாக்கம் அல்லது கோடிங் என்றும் அறியப்படும்) என்பது கணினி நிரல்களின் மூல நிரல்குறிகளை வடிவமைத்து, எழுதி, சோதித்து, பிழைநீக்கிப் பேணும் செயல்முறையாகும். மூல நிரலானது ஒன்றோ பலவோ நிரல்மொழிகளால் எழுதப்படும். நிரலாக்கத்தின் நோக்கமானது, கணினிகள் வேண்டியவாறு நடந்துகொள்ளவும், குறித்த செயல்களைச் செய்துமுடிக்கவும் தேவையான ஆணைக்கணங்களை உருவாக்குவதாகும். பெரும்பாலான சமயங்களில் மூல நிரல்களை வடிக்கும் செயல்முறைக்கு பயன்பாட்டு வரம்பு குறித்த அறிவு, சிறப்பு படிமுறைத் தீர்வுகள், ஏரணம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணத்துவம் தேவை.

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை

சி++ சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் (High Level Programming) மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பியார்னே இசுற்றூத்திரப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சுயசரிதை

பவுல் கார்டினர் ஆல்லென் (Paul Gardner Allen, பிறப்பு சனவரி 21, 1953) அமெரிக்க பெரும்வணிகரும் முதலீட்டாளரும் வள்ளலும் ஆவார். பில் கேட்சுடன் இணைந்து இவர் நிறுவிய மைக்ரோசாப்ட் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். மார்ச்சு 2013 நிலவரப்படி, $15 மில்லியன் செல்வத்திற்கு உரிமையாளராக உலகின் 53வது செல்வமிக்க நபராக மதிப்பிடப்பட்டுள்ளார். தமது பல்வேறு வணிக முயற்சிகளையும் ஈதல் திட்டங்களையும் மேலாள வல்கன் இன்க் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராக உள்ளார். ஆல்லென் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் நிலச்சொத்து நிறுவனங்களிலும் ஊடகம், உள்ளுரை நிறுவனங்களிலும் பல பில்லியன் பணத்தை முதலீடு செய்துள்ளார். மேலும் இரு தொழில்முறை விளையாட்டு அணிகளுக்கு உரிமையாளராக உள்ளார்; என்எஃப்எல்லில் சியாட்டில் சீஹாக்குகள் மற்றும் என்.பி.ஏ.வில் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ். ஆல்லென் ஏப்ரல் 19, 2011 அன்று தமது நீங்காநினைவுகளை ஐடியா மேன்: எ மெமோய்ர் பை தி கோபவுண்டர் அஃப் மைக்ரோசாப்ட் என்ற நூலாக வெளியிட்டார். இதன் சாதாரண பதிப்பு அக்டோபர் 30, 2012இல் வெளியானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படம்

வெண்ணிறத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்.
வெண்ணிறத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்.
உபயம்: Kleiner

அகிலத்துக்கு வணக்கம் நிரல் (சி++-இல் வழங்கப்பட்டுள்ளது) என்பது பொதுவாக ஒரு நிரல்மொழியில் அடிப்படை தொடரியலையும் வளர்ப்புச் சுழலையும் எடுத்துக்காட்டும் பொருட்டு அடிக்கடி உருவாக்கப்படும் மிக எளிமையான நிரலாக்கமாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

பகுப்புகள்

கணினி நிரலாக்கம் பகுப்பு காணப்படவில்லை

Purge