உள்ளடக்கத்துக்குச் செல்

மேலக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலக்கால் (Melakkal) கிராமம், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஊர். மதுரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், சோழவந்தானில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்த ஊராட்சி ஆகும்.

வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால், செழிப்பாகவும், நெல், வாழை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

இங்கிருந்து திருமங்கலம் செல்லும் வழியில், நாகமலை அமைந்துள்ளது. நாகமலையில் புகழ்பெற்ற கணவாய் ஒன்று உள்ளது. அந்த கணவாயில் பிரசித்தி பெற்ற கணவாய் கருப்பண்ண சாமி திருக்கோவில் உள்ளது. குதிரை எடுப்புத் திருவிழா மிக விமரிசையாக இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.

அருகில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி சிறப்பான கல்வி அறிவை கிராமப்புற மாணவர்கள் பெறும் வகையில் உள்ளது. அதற்கு எதிராக லட்சுமி சுப்பிரமணியன் பல் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது.

மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மதுரை மாநகர பூ சந்தையை மல்லிகை , ரோஜா, செவ்வந்தி, சம்மங்கி ,தாமரை ,அல்லி ,செவ்வரளி , மரிக்கொழுந்து போன்றவற்றால் அலங்கரிக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற அருள்மிகு மீீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் , ஊரின் நடுவில் அழகாய் அருள் தரும் காளி அம்மன் கோவில் , அக்ரஹாரத்தில் வெங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. புரட்டாசி திங்களில் கடைசி சனிக்கிழமை வெங்கடாசலபதி உற்சவர் ஊர்வலம் நிகழும்.

இதனையொட்டிய காடுகளில் கடலை, தட்டாம் பயிறு, மொச்சை, உளுந்து, கம்பு மற்றும் சோளம் பயிரிடப்படுகின்றன.

மேலக்காலில் இருந்து மதுரை மாநகருக்கு குடி நீரேற்று நிலையம் ஒன்று உள்ளது.



கள்ளர்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலக்கால்&oldid=3526621" இலிருந்து மீள்விக்கப்பட்டது