மேலக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேலக்கால் (Melakkal) மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஊர். மதுரையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும், சோழவந்தானில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்த ஊராட்சி ஆகும். வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால், செழிப்பாகவும், நெல், வாழை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கிருந்து திருமங்கலம் செல்லும் வழியில், நாகமலை அமைந்துள்ளது. இதனையொட்டிய காடுகளில் கடலை, தட்டாம் பயிறு, மொச்சை, உளுந்து, கம்பு மற்றும் சோளம் பயிரிடப்படுகின்றன. மேலக்காலில் இருந்து மதுரை மாநகருக்கு குடி நீரேற்று நிலையம் ஒன்று உள்ளது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

பின்னாளில் இந்து மதத்தின் தீண்டாமை கொடுமையினால் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். இவரை பின்பற்றி பலரும் மேலக்காலில் மதம் மாறியுள்ளனர். இவர் 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இன்றைக்கு மேலக்காலில் பல மாணவர்கள் படித்து துபாய், இசுரேல், அமெரிக்க என்றும், சென்னையில் பன்னாட்டு மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பொறியாளர் என்றும் , அரசு பணிகளிலும் விரிவுரையாளர், மேற்பார்வையாளர் , வழக்கறிஞர் என சென்றதற்கு வீரப்பத்திரன் இட்ட அடித்தளமே கரணியமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தலித் கலை ஆதார மையம்- மதுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலக்கால்&oldid=2359711" இருந்து மீள்விக்கப்பட்டது