உள்ளடக்கத்துக்குச் செல்

முக்குவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்குவர்
வகைப்பாடுமீனவர்
மதங்கள்இந்து, கிறிஸ்தவம், இசுலாம்
மொழிகள்தமிழ், மலையாளம்
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, இலங்கை
தொடர்புடைய குழுக்கள்தமிழர், மலையாளி

முக்குவர் (Mukkuvar) எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கை கரையோரப் பகுதிகளில் காணப்படும் மீனவ சமூகத்தினர் ஆவர். இச்சமூகத்தினர் இந்தியத் தீவான இலட்சத்தீவுகளிலும் காணப்படுகின்றனர்.

இவர்கள் இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் பெரும் நிலக்கிழார்களாகவும், மத்திய காலத்தில் கூலிப்படையாகவும் செயல்பட்டனர்.[1]

சொற்பிறப்பு

[தொகு]

இச்சமூகத்தின் பெயர் பல சொற்பிறப்பியல் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒன்றின் படி முக்குவர் என்பது தமிழ் வார்த்தையான முக்கு (முனை அல்லது மூலையில்) என்று பொருள் மற்றும் ஆர் (மக்கள்) என்ற பின்னொட்டிலிருந்து பெறப்பட்டது. ஆகவே இந்த சொல் "நிலப்பரப்பின் நுனியிலிருந்து வந்தவர்களை" குறிக்கிறது.[2] மற்றொரு கோட்பாடு படி, முக்குவன் (ஒருமை வடிவம்) என்பது திராவிட வார்த்தையான முழுகுவிலிருந்து பெறப்பட்ட "மூழ்காளர்" (மூழ்குவது அல்லது முழுக்குவது) என்று பொருள்.[3] இச்சமூகத்தினர் குகான்குலம், முர்குகன் மற்றும் முக்கியார் என பிறபெயர்களையும் பயன்படுத்துகின்றனர்.[4][5] இவர்களின் பிற பெயர்களான குகான்குலம் (குகன் குலம்) மற்றும் முர்குகன் (முதன்மையாக குகன்) என்பவை அயோத்தியிலிருந்து, கங்கையின் குறுக்கே இந்து கடவுளான ராமரை ஏற்றிச் சென்ற கடற்படையினரான குகனைப் பற்றிய இலக்கியக் குறிப்புகள் ஆகும்.[1]

மூலம்

[தொகு]

வரலாற்றில் சிலர், இவர்கள் தமிழ்நாட்டு கரையோரங்களில் இருந்து கேரளாவிற்கும் இலட்சத்தீவுகளுக்கும் குடியேறினர் என நம்புகின்றனர். இவர்கள் இலங்கைக்குக் குடியேறி, பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி கேரளாவின் தென்மேற்குக் கரையோரங்களில் குடியேறியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 McGilvray, Dennis B. (1982). Caste Ideology and Interaction. Cambridge University Press. p. 59, 60, 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-24145-8.
  2. Suryanarayan, V. (2005). Conflict Over Fisheries in the Palk Bay Region. Lancer Publishers. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170622420.
  3. Colombo, Royal Asiatic Society of Great Britain and Ireland Ceylon Branch (1967). Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society. Colombo Apothecaries Company. p. 42.
  4. McGilvray, Dennis B. (2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka. Duke University Press. p. 60, 61, 64, 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0822389187.
  5. Holmes, Walter Robert (1980). Jaffna, Sri Lanka 1980. Christian Institute for the Study of Religion and Society of Jaffna College. p. 219.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குவர்&oldid=4179301" இலிருந்து மீள்விக்கப்பட்டது