உள்ளடக்கத்துக்குச் செல்

மால்வேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்வேசியே (மால்வேசியே)
Malva parviflora
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malvales
குடும்பம்:
மால்வேசியே (மால்வேசியே)

திறனாய்வாளர்: AntoineLaurentdeJussieu
துணைக்குடும்பங்கள்
  1. Bombacoideae
  2. Brownlowioideae
  3. Byttnerioideae
  4. Dombeyoideae
  5. Grewioideae
  6. Helicteroideae
  7. Malvoideae
  8. Sterculioideae
  9. Tilioideae

மால்வேசியே என்பது (தாவர வகைப்பாடு : Malvaceae; ஆங்கிலம்:mallows) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 200 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 2,300 இனங்களும் உள்ளன.[1] உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும். வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 22 பேரினங்களும். 125 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளது. தமிழில் இதன் பெயரை பருத்திக் குடும்பம் எனலாம்.

வளரியல்பு

[தொகு]

ஓராண்டு சிறு செடிகள் (எ,கா, மால்வா சில்வெஸ்ட்ரிஸ்) அல்லது பல ஆண்டு புதர் செடிகள் (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) அல்லது மரங்கள் (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா), இக்குடும்பத் தாவரங்களில் வழவழப்பான மியூசிலேஜ் நீர்மம் காணப்படும், நட்சத்திர வடிவ மயிர் வளரிகள், தாவரத்தின்இளம் உறுப்புகளின் மீது காணப்படுகின்றன.நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையுடையது. நட்சத்திர வடிவ ரோமவளரிகளால்,இளம் தண்டு மூடிக் காணப்படும். இதன் வேர்,ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.

இலையமைப்பு

[தொகு]

இலைகள், இலைக்காம்புடையது. தனி இலை. முழுமையானது (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா) அல்லது அங்கை வடிவ மடல்களையுடையது. (எ,கா) காஸிபியம் ஆர்போரியம்) மாற்றியலையமைவு. இலையடி செதிலுடையது. விளிம்பு பற்கள் போன்றது (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) மற்றும் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.

ஊடகங்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Judd & al.
  • Hibiscus kokio ssp. kokio என்பதைக் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மால்வேசியே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வேசியே&oldid=3913883" இலிருந்து மீள்விக்கப்பட்டது