மணலிக்கரை
கோத நல்லூர் (மணலிக்கரை) | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°17′06″N 77°18′36″E / 8.285°N 77.31°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழிகள் | |
• பேசுவது | மலையாளம்/ தமிழ் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629164 |
தொலைபேசி இணைப்பு எண் | 04651 |
அருகிலுள்ள நகரம் | நாகர்கோயில் |
சட்டமன்றத் தொகுதி | பத்மநாபபுரம் |
மணலிக்கரை (Manalikkara) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இது முன்னாளில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. மணலிக்கரை கிராமம் கோதநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இது பத்மநாபபுரம் பகுதியின் கீழ் வருகிறது.[1] தற்போது இக்கிராமம் வழிக்கலம்பாடு என்று வருவாய்துறையினரால் அழைக்கப்படுகிறது. இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது இதனை மணலிக்கரா என மலையாளத்தில் அழைத்துள்ளனர். ஆனால் 1956 ல் மாநிலங்கள் மறுசீரமைப்பிற்குப் பிறகு வழிக்கலம்பாடு என்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. இங்கு மலையாளம் பேசும் மக்களே அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள கிருஷ்ண சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றது. சிறீகைலாசர்கோவில் முட்டக்காடு ஆறாவது சிவாலயமான பன்னிப்பாகம் சிவன் கோவில் ஆகியவை இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. உலக பாரம்பரிய மையமும் மற்றும் திருவிதாங்கூரின் முதல் தலைநகரமுமான பத்மநாபபுரம் நகரம் மற்றும் உலகப் புகழ் பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் மணலிக்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இந்த இடம் கிபி 1235 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. வேநாடு மன்னன் வீரரவி கேரள வர்மாவின் ஆட்சியின் போது மணலிக்கரை ஆழ்வார் கோயிலின் முன் உள்ள தூணில் வரிவிதிப்பு பற்றிய கல்வெட்டு எழுதப்பட்டது.[2][3] கி.பி 1610 இல் கல்குளத்தில் உள்ள திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கிளைகளில் ஒன்றாக மணலிக்கரை செல்வாக்கு பெற்றுள்ளது. வேநாட்டைச் சேர்ந்த ராஜா ஸ்ரீ இளைய ராம வர்மா கல்குளத்தில் உள்ள மணலிக்கரைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மணலிக்கரை மடம் அல்லது மணலிக்கரா கல்பக மங்கலத்து ( கல்பமங்கலத்து மடம்) என்பது மணலிக்கரையில் உள்ள மிகப் பழமையான கட்டிடம் ஆகும். இது பிராமணர்களின் மடாலயமாக இருந்துள்ளது. மணலிக்கரையில் வாழ்ந்த பிராமண அறிஞர்கள் தாந்த்ரீக சடங்குகள், வேதம் மற்றும் இலக்கியங்களில் தங்கள் நிபுணத்துவத்தை நிரூபித்துள்ளனர். கல்குளத்தில் பல கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றினர்.[4]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]எழுத்தாளரும் மற்றும் கவிஞருமான கேசவரு வாசுதேவரு என்கிற கே.வி. மணலிக்கரை இந்த ஊரில் வாழ்ந்தவர். சாஸ்த்ரேய பூதிகவதா ரேகா[5] ராகுல் சாங்க்ரித்யந்தே தர்ஷன ரேகா, சமுகிய ரேகா மற்றும் விஸ்வரேகா ஆகியன சமசுகிருதத்திலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். மாக்சிம் கார்க்கியின் தாய் என்ற புதினத்தையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.[6] 1.5 செ.மீ நீளமும் 1 செ.மீ அகலமும் கொண்ட உலகின் இரண்டாவது சிறிய புத்தகமான "ரசரசிகா" [7]என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். ஒவ்வொரு வரியிலும் 5 எழுத்துகளை கொண்ட இதனை லென்ஸ் மூலம் மட்டுமே படிக்க முடியும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Govt of Tamil Nadu. "Kanyakumari District". Archived from the original on 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
- ↑ AIYA, V. NAGAM (1906). Travancore State Manual. Digitally published by Victoria Institutions. p. 278. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- ↑ Swami Parameshwaranand (2001). Encyclopaedia Dictionary of Puranas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8176252263.
- ↑ Vivekananda Kendra Patrika. Temple India page 43 (PDF).
- ↑ K V Manalikkara. Sasthreeya Bhouthikavadha Rekha.
- ↑ Maxim Gorki. "Mother". Translated by K V Manalikkara. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780000106025.
- ↑ K V Manalikara. Rasarasika. Translated by K V Manalikkara.
- ↑ Indian Express News (6 April 1996). Booking a place in history in a tiny way.
S. N. Sadasivan (2006). A Social History of India, p. 138. Penguin Books, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140289712.
வெளி இணைப்புகள்
[தொகு]- George, K.M. (1972). Western Influence on Malayalam Language and Literature. Sahitya Akademi. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0413-3.
- Bibliographic Survey of Indian Manuscripts Catalogues-(page 270-271, sl no 0999, Findings by Ganapati Sastri from Manalikkara Matham )