பாஸர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'பாஸர் (ஸம்ஸ்க்ருதம்: भासः) என்பவர் மிகவும் பிரபலமான சமஸ்கிருத நாடக ஆசிரியர் ஆவார். இவரது காலம் காளிதாசனுக்கும் முற்பட்டதாகும்.[1] அவரது பல ஆக்கங்கள் கிடைக்கப்பெறவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையெழுத்துப் பிரதிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. காவ்யாமீம்சா போன்ற பிற படைப்புகளில் பொ.வ 880-920 காலகட்டத்தில் பாஸர் பற்றி குறிப்பிடப்பட்டதிலிருந்து மட்டுமே இவர் அறியப்பட்டார்.

பிறப்பு[தொகு]

இவரது பிறப்பு பற்றி சரியான தகவல்கள் இல்லை. பொதுசகாப்தம் மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு என கணிக்கின்றனர்.[2][3][4] ஐந்தாம் நூற்றாண்டின் காளிதாசன் மொழிக்கு நெருக்கமாக பாசாவின் மொழி இருப்பதாகவும் கருதுகின்றனர்.[5] இவரது படைப்புகள் நாடக சாஸ்திரத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதில்லை.[6] இதனால் இதை பழங்காலத்தியது என கணிக்கின்றனர். மேலும் இவரது நாடகங்கள் நிகழ்த்தப்படும் போது மேடையில் அதிக வன்முறையைக் கையாளுகின்றனர். இவை நாடக சாஸ்திரத்திற்கு முரணானவை ஆகும். இருப்பினும், இந்த உண்மைகள் மட்டுமே காலவரிசையை உறுதிப்படுத்தாது. எனவே பல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவரது காலத்தினை மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு என ஏற்றுக்கொள்கின்றனர்.[7]

கண்டுபிடிக்கபட்ட நாடகங்கள்[தொகு]

மைசூர் தொல்பொருள்துறையினைச் சார்ந்த பண்டிட் ஆனந்தாழ்வார் பாசாவின் சொப்னவசவதத்தா எனும் நாடகத்தினைக் கண்டுபிடித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து மஹோபாத்தியாய் கணபதி சாஸ்திரி 13 சமஸ்கிருத நாடகங்களை கண்டுபிடித்தார். முதல் கண்டுபிடிப்பில் பத்து முழுமையான கையெழுத்துப் பிரதிகளையும் ( ஸ்வப்னவசவத்தத்தா, பிரதிய யாகந்தாராயணம், பஞ்சராத்ரா, சாருதத்தா, தூதகதோட்காச்சா, அவிமாரகா, பாலாச்சரிதா, மத்தியமாவாயோகா, கர்ணபாரா மற்றும் உருபங்கா ) மற்றும் ஒன்றின் துண்டுகளையும் கிடைத்தது. பின்னர், அவர் மேலும் இரண்டு நாடகங்களைக் கண்டுபிடித்தார். அவை அபிஷேககா மற்றும் பிரதிமனதகா ஆகும். இறுதியாக, அவர் தூதவாக்யத்தின் கையெழுத்துப் பிரதியைக் கண்டுபிடித்தார். எனவே, பாசா எழுதியதாக நம்பப்படும் மொத்தம் பதின்மூன்று நாடகங்களைக் கண்டுபிடிதுள்ளார். மற்ற செவ்வியல் நாடகங்களைப் போலல்லாமல் ஸ்வப்னவசவத்தத்தா தவிர்த்து இவற்றில் எதிலுமே ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த நாடகங்களில் பயன்படுத்தப்படும் எழுத்து மற்றும் நுட்பங்களை ஒப்பிட்டு, ஸ்வப்னவசவத்தத்தா என்பது பாசாவின் படைப்பு என்ற அறிவின் அடிப்படையில் பாச்காவின் நாடகங்கள் என வகைப்படுத்தப்பட்டன.

நாடகங்கள்[தொகு]

பண்டைய இந்தியாவில் அறியப்பட்ட சோகமான சமஸ்கிருத நாடகங்கள்தான் உரு-பங்கா மற்றும் கர்ணபாரம் ஆகும். மகாபாரதத்தில் துரியோதனன் மோசமானவனாக இருந்தாலும் உரு-பங்கா நாடகத்தில் அவர் நல்லபடியாகவே சித்திகரிக்கப்பட்டார். அதுபோலவே கர்ணபாரத்தில் கர்ணனின் மேன்மைகளும் அவரது மன எண்ணங்களுமே சித்திகரிக்கப்பட்டிருக்கும். மகாபாரதத்தின் மற்றொரு காவிய கதாபாத்திரமான கர்ணனின் சோகமான முடிவின் முன்னறிவிப்புகளுடன் கர்ணபாராம் முடிகிறது. இந்தியாவில் ஆரம்பகால நாடகங்கள், நாட்டிய சாஸ்திரத்தால் ஈர்க்கப்பட்டு, சோகமான முடிவுகளை கொண்டிருப்பதை பொருத்தமற்றதாகக் கருதின.[8]

பிற்கால நாடக எழுத்தாளர்களுடன் இவரை ஒப்பிடும்போது இவரது நாடகங்கள் பொதுவாக சிறியவை. அவற்றில் பெரும்பாலானவை இந்திய காவியங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றின் கருப்பொருளை கொண்டவை. அவர் காவியத்தின் நாயகனின் பக்கத்தில் உறுதியாக இருந்தாலும் எதிரிகளை மிகுந்த அனுதாபத்துடன் சித்தரித்தார். இதை அடைய அவர் கதையில் நிறைய சுதந்திரங்களை எடுத்துக்கொள்கிறார். பிரதிமா எனும் நடகத்தில், ராமாயணத்தில் நடந்த சோகமான சம்பவங்களுக்குப் பொறுப்பான கைகேயி அனைவரின் சகிப்புத்தன்மையையும் சகித்துக்கொள்வதாகக் காட்டுகிறார்[9] இதனால் அந்நாடகம் ஒரு உன்னதமான முடிவு அடைகிறது.

இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்[தொகு]

பிரதிமா - நாடகம் : சிலைகள்

யாக்ஞம் - பாலம்[10]

அபிஷேகம் - நாடகம் : முடிசூட்டு விழா

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள்[தொகு]

பஞ்ச்-ராத்ரா : ஐந்து இரவுகள் மத்யமா-வயோகா : நடுத்தர ஒன்று துத்தா-கட்டோட்காச்சா : தூதராக கட்டோட்காச்சா துத்தா-வாக்யா : தூதரின் செய்தி உருபங்கா : தொடை உடைந்தது கர்ணபாரம் : கர்ணனின் சுமை ஹரிவம்ச அல்லது பாலா-சரிதா : ஹரியின் வம்சம் அல்லது குழந்தைப் பருவத்தின் கதை

இவரின் சமஸ்கிருத நாடகங்களான துத்தா-வாக்யா மற்றும் பாலா - சரிதா ஆகியவை கிருஷ்ணரை மைய கதாபாத்திரமாகக் கொண்டவை.

அவரது மற்ற நாடகங்கள் காவியங்களை அடிப்படையாகக் கொண்டவைய அல்ல. விசித்திரக் கதையை கொண்ட அவிமரகா பின்னர் தி கிளவுட் டோர் (1994)[11] எனும் திரைப்படமாக மணி கவுல் என்பவரால் உருவாக்கப்பட்டது. தரித்திர சாருதத்தா எனும் நாடகம் ஏழை விலைமகளின் கதையைச் சொல்கிறது. இதை திரைப்படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது பின்னர் முடிவடையவில்லை. சுவாரஸ்யமான சுதர்கா எனும் நாடகம் கிரீஷ் கர்னாட் மூலம் மிர்ச்சகடிகா (Mrichakatika 1984) எனும் திரைப்படமாகியது.

அவருடைய மிகவும் புகழ் பெற்ற நாடகமான பிரதிஞ்ஞ யெளகந்தார்யனா ஒரு அரசர் வசவதத்த இளவரசியை (அவனது முதல் மனைவி) எவ்வாறு மணந்தான் என்ற கதையைச் சொல்கிறது.[12] இரண்டாவது நாடகம் சொப்னவசவதத்தா உதயனா மன்னன், தனது விசுவாசமான மந்திரி காண்டாராயணனின் உதவியுடன் மகத மன்னனின் மகள் பத்மாவதி இளவரசியை திருமணம் செய்து கொண்டு எதிரியான ராஜாவை தனது கூட்டாளியாக மாற்றினார் என்பதாகும்.

இவரது நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் உரு-பங்கா மற்றும் கர்ணபாராம் ஆகியவை நவீன சுவைகளுடன் இருந்த காரணத்தால் பிரபலமாகி பிற மொழி மொழிபெயர்ப்பிலும் சமஸ்கிருதத்திலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டன.

இவரது அபிஷேக - நாடகம், கூடியாட்டம், பிரதிஞ்ஞ யெளகந்தார்யனா (Pratijna-Yaugandharayana) ஆகிய நாடகங்கள் இப்போதும் நிகழ்த்தப்படுகின்றன.

நவீன மறுமலர்ச்சி[தொகு]

தேசிய நாடகப் பள்ளியின் பேராசிரியர் ஷாந்தா காந்தி பாஷாவின் நாடகத்தினை நவீன காலத்தில் முதலில் மேடையில் நிகழ்த்தியவர் ஆவார். மத்யமாவ்யயோகம் (Madhyamavyayoga) மற்றும் உருபங்கா ஆகிய நாடகங்களை இவர் மேடையேற்றினார். காவலம் நாராயண பணிக்கர் மற்றும் ரத்தன் தியாம் ஆகியோர் மணிப்பூரி நடனத்தின் மூலம் கர்ணபாரம் நாடகத்தினை மேடையேற்றினர்.[13][14] வாமன் கேந்திரா எனும் நாடக ஆசிரியர் மத்யமாவ்யயோகம் நாடகத்தினை ஆங்கிலத்தில் ஓ மை லவ் எனும் பெயரிலும், இந்தியில் மொஹே பியா எனும் பெயரிலும் மற்றும் மராத்தியில் பியா பவாரி எனும் பெயரிலும் நிகழ்த்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. C. R. Devadhar (1966) "Malavikagnimitram of Kalidasa", p.3
 2. Keith, Arthur Berriedale (1992), The Sanskrit Drama in Its Origin, Development, Theory & Practice, Motilal Banarsidass, pp. 95–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0977-2
 3. Kroeber, Alfred Louis (1944), Configurations of Culture Growth, University of California Press, pp. 419–, GGKEY:Q5N845X8FFF
 4. Goodwin, Robert E. (1998), The Playworld of Sanskrit Drama, Motilal Banarsidass, p. xviii, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1589-6
 5. Winternitz, Maurice; Winternitz, Moriz (1985), History of Indian Literature, Motilal Banarsidass, pp. 204–205, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0056-4
 6. V. Venkatachalam (1986) "Bhāsa", p.14
 7. Īndū Shekhar (1 May 1978). Sanskrit Drama: Its Origin and Decline. Brill Archive. pp. 44–. GGKEY:3TX00B7LD6T.
 8. K. P. A. Menon (1996) "Complete plays of Bhāsa", p.28
 9. Govind Keshav Bhat(1968) "Bhāsa-studies", p.47
 10. "The Yajnaphala Of Mahakavi Bhasa".
 11. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாஸர்
 12. Ahlborn, Matthias (2006) Pratijñāyaugandharāyaṇa : digitalisierte Textkonstitution, Übersetzung und Annotierung, Universität Würzburg, Dissertation (German translation)
 13. Dharwadker, p. 167
 14. Dharwadker, p. 105
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸர்&oldid=3455875" இலிருந்து மீள்விக்கப்பட்டது