பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்களின் பட்டியல்
பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்கள் (மலாய்:Residen British di Perak; ஆங்கிலம்:British Residents of Malay State of Perak) என்பது 1874-ஆம் ஆண்டில் இருந்து 1951-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பிரித்தானிய முதல்வர்களாகப் பதவி வகித்தவர்களைக் குறிப்பிடுவதாகும்.
பிரித்தானிய முதல்வர் (British Resident) பதவி ஒரு நிர்வாகப் பதவியாக இருந்தது. 1974 பங்கோர் உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, மலாய் பழக்கவழக்கங்கள் மற்றும் மதத்தைத் தவிர, பேராக் மாநில நிர்வாகத்தில் உள்ள அனைத்துச் செயல்பாடுகளுக்கும்; பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (British Residents of Perak) பொறுப்பு வகித்தார். அத்துடன் பேராக் சுல்தானின் ஆலோசகராகவும் சேவை செய்தார்.
பொது
[தொகு]அப்போதைய பிரித்தானிய ரெசிடென்ட் (British Resident) பதவி என்பது இன்றைய மந்திரி பெசார் பதவிக்கு இணையானதாகும். அவர் பேராக் மாநில நிர்வாக மன்றத்தின் தலைவராக இருந்தார்; அதே வேளையில் பேராக் மாநிலத்தின் சுல்தான்; பேராக் மாநிலப் பேரவையின் தலைவராக இருந்தார். பிரித்தானிய முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் தைப்பிங் முதல்வர் குன்றில் (Residency Hill) இருந்தது. மற்ற இல்லங்கள் கோலாகங்சார் மற்றும் ஈப்போவில் இருந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரித்தானிய முதல்வர் பதவி என்பது பிரித்தானிய ஆலோசகர் பதவி (British Adviser) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியில், மலாயா சுதந்திரம் அடைந்ததும், பிரித்தானிய ஆலோசகர் பதவி நீக்கப்பட்டது.
பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்களின் பட்டியல் (1874 –1951)
[தொகு]பிரித்தானிய முதல்வர் | தோற்றம் | பதவியேற்பு | பதவி முடிவு |
---|---|---|---|
1. ஜேம்ஸ் பர்ச் (James W.W. Birch) |
4 நவம்பர் 1874 | 2 நவம்பர் 1875 | |
2. சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham) |
5 நவம்பர் 1875 | மார்ச் 1876 | |
3. ஜேம்ஸ் கத்திரி டேவிட்சன் (James Guthrie Davidson) |
11 ஏப்ரல் 1876 | 31 மார்ச் 1877 | |
4. இயூ லோ (Sir Hugh Low) |
1 ஏப்ரல் 1877 | 31 மே 1889 | |
5. சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham) |
சூன் 1, 1889 | 30 சூன் 1896 | |
6. சர் வில்லியம் திரிச்சர் (Sir William Hood Treacher) |
1 சூலை 1896 | 12 டிசம்பர் 1901 | |
7. சர் ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர் (Sir John Pickersgill Rodger) |
13 டிசம்பர் 1901 | 9 பிப்ரவரி 1904 | |
8. சர் எர்னஸ்ட் உட்போர்ட் பர்ச் (Sir Ernest Woodford Birch) |
10 பிப்ரவரி 1904 | 5 மார்ச் 1911 | |
9. சர் என்றி கான்வே பெல்பீல்ட் (Sir Henry Conway Belfield) |
6 மார்ச் 1911 | 15 டிசம்பர் 1911 | |
10. ஆலிவர் மார்க்ஸ் (Oliver Marks) |
15 டிசம்பர் 1911 | 9 ஆகஸ்டு 1912 | |
11. வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம் (William James Parke Hume) |
9 ஆகஸ்டு 1912 | 12 ஆகஸ்டு 1912 | |
12. சர் ரெஜினோல்ட் ஜார்ஜ் வாட்சன் (Sir Reginald George Watson) |
12 ஆகஸ்டு 1912 | 17 செப்டம்பர் 1919 | |
13. சர் வில்லியம் ஜார்ஜ் மெக்சுவெல் (Sir William George Maxwell) |
17 செப்டம்பர் 1919 | 12 செப்டம்பர் 1920 | |
14. வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம் (William James Parke Hume) |
29 சூன் 1920 | 13 சூலை 1921 | |
15. சர் சிசில் வில்லியம் சேசு பார் (Sir Cecil William Chase Parr) |
14 சூலை 1921 | 20 டிசம்பர் 1925 | |
16. ஓசுவால்ட் பிரான்சிஸ் ஜெரார்ட் சுடோனர் (Oswald Francis Gerard Stonor) |
20 டிசம்பர் 1925 | 6 சூன் 1927 | |
17. என்றி வாக்சுடாப் தாம்சன் (Henry Wagstaffe Thompson) |
6 சூன் 1927 | 1929 | |
18. சார்லஸ் வால்டர் எமில்டன் காக்ரேன் (Charles Walter Hamilton Cochrane) |
1929 | 1930 | |
19. பெர்ட்ராம் வால்டர் எல்லெசு (Bertram Walter Elles) |
1931 | 1932 | |
20. சர் செப்ரி எட்மண்ட் கேட்டர் (Sir Geoffrey Edmund Cator) |
1933 | 1939 | |
21. மார்கஸ் ரெக்ஸ் (Marcus Rex) |
1939 | 1941 | |
22. ஆர்தர் வின்சென்ட் ஆசுடன் (Arthur Vincent Aston) |
1946 | 1948 | |
23. ஜேம்ஸ் இன்னசு மில்லர் (James Innes Miller) |
1948 | 1951 | |
24. எட்வின் சிரில் கெடெஸ் பாரெட் (Edwin Cyril Geddes Barrett) |
1953 | 1954 | |
25. டத்தோ இயன் பிளெலோக் (Dato’ Ian Blelloch) |
1951 | 1956 |