பெரும் பசுமைச் சுவர் (ஆப்பிரிக்கா)
பெரும் பசுஞ்சுவர் முன்முயற்சியின் சின்னம், பங்கேற்கும் நாடுகளும், கவனம் செலுத்தும் பகுதியின் பிரதிநிதித்துவத்தையும் காட்டுகிறது | |
சுருக்கம் | Great Green Wall (GGW) |
---|---|
உருவாக்கம் | 2005 2010 (Agency) |
நிறுவனர் | AU |
நோக்கம் | பாலைவனமாதலை எதிர்த்து, மண் வளத்தை மேம்படுத்துதல், நிலையான நிலப் பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல். |
தலைமையகம் |
|
வலைத்தளம் | grandemurailleverte |
பெரும் பசுமைச் சுவர் (Great Green Wall) அல்லது சகாராவினதும் சாகேலினதும் பெரும் பசுஞ் சுவர் (Great Green Wall of the Sahara and the Sahel) என்பது 2007 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க ஒன்றியம், சாகேல் பகுதியில் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கும், சகாராப் பாலைவனத்தின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கும், சீபூத்தீ, சீபூத்ட்தீயில் இருந்து செனிகலின் டக்கார் வரையிலான முழு சாகேல் பகுதியும் மரங்களாலான சுவர்களை நடுவதன் மூலம் தொடக்கத்தில் கருதப்பட்டது. "சுவரின்" உண்மையான அளவுகள் 15 கிமீ (9 மைல்) அகலம், 7,775 கிமீ (4,831 மைல்) நீளம் கொண்டதாக இருக்க வேண்டும், ஆனால் இந்தத் திட்டம் வடக்கு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. நீர் சேகரிப்பு நுட்பங்கள், பசுமைப் பாதுகாப்பு, உள்நாட்டு நிலப் பயன்பாட்டு நுட்பங்களை மேம்படுத்துதல், வட ஆபிரிக்கா முழுவதும் பசுமையான உற்பத்தி நிலப்பரப்புகளின் பல்லடுக்குகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.[1] பின்னர் அது மழைப்பொழிவு மாறுபாடுகளின் அடிப்படையில் பாலைவன எல்லைகள் மாறும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டது.[2]
100 மில்லியன் எக்டேர் (250 மில்லியன் ஏக்கர்) பாழடைந்த நிலத்தை மீட்டெடுப்பதும், 250 மில்லியன் தொன் கார்பனீராக்சைடைக் கைப்பற்றுவதும், 2030-இற்குள் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் திட்டத்தின் தற்போதைய இலக்கு ஆகும்.
கிராமப்புறங்களில் இயற்கை வளங்கள் சீரழிவு, வறட்சியின் ஒருங்கிணைந்த விளைவுக்கான பிரதிபலிப்பு ஆகியனவே இத்திட்டம் ஆகும். காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும், அதற்கேற்றவாறு மாற்றியமைக்கவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சமூகங்களுக்கு உதவ இது முயல்கிறது. சாகேலின் மக்கள்தொகை 2039 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Morrison, Jim. "The "Great Green Wall" Didn't Stop Desertification, but it Evolved Into Something That Might". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ Raman, Spoorthy (2023-08-03). "Progress is slow on Africa's Great Green Wall, but some bright spots bloom". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ Puiu, Tibi (2019-04-03). "More than 20 African countries are planting a 8,027-km-long 'Great Green Wall'". ZME Science (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.
- Grande Muraille Verte. "Convention creating the Pan-African Agency for the Great Green Wall" (PDF). www.grandemurailleverte.org.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- FAO page on the Great Green Wall
- The African Great Green Wall project-What advice can scientists provide? பரணிடப்பட்டது 2017-10-14 at the வந்தவழி இயந்திரம் French Scientific Committee on Desertification (CSFD)
- The Great Green Wall of Africa, BBC Newsnight
- Great Green Wall - Africa For Africa, WorldPeaceLab
- Planting in Syer, WorldPeaceLab