பென் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென் தாலுகா (Pen taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் பென் நகரம் ஆகும். இத்தாலுகா பென் எனும் நகராட்சியும், 2 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 169 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பென் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,95,454 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 99,570 மற்றும் பெண்கள் 95,884 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 21884 - 11% ஆகும். சராசரி எழுத்தறிவு 77.9%. ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 4,454 மற்றும் 32,400 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.48, இசுலாமியர்கள் 1.79%, பௌத்தர்கள் 1.75%, சமணர்கள் 0.31%, கிறித்துவர்கள் 0.25% மற்றும் பிறர் 0.42% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_தாலுகா&oldid=3357704" இலிருந்து மீள்விக்கப்பட்டது