புரொவிடன்ஸ் அரங்கம்
புரொவிடன்ஸ் மைதானம் கயானாவில் உள்ள விளையாட்டரங்காகும்.புரொவிடன்ஸ் மைதானம் தெமெராரா ஆற்றின் கிழக்குக் கரையில் தலைநகர் ஜோர்டவுணுக்கு சில கிலோமீட்டர்கள் தெற்கில் அமைந்துள்ளது. இது 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்காக கட்டப்பட்டது. இதுவே கயானாவில் உள்ள பெரிய விளையாட்டரங்காகும். உலகக்கிண்ணப் போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். துடுப்பாட்ட போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட இம்மைதானம் வேறு போட்டிகளுக்காக மாற்றியமைக்கப்பட முடியும். இந்திய அரசின் பொருளாதார உதவியுடன் கயான அரசால் இம்மைதான அமைக்கப்பட்டது. இது சீ.ஆர். நாரயண ராவோ வடிவமைக்கப்பட்டு சாபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகளுக்காக 25,000,000 அமெரிக்க டாலர் செலவளிக்கப்பட்டுள்ளது. 20,000 பார்வையாளருக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
[தொகு]