உள்ளடக்கத்துக்குச் செல்

புரொவிடன்ஸ் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரொவிடன்ஸ் மைதானம்

புரொவிடன்ஸ் மைதானம் கயானாவில் உள்ள விளையாட்டரங்காகும்.புரொவிடன்ஸ் மைதானம் தெமெராரா ஆற்றின் கிழக்குக் கரையில் தலைநகர் ஜோர்டவுணுக்கு சில கிலோமீட்டர்கள் தெற்கில் அமைந்துள்ளது. இது 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளுக்காக கட்டப்பட்டது. இதுவே கயானாவில் உள்ள பெரிய விளையாட்டரங்காகும். உலகக்கிண்ணப் போட்டிகளின் போது இரண்டாம் சுற்றுப்போட்டிகளான "சுப்பர் 8" போட்டிகள் 6 இம்மைதானதில் நடைபெறும். துடுப்பாட்ட போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட இம்மைதானம் வேறு போட்டிகளுக்காக மாற்றியமைக்கப்பட முடியும். இந்திய அரசின் பொருளாதார உதவியுடன் கயான அரசால் இம்மைதான அமைக்கப்பட்டது. இது சீ.ஆர். நாரயண ராவோ வடிவமைக்கப்பட்டு சாபூர்ஜி பலோன்ஜி நிறுவனத்தால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணிகளுக்காக 25,000,000 அமெரிக்க டாலர் செலவளிக்கப்பட்டுள்ளது. 20,000 பார்வையாளருக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]


2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அரங்கங்கள்
கென்சிங்டன் ஓவல் அரங்கம் (பார்படோசு) | குயிண்ஸ் பார்க் அரங்கம் (கிரெனடா) | சபினா பார்க் அரங்கம் (யமேக்கா) | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் (அன்டிகுவா பர்புடா) | புரொவிடன்ஸ் அரங்கம் (கயானா) | வோர்னர் பார்க் அரங்கம் (செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்) | Beausejour அரங்கம் (செயிண்ட். லூசியா) | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் (திரினிடாட் டொபாகோ) 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண சின்னம்

6°45′27.96″N 58°10′40.77″W / 6.7577667°N 58.1779917°W / 6.7577667; -58.1779917

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொவிடன்ஸ்_அரங்கம்&oldid=2580545" இலிருந்து மீள்விக்கப்பட்டது