பிலிப்பீன்சு நீலச் சிட்டு
பிலிப்பீன்சு நீலச் சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஐரேனிடே
|
பேரினம்: | ஐரினா
|
இனம்: | ஐ. சையனோகேசுட்ரா
|
இருசொற் பெயரீடு | |
ஐரினா சையனோகேசுட்ரா விகோர்சு, 1831 |
பிலிப்பீன்சு நீலச் சிட்டு (Philippine fairy-bluebird) என்பது ஐரினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் உள்ள லூசோன், மிண்டனாவோ, சமர் மற்றும் போகொல் தீவுகளில் காணப்படுகிறது.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரநில மலைக் காடுகள் ஆகும். பிலிப்பீன்சு கொண்டலாத்தி, நீலத் தலை விசிறிவால் மற்றும் பிற வனப் பறவைகளுடன் கலப்பு மந்தைகளிலும் இவை காணப்படுகின்றன. வாழ்விட இழப்பு மற்றும் உணவு மற்றும் செல்லப்பிராணி வர்த்தகம் ஆகிய இரண்டிற்காகவும் வேட்டையாடுவதால் இது அச்சுறுத்தப்படுகிறது.
புராணங்களில்
[தொகு]இந்தச் சிற்றினம் தாகலாக் மக்களுக்குப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது திக்மானுகன் சகுனமாகக் கருதப்படுகிறது. இது பண்டைய காலனித்துவ, பூர்வீக தாகலாக் மதத்தின் உச்சப் படைப்பாளர் கடவுளான பதாலாவின் தூதராக நம்பப்படுகிறது.
தெற்கு லுசோனில் உள்ள பழைய தாகலாக் புராணங்களில், பிலிப்பீன்சு நீலச் சிட்டு திக்மமானுகன் சகுனப் பறவைகள் என்று அழைக்கப்பட்டன. புராணத்தின் படி, ஒரு மூங்கில் தண்டைத் திறந்து ஒரு திக்ம்மனுகன் பறவையை உடைக்குமாறு பதாலா உத்தரவிட்டார். இதிலிருந்து முதல் மனிதர்களான மலகாக்கள் மற்றும் மகந்தா தோன்றினர்.
மற்றொரு புராண நம்பிக்கையின் படி பதாலா, திக்ம்மனுகன் பறவையை (சில நேரங்களில் பாம்பு அல்லது பல்லியின் வடிவத்தில்) மனிதர்கள் பயணத்தைத் தொடரவோ அல்லது நிறுத்தவோ தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவ அனுப்புகிறார். ஒரு பயணி வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாகச் செல்லும் ஒரு திக்ம்மமானுகன் சகுனத்தைப் பார்த்தால், பயணத்தைத் தொட "லாபே" அல்லது தெய்வீக ஒப்புதல் பெறுவதாகும். திக்ம்மமானுகன் சகுனம் இடமிருந்து வலமாகக் கடந்து சென்றால், பயணி முன்னேறக்கூடாது. இதை மறுத்து பயணத்தினைத் தொடரும் போது அப்பயணி ஒருபோதும் திரும்பி வர மாட்டார். அனைத்து திக்மானுகன் சகுனப் பறவைகளும் கடவுளுக்குப் புனிதமான புராணப் படாலா மலையில் வாழ்கின்றன என்று கூறப்படுகிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Irena cyanogastra". IUCN Red List of Threatened Species 2016: e.T22704936A93991677. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22704936A93991677.en. https://www.iucnredlist.org/species/22704936/93991677. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ https://pinoy-culture.com/the-tigmamanukan-mythology-from-the-philippines/