உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்பன்

ஆள்கூறுகள்: 9°16′36″N 79°13′34″E / 9.2767109999999°N 79.22623799999°E / 9.2767109999999; 79.22623799999
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பன்
—  இரண்டாம் நிலை ஊராட்சி  —
பாம்பன்
அமைவிடம்: பாம்பன், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 9°16′36″N 79°13′34″E / 9.2767109999999°N 79.22623799999°E / 9.2767109999999; 79.22623799999
நாடு  இந்தியா
பகுதி பாண்டிய நாடு
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் இராமேசுவரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்
மக்கள் தொகை 37,819 (2011)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பாம்பன் என்ற ஊர் பாக் நீரிணையில் (Palk Strait) அமைந்துள்ள பாம்பன் தீவின் தொடக்கமாக, இராமேஸ்வரம் வட்டத்தின் ஒரு நிர்வாக கிராமமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும். பெரும்பகுதி இந்தியாவையும் இராமேஸ்வரத்தையும் கடல் வழியாக இணைப்பது இங்குள்ள பாம்பன் பாலம் ஆகும்.

பாம்பனில் உள்ள இரு பாலங்களும் ஊரின் நுழைவாயிலில் அதற்கு அழகு சேர்க்கின்றன. பாம்பன் பாலம் பாக் நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் (Mainland) பாம்பன் தீவையுயும் இணைக்கும் ஒரு பாலம் ஆகும். இதுவே இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம் இப்போது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாக உள்ளது (முதலிடத்தில் இருப்பது பாந்திரா-வொர்லி கடல் பாலம்) ஆகும்.

பாம்பன் தீவு தமிழ் நாட்டுக் கரைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகளில் மிகப் பெரியது ஆகும். இவ்வூரில் மீன்பிடித் தொழில் மிக முக்கியமான தொழில் ஆகும்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 படி, மொத்த மக்கள் தொகை 37,819. வீடுகளின் எண்ணிக்கை 8522. இதில் 0-6 வயதுடையோர் எண்ணிக்கை 4,582. எழுத்தறிவு சதவீதம் 74.84. ஆண் பெண் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் என்பதாகும்.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

பாம்பன் தீவு சிறப்பான சாலை மற்றும் தொடருந்து போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் பாம்பன் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தொடருந்து போக்குவரத்தால் இணைக்கப் பெற்றுள்ளது.

ஆன்மிக இடங்கள்

[தொகு]

1) புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், பாம்பன்

2) புனித அந்தோணியார் தேவாலயம், பாம்பன்

3) புனித சவேரியார் தேவாலயம், அக்காள் மடம்

4) பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

5) பள்ளி வாசல், பாம்பன்

கல்வி நிறுவனங்கள்

[தொகு]

1) அரசு தொடக்கப்பள்ளி, பாம்பன்

2) அரசு தொடக்கப்பள்ளி, அக்காள் மடம், பாம்பன்

3) அரசு நடுநிலைப்பள்ளி, தரவைத் தோப்பு, பாம்பன்

4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்

5) பாம்பன் வித்யாலயா பள்ளி, பாம்பன்

6) டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் தொடக்கப்பள்ளி, பாம்பன்

7) புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, பாம்பன்

8) பெரும்தலைவர் காமராஜர் நடுநிலைப்பள்ளி, பாம்பன்

9) விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, பாம்பன்

10) புனித அன்னம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, அக்காள் மடம், பாம்பன்

11) கிாிகனி தொழிற் பயிற்சி மையம், பாம்பன் - மற்றும் பல

சுற்றுலா இடங்கள்

[தொகு]

1) பாம்பன் பாலம்

2) விவேகானந்தர் நினைவு மண்டபம் (குந்துக்கால்)

3) குருசடைத் தீவு

4) பாம்பன் கலங்கரை விளக்கம்

5) குந்துக்கால் கடற்கரை

மேற்கோள்கள்:

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பன்&oldid=3721204" இலிருந்து மீள்விக்கப்பட்டது