பாமுக்கலே
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
சுவர்ச் சிற்ப ஒப்பனைச் சாந்து பூசப்பட்டது போன்ற பாமுக்கலே பஞ்சுக் கோட்டையின் பரந்த காட்சி | |
அலுவல்முறைப் பெயர் | ஹைராபோலிஸ்-பாமுக்கலே |
அமைவிடம் | அனத்தோலியா, டெனிஸ்லி மாகாணம், தென்மேற்கு துருக்கி |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம் and இயற்கைக் களம்: (iii)(iv)(vii) |
உசாத்துணை | 485 |
பதிவு | 1988 (12-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 1,077 எக்டேர் (4.16 சதுர மைல்) |
Website | www |
ஆள்கூறுகள் | 37°55′26″N 29°07′24″E / 37.92389°N 29.12333°E |
துருக்கியில் பாமுக்கலே மற்றும் ஹைரபோலிஸ் அமைவிடம் |
துருக்கியில் பஞ்சுக் கோட்டை என்று பொருள்படும் பாமுக்கலே, தென்மேற்கு துருக்கியில் உள்ள டெனிஸ்லி மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கை தளமாகும். அனல் நீரூற்று நீரின் பாய்வினால் எஞ்சியிருக்கும் கார்பனேட் கனிமத்திற்கு இப்பகுதி பிரபலமானது.[1]இது துருக்கியின் உள் ஏஜியன் கடற்கரை பகுதியில், மெண்டரஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது ஆண்டின் பெரும்பகுதிக்கு மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது.
பண்டைய கிரேக்க நகரமான ஹைராபோலிஸ் டிராவெர்டைன் உருவாக்கத்தின் மேல் பாமுக்கலே அமைந்துள்ளது. இது மொத்தம் சுமார் 2,700 மீட்டர் (8,860 அடி) நீளம், 600 மீட்டர் (1,970 அடி) அகலம் மற்றும் 160 மீட்டர் (525 அடி) உயரம் கொண்டது. 20 கிமீ நீள்ம் கொண்ட டெனிஸ்லி நகரப் பள்ளத்தாக்கின் எதிர்புறத்தில் உள்ள மலைகளிலிருந்து பாமுக்கலே பஞ்சுக் கோட்டைய பார்க்க முடியும். பாமுக்கலே (பஞ்சுக் கோட்டை) அல்லது பண்டைய ஹைராபோலிஸ் (புனித நகரம்) என அழைக்கப்படும் இந்த பகுதி பாரம்பரிய பழங்கால காலத்திலிருந்தே அதன் வெப்ப நீரூற்றுகளுக்காக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. துருக்கிய மொழியில் இதற்கு பளபளக்கும், பனி-வெள்ளை சுண்ணாம்புக் கல்லின் மேற்பரப்பைக் குறிக்கிறது. இது கால்சைட்டு கனிமம் நிறைந்த வெந்நீரூற்றுகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மலைச்சரிவில் மெதுவாகத் துளியும், கனிம வளம் நிறைந்த நீர், கனிம மொட்டை மாடிகளிலிருந்து கீழே உள்ள குளங்களில் குவிந்து விழுகிறது. பல்லாண்டுகளாக உலர விடப்பட்ட பருத்தி (அப்பகுதியின் முக்கிய பயிர்) வடிவங்கள் திடப்படுத்தப்பட்டவை என்று தொன்மக் கதை கூறுகிறது. 1988-இல் யுனெஸ்கோ பாமுக்கலே மற்றும் ஹைராபோலிஸ் ஆகிய இரண்டையும் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டது.[2]
அழகிய வெந்நீர் ஊற்றுக் குளங்களின் ஈர்ப்பு காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.[1] அண்மையில் 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பண்டைய உரோமானியர்களின் ஹைராபோலிஸ் நகர இடிபாடுகளுக்கு மேல் விடுதிகள் கட்டப்பட்டது. இப்பகுதியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டபோது, விடுதிகள் அகற்றப்பட்டு, செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டன. இங்குல் நன்கு பாதுகாக்கப்பட்ட ரோமானிய கட்டிட இடிபாடுகள் மற்றும் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. ஒரு சிறிய நடைபாதை பார்வையாளர்கள் பயன்படுத்த மலை முகப்பில் செல்கிறது, இருப்பினும் டிராவர்டைன் மொட்டை மாடிகள் அனைத்தும் வரம்பற்றவை. சுற்றுலாவின் காரணமாக சேதம், அரிப்பு மற்றும் நீர் மாசுபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைராபோலிஸ் அரங்கம்
[தொகு]பாமுக்கலேவுடன் இணைந்து ஹைராபோலிசுக்கு உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹைராபோலிஸ்-பாமுக்கலே 1988 இல் உலக பாரம்பரிய தளமாக ஆக்கப்பட்டது.[3]இந்த நிலை மற்றும் அதன் இயற்கை அழகு காரணமாக இது ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது. நிலத்தடி எரிமலைச் செயல்பாடுகள் வெப்ப நீரூற்றுகளை உண்டாக்கும் கார்பன் டை ஆக்சைடை ஒரு குகைக்குள் வலுக்கட்டயாமாக ஒரு குகைக்குள் செலுத்தப்பட்டது. இது புளுட்டோனியம் என்று அழைக்கப்பட்டது. அது அங்கே "புளூட்டோ கடவுளின் இடம்" என்று பொருள்படும். இந்த குகை இப்பகுதி பாதிரியார்களால் மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. pp. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89577-087-5.
- ↑ Hierapolis-Pamukkale
- ↑ "Hierapolis-Pamukkale World Heritage Site". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2007-06-23.