பஸ்மந்தா விளிம்புநிலை முஸ்லீம் முன்னணி
பஸ்மந்தா முஸ்லீம் மஹாஸ் அல்லது "விளிம்புநிலை முஸ்லிம் முன்னணி" (Pasmanda Muslim Mahaz) (உருது: پسماندہ مسلم محاذ ) இந்தியாவின் பிகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவில் 1998ல் நிறுவப்பட்ட ஒரு இந்திய முஸ்லிம் ஆர்வலர் அமைப்பாகும். இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட 80% முஸ்லீம் பட்டியல் சமூகம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களின் கவலைகளை பிரதிபலிக்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர் அலி அன்வர் ஆவார். அலி அன்வர், அன்சாரி (நெசவாளர் சாதி)யின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம் ஆவார்.[1]
வரலாறு
[தொகு]தலித் முஸ்லீம்கள் மீது உயர்சாதி அஷ்ரப் முஸ்லீம்களால் சாதிய ஒடுக்குமுறையை அவதானித்த பின்னர் அலி அன்வார் இந்த அமைப்பை நிறுவினார். இதனால் அலி அன்வர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இணைந்தார். தலித் முஸ்லீம்களின் அவலநிலை மற்றும் இந்தியாவில் உள்ள உயர்சாதி "அஷ்ரஃப்" முஸ்லீம்களின் முழுமையான புறக்கணிப்பு மற்றும் பாகுபாடு குறித்து விழிப்புணர்வைக் கொண்டுவரும் சமூக சீர்திருத்த அமைப்புகளின் தளர்வான கூட்டணியை அவர் கூட்டினார். மஹாஸ் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பல தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதி முஸ்லீம் அமைப்புகளின் பரந்த முன்னணியாகும்.
நோக்கங்கள்
[தொகு]தனிப்பட்ட சட்டம், இடஒதுக்கீடு மற்றும் தேர்தல் அரசியல் முன்னுரிமை மற்றும் தலித் முஸ்லிம்களை உடல்ரீதியாக தாக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக பஸ்மந்தா முஸ்லீம் மஹாஸ் தலித் முஸ்லிம்களுக்காக வாதிடுகிறது. தலித் முஸ்லிம்கள் தங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமைகளுக்கும் போராடுகின்றனர்.[2]
அறிஞர் பாப்பியா கோஷ், மஹாஸ் பாலினப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்றும், பந்தா முஸ்லீம் பெண்கள் பர்தா போட்டுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் அஷ்ரஃப் (மேல் சாதி முஸ்லீம்கள்) பெண்கள் தயங்காமல் அதைக் கைவிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[3]
வரவேற்பு
[தொகு]இந்தியாவில் உள்ள உயர்சாதி முஸ்லிம்கள் மஹாஸ் மக்களை "இஸ்லாமுக்கு எதிரான மதவெறியர்கள்" என்று முத்திரை குத்த முயன்றனர். இது அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு வடிவமாக மஹாஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ யோகிந்தர் சிகண்ட், ஒடுக்கப்பட்டவர்களின் குரல்: தலித் முஸ்லிம்களுக்கு அதிகாரமளித்தல், கம்யூனலிசம் காம்பாட், நவம்பர் 2005.
- ↑ "Chilraon killings: Action sought", The Times of India, 18 December 2005, archived from the original on 29 September 2007
- ↑ Visalakshi Menon (6 November 2005), "Persisting inequalities", The Hindu, archived from the original on 6 November 2005
{{citation}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)
நூல் பட்டியல்
[தொகு]- Ansari, Khalid Anis (2021). "Pluralism and the Post-Minority Condition". In Boaventura De Sousa Santos; Bruno Sena Martins (eds.). The Pluriverse of Human Rights: The Diversity of Struggles for Dignity: The Diversity of Struggles for Dignity. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-039570-9.