உள்ளடக்கத்துக்குச் செல்

பல கடவுட் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல கடவுட் கொள்கை (Polytheism கிரேக்க மொழியில்: πολυθεϊσμός, polytheismos) என்பது, பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது பல கடவுள்களை வணங்கும் கடவுட் கொள்கையாகும். பழங்காலத்திலும், தற்காலத்திலும் பல சமயங்களை முன்னிறுத்தி பல கடவுட் கொள்கைகள் பரவலாக உள்ளன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டின் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் போன்றவை இத்தகையவையாகும்.

திருமாலின் பத்து அவதாரங்கள். இந்து சமயத்தில் பல கடவுளர்கள் உள்ளனர். திருமால் அவர்களுள் முக்கியமான ஒரு கடவுள்.

பல மதங்களில் பல கடவுட் கொள்கையை ஏற்றுக்கொள்வது, வெவ்வேறு தேவர்கள் மற்றும் தேவதைகள் எனப்படும் பெண் கடவுளர்கள், ஆகியவற்றை இயற்கையின் பிரதிநிதிகளாகவோ அல்லது மூதாதையர்களின் கொள்கைப் பிரதிநிதிகளாகவோ கற்பிதப்படுத்திக்கொள்கின்றனர்

மேலும் அவை ஒரு தனித்தியங்கு கருப்பொருளாகவோ, ஒளிக்கதிர் வெளிப்பாடாகவோ, படைப்பாளராகவோ அல்லது ஒற்றைக் கடவுளின் முழுமையான கோட்பாட்டு (ஒற்றைவாத இறையாண்மை) அம்சங்களின் அல்லது வெளிப்பாடுகளாகவோ முன்னிறுத்தப்படலாம். இது இயற்கையில் நிலைத்திருக்கும் இயல்பான ஆதாரமாகவும் இருக்கலாம்.[1]

சொல்லாட்சி

[தொகு]

கிரேக்க மொழியில் πολύ poly ("பல") மற்றும் θεός theos ("கடவுள்") என்பதிலிருந்து இந்த வார்த்தை கிரேக்கர்களுக்கு எதிராக விவாதிப்பதற்கு யூத எழுத்தாளர், அலெக்ஸாண்டிரியாவின் ஃபிலோ(Philo) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவிலும், மத்தியதரைக் கடல் நாடுகளிலும் பரவியிருந்தபோது, கிறிஸ்தவர்கள் அல்லாதோர், புறச் சமயம் சார்ந்த குடியினம் 'ஜென்டைல்கள்' என்று அழைக்கப்பட்டனர் (யூதர்கள், யூதரல்லாதவரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்) அல்லது புறமதத்தினர் (pagan), (உள்ளூர்வாதிகள்) அல்லது தெளிவான வார்த்தைக்குரிய விக்கிர காரியக்காரர்கள் (பொய்க்கடவுள் வழிபடுவோன் ) என்று குறிப்பிடப்பட்டனர்.

1580 ஆம் ஆண்டில் ஜீன் போடின் (Jean Bodin) என்பவர் மூலம் பிரெஞ்சு மொழியில் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1614 இல் ஆங்கிலத்தில் சாமுவேல் பர்ச்சாஸ் (Samuel Purchas)[2] என்பவரால் பயன்பாட்டுக்கு வந்தது.

தெய்வங்களின் பட்டியல்:

[தொகு]

பக்தி வாதத்தில் காணப்படும் பெரும்பாலான தெய்வங்களின் வகைகள்:

  • உருவாக்கும் கடவுள்/ கர்த்தா
  • கலாச்சார கதாநாயக கடவுள்
  • இறப்பு தெய்வம்
  • கீழுலகுக்குரிய தெய்வம்
  • வாழ்க்கை-மரணம்-மறுபிறப்பு தெய்வம்
  • காதல் தெய்வம்
  • தாய் தெய்வம்
  • அரசியல் தெய்வம் (ராஜா அல்லது பேரரசர் போன்றவர்கள்)
  • வானுலக தெய்வம்
  • சூரிய கடவுள்
  • தந்திரக்கார கடவுள்
  • நீர்க் கடவுள்
  • இசை, கலை, விஞ்ஞானம், விவசாயம் என பல கடவுளர்கள் உள்ளனர்.

புராணங்களும் மதங்களும்:

[தொகு]

மரபார்ந்த மற்றும் பண்டைய காலத்தில், சாலஸ்டியஸ் (4 ஆம் நூற்றாண்டு கி.மு.) புராணங்கள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டன:

  1. இறைமை இயல் அல்லது சமய இயல் சார்ந்தவை
  2. பொருள் அல்லது இருப்பு சார்ந்தவை
  3. உளம் சார்ந்தவை
  4. பொருளறிவு சார்ந்தவை
  5. கலப்பினமானவை

புராணங்களில் கூறப்படும் இறையியல் என்பது உடல் வடிவத்தைப் பொறுத்து அமைவதில்லை. கடவுளர்களின் ஆற்றல் குறித்தும் சரீரத்தைக் குறித்தும் சிந்திக்கின்றன. உதாரணம்:

  • கிரோனுஸ் (Cronus) தனது பிள்ளைகளை விழுங்குதல். தொன்ம தெய்வீக சாராம்சத்தின்படி, தெய்வீக அறிவும் புத்திசாலித்தனமும் மீண்டும் அவற்றூக்குள்ளேயே செல்லும்.
  • உலகில் கடவுள் தம் செயல்களை வெளிப்படுத்தும் போது, தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளலாம்.
  • ஆன்மாவின் செயல்கள் மற்றும் அதன் சிந்தனைச் செயல்கள் உளவியல் ரீதியான இறை வழிமுறையாகக் கருதப்படுகிறது.
  • பொருள்களைக் கடவுளர்களாகக் கருதுவது. உதாரணம்: பூமியை கயா(Gaia) (எதிர்கால ஐரோப்பிய முகமை நோக்கீட்டுக்கலம்) என அழைத்தல், கடல்பரப்பை(Okeanos) வணங்குதல், தீயை(Typhon) வணங்குதல், போன்றவை.

பல கடவுட் கொள்கை-வரலாற்றுக் கோட்பாடு

[தொகு]
புதிய கற்கால சகாப்தம்
  • செரர் இறைநம்பிக்கை மற்றும் வேத நெறி[3]
வெண்கல வயது முதல் மரபார்ந்த தொல்பழங்காலம் வரை
  • பண்டைய அண்மைய கிழக்கு மதங்கள்
  • பண்டைய எகிப்து மதங்கள்
  • பண்டைய செமிடிக் மதங்கள்
  • வரலாற்று சிறப்புமிக்க வேதகால மதங்கள்
  • பண்டைய கிரேக்க மதங்கள்
  • பண்டைய ரோமானிய மதங்கள்
  • இந்திய-செர்மானிய மொழிக் குடும்பப் பிரிவினரின் பல கடவுட் கொள்கை
மரபார்ந்த தொல்பழங்காலத்தின் பிற்பகுதி முதல் உயர் இடைக்காலம் வரை
  • ஜெர்மானிய புறச்சமயநம்பிக்கைகள்
  • சால்விக் புறச்சமயநம்பிக்கைகள்
  • பால்டிக் புறச்சமயநம்பிக்கைகள்
  • பின்லாந்தின் புறச்சமயநம்பிக்கைகள்

பண்டைய கிரேக்கம்:

[தொகு]

பண்டைய கிரேக்கத்தில் உள்ள பாரம்பரிய கடவுள் கொள்கைகள் ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரை (கலை மற்றும் கவிதைகளின் பன்னிரண்டு நியமன கடவுளர்)[4] அடிப்படையாகக் கொண்டுள்ளது. பன்னிரண்டு நியமன கடவுளரின் பட்டியல் பின்வருமாறு:[5]

பெர்சிபோன்- அபோரைட், களிமண் வடிவம், சிசிலி,கிமு 460, AM சிரகுஸ்,121470
கிரேக்க கடவுளரும் தர்ம சக்கரமும்
  1. சியுசு (Zeus)
  2. எரா (Hera)
  3. பொசைடன் (Poseidon)
  4. ஏதெனா (Athena)
  5. ஏரெசு (Ares)
  6. டிமிடர் (Demeter)
  7. அப்பல்லோ (Apollo)
  8. ஆர்டெமிசு (Artemis)
  9. எப்பெசுடசு (Hephaestus)
  10. அப்ரோடிட் (Aphrodite)
  11. எர்மெசு (Hermes) மற்றும்
  12. எசுடியா (Hestia)

ஒலிம்பது மலைக்கு டயோனிசசு அழைக்கப்பட்டபோது, எசுடியா மலையிலிருந்து கீழே இறங்கி வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. தொன்றுதொட்டு வழங்கிவரும் இரண்டு கிரேக்க கதைகளில்[6] எசுடியா தனது இருக்கையை சரண் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதற்கு ஆதாரங்களில்லை என்று ராபர்ட் கிரேவ்ஸ்[7] குறிப்பிட்டுள்ளார். ஹேட்ஸ்[8] பாதாள உலகத்தில் வசித்ததால், அவர் பெரும்பாலும் விலக்கப்பட்டார். கடவுளர்கள் அனைவருக்கும் ஒரு சக்தி இருந்தது. பழங்காலத்திலிருந்தே அவர்களிடையே இலகுத்தன்மையற்ற ஒரு போட்டி நிலவி வந்தது.[9] வெவ்வேறு நகரங்கள் பெரும்பாலும் அதே தெய்வங்களை வணங்கின. சில நேரங்களில் அவை உள்ளூர் இயற்கைக்கு ஏற்பவும், அவற்றின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அடைமொழிகளாலும், பட்டப் பெயர்களாலும் குறிக்கப் பெற்றனர்.

ஹெலெனிக் பல கடவுட் கொள்கை கிரேக்கத்தின் பெரும்பகுதிக்கு அப்பால், ஆசியா மைனரில் ஐயோனியாவின் (Ionia) தீவுகளுக்கும், மாக்னா கிரேசியாவுக்கும் (Magna Graecia) அதாவது சிசிலி (Sicily) மற்றும் தெற்கு இத்தாலிக்கு (Italy) பரவுயது. மேற்கு மத்தியதரைக் கடல் நாடுகளில், மாஸ்ஸாலியா (Massalia) பகுதிகளில் கிரேக்க காலனிகளால் பரவியது,

கிறித்துவம்

[தொகு]
திருத்துவ முத்திரை (zh-cn)

திரித்துவத்தைப்[10] பற்றிய போதனையின் காரணமாக கிறித்துவம் உண்மையிலேயே ஒரு கடவுட் கொள்கை உடையதாக இல்லை என்று சில சமயங்களில் கூறப்படுகிறது. கிறித்துவத்தின் மைய கோட்பாடு "ஒரு கடவுள் மூன்று நபர்கள் மற்றும் ஒரு பொருள் உள்ளது"[11] என்பதாகும். கடவுளோடு மூன்று தனி நபர்கள் இருக்கிறார்கள், ஒருவரையொருவர் பிரிந்து தனித்தன்மையுடன் இருக்கிறார்கள், ஆனால் தெய்வீக சரீரத்திற்குள் ஒன்றி தனித்தன்மையுடன் ஜீன் பண்பிலும், எண்ணியல் ரீதியாகவும் ஒன்றாக இருக்கிறார்கள்.[12] நிச்சயமாக 381 ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிள் முதல் கவுன்சிலுக்கு முன் திரித்துவத்தின் கோட்பாடு அமைக்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும், யூத மதத்திலிருந்து பெறப்பட்ட மரபுவழி திருச்சபை விசுவாசத்தின்படி, ஒரு கடவுள் கோட்பாடு, முதற்கோளாகவும் நிச்சயமான விளக்கமாகவும் இருக்கிறது.[13]

ஜோர்டான் பேப்பர் என்பவர் ஒரு மேற்கத்திய அறிஞர் மற்றும் பல கடவுட் கொள்கையாளர். இவர், பல கடவுட் கொள்கை என்பது மனித கலாச்சாரத்தில் சாதாரண நிகழ்வு எனக் கூறுகிறார். இவர் "கத்தோலிக்க திருச்சபைகள்கூட பரிசுத்தவான்களின் 'வழிபாடு' கொண்ட பல கடவுட் கொள்கை அம்சங்களை காட்டுகிறது." என்று வாதிடுகிறார். சீன ஜோடியான ஆகாயம் மற்றும் புவி சேர்ந்தது சுவனம் என்று மேட்டோ ரிச்சி கூறியதைப் போலவே, இயேசு தேவலோகத்தின் அரசர் என்று அழைக்கப்படுகிறார்.[14]

மோர்மோன் திருச்சபையை பின்பற்றுவோரின் நம்பிக்கை

[தொகு]

ஜோசப் ஸ்மித், பிந்தைய கால புனிதர் இயக்கத்தின் நிறுவனர். இவரது கோட்பாடுகள் பின்வருமாறு:

  • கடவுளின் பன்மை நம்பப்படுகிறது
  • கடவுள் எப்போதும் தனித்துவமானவராக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது
  • இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடமிருந்தும் தனித்த தனித்துவமானவர்
  • பரிசுத்த ஆவியானவர் ஒரு தனித்துவமான நபர் மற்றும் ஒரு ஆன்மா
  • இந்த மூன்று மூன்று வித்தியாசமான நபர்களும் மூன்று கடவுளர்கள்[15]
  • மோர்மோனிசம் ஒரு பரலோக தாய்[16] இருப்பதை உறுதிப்படுத்துகிறது
  • மோர்மோனிசத்தை மகிமைப்படுத்த வேண்டும்
  • மக்கள் இறந்த பிறகு கடவுள் போல் ஆக முடியும்[17]
  • கடவுளான தந்தையும்[18] தனது சொந்த ஒரு கிரகத்தில் ஓர் உயரிய கடவுளின் கீழ் அவரின் கொள்கைகளை பின்தொடர்ந்து வாழ்ந்த மனிதரே
  • உயர்ந்த கடவுளைப் பின்பற்றி பின்னர் பரிபூரணராக[19] ஆனார்

மோர்மோனிசத்தின் சில விமர்சகர்கள், மோர்மோன் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் கடவுளைப் பற்றிய ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ கருத்தையே விவரிக்கின்றன என வாதிடுகின்றனர். உதாரணம்: 2 நெஃபி(Nephi) 31:21அல்மா(Alma) 11:44, ஆனால் பின்னால் வெளிவந்த தகவல்கள் அவற்றைப் பின் தள்ளிவிட்டன.

தந்தை, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் ஒற்றுமை பற்றிய எழுத்துப்பூர்வ அறிக்கைகள் நோக்கத்தின் ஒருமைப்பாட்டைக் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒரு பொருளைப் பற்றியது அல்ல என்று மோர்மான்ஸ் கற்பிக்கிறார்.[20] பிந்தைய திருத்தூதர்கள் மற்றும் இறையியலாளர்கள், கிரேக்க இயக்கமறுப்புசார் ஆதார தத்துவங்களை (பிளேட்டோவின் புதிய சமயத்திரிபு கருத்துகள்) கிறிஸ்தவ தெய்வீகத்தன்மையுடன் ஒப்பிடத் தொடங்கும் வரையில்,[21] ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்கள், தெய்வீகத்தன்மையின் இன்றியமையாமையையும், உருவமற்ற பங்கீட்டு தன்மைபற்றியும் விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை.[22] கடவுளின் இயல்பைப் பற்றிய உண்மைகள் நவீனகால வெளிப்பாட்டின் மூலம் மீட்டெடுக்கப்படுவதை மோர்மான்ஸ் நம்புகிறார்.[23] இது, இயற்கை, சரீரம் சார்ந்து புலப்படுமௌணர்வுகள், மனிதர்களுக்கும், ஆவிக்குரிய தந்தையின் தந்தையாக இருக்கும் அழியாத கடவுளின் அசல்,[24] எனும் கருத்துகள் ஜூடியோ-கிறிஸ்டியன் கருத்தை மறுபிரசுரம் செய்துள்ளன. கிறிஸ்துவின் போதனை (யோவான் 10: 33-36) கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்பவர்கள் "கடவுளர்கள்" என்ற தலைப்பை பெறலாம். இப்போதனையை மோர்மான்ஸ் கடைபிடிக்கிறது. ஏனென்றால் கடவுளுடைய உண்மையான பிள்ளைகள் தேவனின் தெய்வீக பண்புகளை தங்களுக்குள் எடுத்துக்கொள்ள முடியும்.[25] இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் இருவரும் பரிபூரண புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெய்வீகத்தன்மை பெற்றவர்கள். உபதேசம் மற்றும் உடன்படிக்கை 93:36 ன்படி இருவரும், "கடவுளின் மகிமை மற்றும் அறிவுக்கூர்மை" பெற்றவர்கள்.[26]

இந்து சமயம்

[தொகு]

பல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் இருப்பது வழக்கம். சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்து சமயத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் பிரிவு சைவம் எனவும், விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது போலவே, சக்தியாகிய தாய்க் கடவுள், பிள்ளையார் (கணபதி), முருகன் (குமரன்) போன்ற கடவுளர்களை முதன்மைப் படுத்தும் பிரிவுகள் முறையே சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய பெயர்களில் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு.

பல கடவுட் கொள்கை சார்ந்த சமயங்களில் காணப்படும் கடவுளருக்கு அவ்வப் பண்பாடுகளின் தொன்மங்களில் இடம் உண்டு. இவர்கள் மனித இயல்புகளுடனும், பல்வேறுபட்ட தகுதிகளுடனும், மேலதிகமாகத் தனிப்பட்ட, சக்திகள், இயலுமைகள், அறிவு, நோக்கு என்பவற்றுடன் கூடியவர்களாக இத் தொன்மங்களில் காட்டப்படுகின்றனர்.

பல கடவுட் கொள்கையைப் பல இனக்குழுச் சமயங்களில் காணப்படும் ஆன்மவாத நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகப் பிரித்து அறிய முடியாது. "பல கடவுட்" சமயங்களில் காணப்படும் கடவுள்கள் பல வேளைகளில் மூதாதையர், பூதங்கள் போன்ற இயல்புகடந்த தன்மையைக் கொண்டவர்களினதோ அல்லது ஆவிகளினதோ தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக் கடவுள்கள் வானம் சார்ந்தவர்களாகவும், பூமி சார்ந்தவர்களாகவும் பிரிக்கப்படுவதும் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. * Ulrich Libbrecht. Within the Four Seas...: Introduction to Comparative Philosophy. Peeters Publishers, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9042918128. p. 42.
  2. Schmidt, Francis (1987). The Inconceivable Polytheism: Studies in Religious Historiography. New York: Gordon & Breach Science Publishers. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3718603671.
  3. Gravrand, Henry. Les Nouvelles Editions Africaines du Senegal. pp. 9, 20, 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7236-1055-1. ["La civilisation Sereer - Pangool" "La civilisation Sereer - Pangool"]. {{cite web}}: Check |isbn= value: invalid character (help); Check |url= value (help); Missing or empty |title= (help); Unknown parameter |Year= ignored (|year= suggested) (help)
  4. "Greek mythology". Encyclopedia Americana 13. (1993). 
  5. "Dodekatheon". Papyrus Larousse Britannica. (2007). 
  6. "Pausanias, Description of Greece".
  7. "Apollodorus, Library, book 3, chapter 5, section 3".
  8. "Encyclopedia Americana Vol. 13". 13. (1919). Ed. George Edward Rines. Americana Corp. 408–411. 
  9. Stoll, Heinrich Wilhelm (R.B. Paul trans.) (1852). Handbook of the religion and mythology of the Greeks. Francis and John Rivington. p. 8. The limitation [of the number of Olympians] to twelve seems to have been a comparatively modern idea
  10. Oxford Dictionary of the Christian Church (1974) art. "Monotheism"
  11. Oxford Dictionary of the Christian Church (1974) art. "Trinity, Doctrine of the"
  12. Berkhof, Louis. Systematic Theology (1949) page 87
  13. Kelly, J.N.D. Early Christian Doctrines A&C Black (1965) pp. 87,88
  14. Jordan Paper: The Deities are Many. A Polytheistic Theology. Albany: State University of New York Press, 2005, pp. 112 and 133.
  15. Dahl, Paul E. (1992), "Godhead", in Ludlow, Daniel H (ed.), Encyclopedia of Mormonism, New York: Macmillan Publishing, pp. 552–553, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-879602-0, இணையக் கணினி நூலக மைய எண் 24502140, archived from the original on 2017-11-13, பார்க்கப்பட்ட நாள் 2017-07-16
  16. Cannon, Elaine Anderson, "Mother in Heaven", Encyclopedia of Mormonism, p. 961, archived from the original on 2017-10-19, பார்க்கப்பட்ட நாள் 2017-07-16
  17. Pope, Margaret McConkie, "Exaltation", Encyclopedia of Mormonism, p. 479, archived from the original on 2017-10-19, பார்க்கப்பட்ட நாள் 2017-07-16
  18. "Religions: An explanation of Mormon beliefs about God", BBC, October 2, 2009, பார்க்கப்பட்ட நாள் 2014-10-28.
  19. Riess, Jana; Bigelow, Christopher Kimball (2005), "Chapter 3: Heavenly Parents, Savior, and Holy Ghost", Mormonism for Dummies, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7645-7195-4
  20. Holland, Jeffrey R. (November 2007), "The Only True God and Jesus Christ Whom He Hath Sent", Ensign (LDS magazine)
  21. Draper, Richard R. (April 1994), "The Reality of the Resurrection", Ensign (LDS magazine)
  22. Bickmore, Barry R. (2001), Does God Have a Body In Human Form? (PDF), Foundation for Apologetic Information & Research
  23. Webb, Steven H. (2012), Jesus Christ, Eternal God: Heavenly Flesh and the Metaphysics of Matter, Oxford University Press, archived from the original on 2020-02-14, பார்க்கப்பட்ட நாள் 2017-07-16
  24. "God Is Truly Our Father", Liahona (magazine), January 2010
  25. Lindsay, Jeff, "Relationships Between Man, Christ, and God", LDS FAQ: Mormon Answers, archived from the original on 2014-11-12
  26. "'The Glory of God is Intelligence' - Lesson 37: Section 93" (PDF), Doctrine and Covenants Instructor's Guide: Religion 324-325 (PDF), 1981, archived from the original on 2014-11-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல_கடவுட்_கொள்கை&oldid=4124685" இலிருந்து மீள்விக்கப்பட்டது