உள்ளடக்கத்துக்குச் செல்

பனம்பிள்ளை கோவிந்த மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனம்பிள்ளை கோவிந்த மேனன்
இருப்புப்பாதைத் துறை அமைச்சர்
பதவியில்
4 நவம்பர் 1969 – 18 பெப்ரவரி 1970
முன்னையவர்இராம் சுபாக் சிங்
பின்னவர்குல்சாரிலால் நந்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-10-01)1 அக்டோபர் 1906
கலகாடு சாலக்குடி, பிரித்தானிய இந்தியா
இறப்பு23 மே 1970(1970-05-23) (அகவை 63)
சாலக்குடி சந்திப்பில் இருந்த பனம்பிள்ளை கோவிந்த மேனனின் சிலை. இது ஒரு வாகன விபத்தில் உடைக்கப்பட்டது. இப்போதைய புதிய சிலை 2017இல் வைக்கப்பட்டுள்ளது.

பனம்பிள்ளை கோவிந்த மேனன் (Panampilly Govinda Menon) (1 அக்டோபர் 1906 - 23 மே 1970) ஒரு இந்திய அரசியல்வாதியும், சுதந்திர போராட்ட வீரரரும், வழக்கறிஞருமாவார்.

சுயசரிதை

[தொகு]

இவர், 1906 அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவின் கேரளவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி அருகே கலக்காடு கிராமத்தில் குமாரபிள்ளை கிருட்டிண மேனன், மாதவி அம்மா ஆகியோரின் நான்காவது மகனாகப் பிறந்தார். இவர் தனது மாமா குஞ்சுன்னி மேனனின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

பிரபல கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் கேரளாவுக்கு வந்தபோது, ஆலுவாவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலக்குடி வழியாக செல்லவிருந்தபோது, கோவிந்த மேனனும் இவரது நண்பர்களும் அவரை சந்திக்க சென்றனர். இதற்காக இவருக்கு பள்ளி அதிகாரிகள் தண்டனை வழங்கினர். ஒரு மாணவராக இவர் வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

திருச்சூர் புனித தோமையா கல்லூரியில் பட்டம் பெற்றார். மூத்த வழக்கறிஞர் எம். சி. ஜோசப் என்பவரிடம் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். கேரள உக்திவாதி சங்கத்தின் முதல் பொருளாளராக இருந்தார். பின்னர் இவர் தனது பயிற்சியை எர்ணாகுளத்திற்கு மாற்றினார். தனது கல்லூரி நாட்களில் சுதந்திர இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டு, பல நடவடிக்கைகளில் பங்கேற்றார். இவர் தொடர்ந்து பல துறைகளில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர், திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் இளங்கலையையும், சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார்.

அரசியல்

[தொகு]

பின்னர் 1930களில் இவர் கொச்சி இராச்சியத்தின் அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். மேலும், 1947இல் மாநிலத்தின் திவானாக சிலகாலம் பணியாற்றினார். திருவிதாங்கூர் மற்றும் கொச்சி ஒன்றிணைக்கப்பட்ட பிறகு பறவூர் த. க. நாராயண பிள்ளையின் கீழ் கல்வி அமைச்சராகவும், ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் கீழ் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். 1955-1956 ஆம் ஆண்டில் திருவாங்கூர்-கொச்சியின் முதல்வராக இருந்தார். இவர் 1962 முதல் தான் இறக்கும் வரை முகுந்தபுரம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மத்திய சட்டம் மற்றும் இருப்புப்பாதைத் துறை அமைச்சராகவும் (1969-1970) உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராகவும் இருந்தார். மேலும்,கே.கருணாகரனின் அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தார்.

மரியாதை

[தொகு]

2006 ஆம் ஆண்டில், இவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் திறந்து வைத்தார். [1] [2] [3] பின்னர் இவரது நினைவாக சாலக்குடியில் பனம்பிள்ளை நினைவு அரசு கல்லூரி என்று ஒரு கல்லூரி கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Emulate leaders of the past, President tells politicians". தி இந்து. 2006-12-21 இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105120319/http://www.hindu.com/2006/12/21/stories/2006122114750300.htm. பார்த்த நாள்: 2009-10-08. 
  2. "President's Address at the Inauguration of the Birth Centenary Celebrations of Panampilly Govinda Menon". Press Information Bureau: இந்திய அரசு. 2006-12-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
  3. "Panampilly’s services recalled". தி இந்து. 2009-03-03 இம் மூலத்தில் இருந்து 2009-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090308002020/http://www.hindu.com/2009/03/03/stories/2009030352220300.htm. பார்த்த நாள்: 2009-10-08. 

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]