நையோபியம் பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்நையோபியம்
| |
இனங்காட்டிகள் | |
12034-66-1 | |
ChemSpider | 74753 |
EC number | 234-810-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82840 |
| |
பண்புகள் | |
NbP | |
வாய்ப்பாட்டு எடை | 123.88 |
தோற்றம் | கருஞ்சாம்பல் படிகங்கள் |
அடர்த்தி | 6,48 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நையோபியம் பாசுபைடு (Niobium phosphide) என்பது NbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நையோபியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து நையோபியம் பாசுபைடு உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]நையோபியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சுட்டால் நையோபியம் பாசுபைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]இச்சேர்மம் இடத்தியல் மற்றும் வழக்கமான மின்னணு நிலைகளை இணைக்கும் ஒரு தனித்துவமான பொருளாகும். இதன் அதிவிரைவு எலக்ட்ரான்கள் மிகப் பெரிய காந்தத் தன்மையைக் காட்டுகின்றன. எனவே NbP புதிய மின்னணுக் கூறுகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.[2]
நையோபியம் பாசுபைடு நாற்கோணக வடிவத்தில் I 41md என்ற இடக்குழுவில் a = 0.3334 நானோமீட்டர், c = 1.1378 நானோமீட்டர், Z = 4 என்ற அளவுருக்களில் கருஞ்சாம்பல் நிறப் படிகங்களாக நையோபியம் பாசுபைடு உருவாகிறது.[3]
தண்ணீரில் இது கரையாது.
டாண்டலம் ஆர்சனைடு போல நையோபியம் பாசுபைடு ஒர் அரை உலோகமாக உள்ளது.[4][5]
பயன்
[தொகு]அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைகடத்தியாக லிதேத்தியம் பாசுபைடு பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Niobium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Chen, Yulin (July 13, 2015). "Niobium Phosphide (NbP) Holds Promise for New Magnetoresistance Components". Power Electronics. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
- ↑ Lomnits’ka, Ya. F.; Shupars’ka, A. I. (1 July 2006). "Reactions of niobium and tungsten with phosphorus" (in en). Powder Metallurgy and Metal Ceramics 45 (7–8): 361–364. doi:10.1007/s11106-006-0090-1. https://link.springer.com/article/10.1007%2Fs11106-006-0090-1. பார்த்த நாள்: 15 December 2021.
- ↑ Xu, Di-Fei; Du, Yong-Ping; Wang, Zhen; Li, Yu-Peng; Niu, Xiao-Hai; Yao, Qi; Pavel, Dudin; Xu, Zhu-An et al. (18 September 2015). "Observation of Fermi Arcs in Non-Centrosymmetric Weyl Semi-Metal Candidate NbP" (in en). Chinese Physics Letters 32 (10): 107101. doi:10.1088/0256-307x/32/10/107101. Bibcode: 2015ChPhL..32j7101X. https://iopscience.iop.org/article/10.1088/0256-307X/32/10/107101. பார்த்த நாள்: 15 December 2021.
- ↑ Fu, Yan-Long; Sang, Hai-Bo; Cheng, Wei; Zhang, Feng-Shou (1 September 2020). "Topological properties after light ion irradiation on Weyl semimetal niobium phosphide from first principles" (in en). Materials Today Communications 24: 100939. doi:10.1016/j.mtcomm.2020.100939. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S2352492819312772. பார்த்த நாள்: 15 December 2021.