உள்ளடக்கத்துக்குச் செல்

தோட்டக் கல்லறை

ஆள்கூறுகள்: 31°47′1.87″N 35°13′47.92″E / 31.7838528°N 35.2299778°E / 31.7838528; 35.2299778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எருசலேமில் தோட்டக் கல்லறை

தோட்டக் கல்லறை (The Garden Tomb) என்பது எருசலேம் நகரிலுள்ள கல்லில் வெட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். 1867 இல் நிலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இது, அடக்க இடம், இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பவற்றுடன் சில கிறித்தவர்களால் கருதப்பட்டு வருகிறது. மத்திய ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சில அறிஞர்களால் கொல்கொதா (இது மண்டையோடுக் குன்று (Skull Hill,[1] எனவும் கோடனின் கல்வாரி (Gordon's Calvary)[2] எனவும் கொண்டரின் கல்வாரி (Conder's Calvary)[3] எனவும் அறியப்படுகிறது.) என முன்மொழியப்பட்ட பாறைச் சரிவுடன் இணைந்தவாறு இந்த தோட்டக் கல்லறை உள்ளது. மாறுபட்ட தனிப்பண்புகளுடன் தற்போதுள்ள அடையாளப்படுத்தப்பட்ட பாரம்பரிய இடமான, இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியன இடம்பெற்ற இடமாக திருக்கல்லறைத் தேவாலயம் நான்காம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. 1894 முதல் தோட்டக் கல்லறையும் அதன் சுற்றுப்புறமும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கிறித்தவ சமயக் கிளையைச் சாராத அறநிலைய அமைப்பினால் ("தோட்டக் கல்லறை [எருசலேம்] சங்கம்") கிறித்தவ வழிபாட்டு இடமாக பிரதிபலிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டது.[4][5]

செயலுக்கமும் கண்டுபிடிப்பும்

[தொகு]

மாற்று இடத்தை முன்மொழிவதற்கான செயலூக்கம்

[தொகு]

விவிலியம் குறிப்பிடுவதன்படி, இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்கு அருகில் அதன் சுவர்களுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டார்.[6] ஆகவே, நடுக் கால கிறித்தவ திருத்தூதர்கள் அவர்கள் காலத்தில் சுவர்களிலான நகரின் ஆழத்தே அமைந்திருந்த திருக்கல்லறைத் தேவாலய முடிவுகளில் திருப்பியற்றவர்களின் விடயத்தில் கவனமெடுக்க வேண்டும் என உணர்ந்தார்கள். உதாரணமாக, கி.பி 754 இன் ஆரம்பத்தில் புனித வில்லிபால்ட் பின்வருமாறு தெரிவித்தார். "கெலேனா சிலுவையைக் கண்டுபிடித்தபோது, நகருக்குள் இருந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார்."[7][8] பின்னர் வந்த எழுத்தாளர்கள் தெரிவிக்கையில், கட்ரியன் பாரம்பரிய கொல்கொத்தாவையும் இயேசுவின் கல்லறையையும் நகர வரம்பினுள் அவர் நகரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டினார். ஆயினும் அவை முன்னர் நகருக்கு வெளியில் இருந்தது.[9][10]

முன் சீர்திருத்த காலத்தில் பாரம்பரிய புனித இடங்கள் பற்றிய ஐயங்கள் அதிகரித்தது. 1639 இல் குவார்ஸ்மிஸ் "மேற்கு வைதீகக் கொள்கை" இருப்பு பற்றி தெரிவித்தார். அவர் பாரம்பரிய இடம் இயேசுவின் உண்மையான கல்லறையாக இருக்க முடியாது என வாதிட்டார்.[11] முதலாவது நடைமுறை பிரசுரம் 1743 இல் செருமானிய யாத்திரிகர் யோனஸ் கோர்டே பாரம்பரிய இடத்திற்கு எதிராக நிருபித்ததை விவாத்திற்குள்ளாக்கிறது. அவருடைய நூலின் அத்தியாயம் "கல்வாரி மலையில், தற்போதுள்ள நகரத்தின் மத்தியில் இருக்கிறது, ஆகவே அது உண்மையான கல்வாரியாக இருக்க முடியாது".[10][12] 1812 இல், எட்வட் எ கிளார்க் பாரம்பரிய இடத்தை நிராகரித்து, "வெறும் ஏமாற்றம், ஒரு மடத்துறவியின் காடு" என்றார்.[13] அத்துடன் சிலுவையில் அறையப்பட்ட இடம் சீயோன் வாயிலின் வெளிப்புறம் என்று ஆலோசனை கூறினார்.[10] 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பாவிலிருந்து உதுமானியப் பேரரசுக்கு பிரயாணம் செய்வது இலகுவாகவும் பொதுவாகவும் இருந்தது. குறிப்பாக 1930 களின் பிற்பகுதியில் எகிப்தியரான துருக்கிய ஆளுனர் முகம்மது அலி சீர்திருத்தங்கள் மூலமாக ஏற்பட்டது.[14][15] கிறித்தவ யாத்திரிகர்களின் தொடர்ந்து வந்த உட்புகுதல் அதிக புரட்டஸ்தாந்துக்காரர்களை உள்வாங்கியது. இவர்கள் அதிகாரபூவு பாரம்பரிய புனித இடங்களை சந்தேகித்தனர். இச்சந்தேகம் புரட்டஸ்தாந்துக்காரர்கள் திருக்கல்லறைத் தேவாலயத்தின் பகுதியில் உரிமை கொண்டிருக்காததினால் கசப்புண்டாக்கியது. அத்துடன் இது புரட்டஸ்தாந்து யாத்திரிகர்களின் சிந்தனையிலும் மன்றாட்டிலும் இயற்கையற்ற உணர்வை ஏற்படுத்தியது.[14]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. The Garden Tomb/brief history
  2. Losch, Richard (2005). The Uttermost Part of the Earth: A Guide to Places in the Bible. Grand Rapids, MI: W.B. Eerdmans. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2805-7.
  3. "Letter to the Times," in Palestine Exploration Fund Quarterly Statement (London 1893), p. 84
  4. The Garden Tomb
  5. Walker, Peter (1999). The Weekend that Changed the World: The Mystery of Jerusalem's Empty Tomb. Louisville, Kentucky: Westminster John Knox Press. pp. 128–130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-22230-7.
  6. Mark 15:20; John 19:20; Hebrews 13:12
  7. Thomas Wright ed., Early Travels in Palestine (London 1848), p. 18
  8. C. H. Talbot, The Anglo-Saxon Missionaries in Germany, Being the Lives of SS. Willibrord, Boniface, Leoba and Lebuin together with the Hodoepericon of St. Willibald and a selection from the correspondence of St. Boniface, (London and New York: Sheed and Ward, 1954) p. 165
  9. Thomas Wright ed., Early Travels in Palestine (London 1848), p. 37
  10. 10.0 10.1 10.2 Charles W. Wilson, Golgotha and The Holy Sepulchre (1906, The Committee of the Palestine Exploration Fund), pp. 103-120
  11. Franciscus Quaresmius, Elucidatio Terrae Sanctae (Antwerp 1639), lib. 5, cap. 14
  12. Jonas Korte, Reise nach dem weiland gelobten, nun aber seit siebenzehn hundert Jahren unter dem Fluche liegenden Lande : wie auch nach Egypten, dem Berg Libanon, Syrien und Mesopotamien
  13. Edward Daniel Clarke, Travels in various countries of Europe, Asia and Africa: Part II - Greece, Egypt, and the Holy Land, section I (vol. IV), 4th edition (London 1817), p. 335
  14. 14.0 14.1 Sarah Kochav, "The Search for a Protestant Holy Sepulchre: The Garden Tomb in Nineteenth-Century Jerusalem" in Journal of Ecclesiastical history, Vol. 46, No. 2, April 1995 (Cambridge University Press) pp. 278-301
  15. Ruth Kark and Seth J. Frantzman, "The Protestant Garden Tomb in Jerusalem, Englishwomen, and a Land Transaction in Late Ottoman Palestine" in Palestine Exploration Quarterly, 142, 3 (London 2010), pp. 199-216

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Garden Tomb
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டக்_கல்லறை&oldid=4040982" இலிருந்து மீள்விக்கப்பட்டது