தென் மாவட்டம் (ஹொங்கொங் தீவு)
தென் மாவட்டம்
Southern District | |
---|---|
வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• District Officer | எழிதா யாவ் (Eliza Yau) |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.52 km2 (4.83 sq mi) |
• நிலம் | 12.40 km2 (4.79 sq mi) |
• நீர் | .12 km2 (0.05 sq mi) 1% |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,90,240 |
நேர வலயம் | ஒசநே+8 (Hong Kong Time) |
இணையதளம் | தென் மாவட்டம் |
தென் மாவட்டம் (Southern District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அதேவேளை ஹொங்கொங் தீவில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 290,240 ஆகும். ஹொங்கொங்கை பொருத்தமட்டில் இந்த மாவட்டத்தில் நான்காவது குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.[1][2][3]
இந்த மாவட்டம் ஹொங்கொங்கில் இயற்கை வளங்களைக் கொண்ட, மலைத்தொடர்களையும், மலைக்குன்றுகளையும் உள்ளடக்கியப் பகுதியாகும். இதன் தெற்கே தென் சீனக் கடலையும், நீர்தேக்கப் பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பாகவும் உள்ளது. அத்துடன் இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி நிலப்பரப்பு, குறிப்பாக இந்த மாவட்டத்தின் வட பகுதி, ஹொங்கொங்கின் தேசிய வனமாகவே உள்ளது. இயற்கை சூழலமைவில் குடியிருப்புக்களை விரும்புவோர், இப்பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அத்துடன் ஹொங்கொங் பிரசித்திப்பெற்ற, உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல கடற்கரைகளையும் இம் மாவட்டத்தின் தென் பகுதி கடல் பரப்பு கொண்டுள்ளது. இசுடேன்லி, கிலியர்வாட்டர் குடா போன்ற இயற்கையின் பின்னனியைக் கொண்ட அழகிய நகரங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Profiles | 2016 Population" (in ஆங்கிலம் and சீனம்). Census and Statistics Department, Hong Kong Government. 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-05-26.
- ↑ District Profiles, Hong Kong Government, 8 December 2017, பார்க்கப்பட்ட நாள் 15 April 2020
- ↑ "District Profiles | 2016 Population By-census". www.bycensus2016.gov.hk. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.