உள்ளடக்கத்துக்குச் செல்

குவாய் சிங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாய் சிங் மாவட்டம்
Kwai Tsing District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr. TANG Kwok-kong, MH, JP)
பரப்பளவு
 • மொத்தம்21.82 km2 (8.42 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்5,23,300
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்குவாய் சிங் மாவட்டம்

குவாய் சிங் மாவட்டம் (Kwai Tsing District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது குவாய் சுங் மற்றும் சிங் யீ தீவு ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அத்துடன் "குவாய் சிங் மாவட்டம்" புதிய கட்டுப்பாட்டகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டு கணிப்பின் படி 523,300 ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் ஹொங்கொங்கின் மூன்றாவது குறைந்த அளவிலான கல்வியறிவையும் சராசரிக்கும் குறைவான வருமானத்தை ஈட்டுவோராகவும் உள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் கிட்டத்தட்ட 75% வீதமானோர் பொது வீட்டுத்தொகுதிகளிலேயே வசிக்கின்றனர்.

எல்லைகள்

[தொகு]

இந்த குவாய் சிங் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கு மற்றும் மேற்கில் சுன் வான் மாவட்டமும், கிழக்கில் சா டின் மாவட்டமும், தென்கிழக்காக சம் சுயி போ மாவட்டம் மற்றும் யவ் சிம் மொங் மாவட்டம் இரண்டினதும் கடல் பரப்பையும், தெற்காக மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் கடல் பரப்பையும் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]
குவாய் சிங் மாவட்டத்தின் வரைப்படம்
சிங் யீ தீவின் வீட்டுத் தொகுதிகளின் இரவு நேரக் காட்சி

குவாய் சிங் என ஒரு மாவட்டம் 1980 க்கு முதல் மாவட்ட சபைகள் உருவாக்கும் வரை இருக்கவில்லை. 1985 வரை இப்பகுதி சுன் வான் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1985 ஆம் ஆண்டு "குவாய் சுங் மற்றும் சிங் யீ மாவட்டம்" என பெயரிடப்பட்டது. 1988 வரை இருந்த இப்பெயர் சுருக்கப்பட்டு "குவாய் சிங் மாவட்டம்" என தற்போது அழைக்கப்படுகின்றது.

கொள்கலன் துறைமுகங்கள்

[தொகு]

பன்னாட்டளவில் பிரசித்திப்பெற்ற கொள்கலன் துறைமுகங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. அவை "குவாய் சுங் மற்றும் "சிங் யீ தீவு" இரண்டுக்கும் இடையிலான றெம்பிளர் கால்வாய் ஊடான கரையோரப் பகுதிகளில் உள்ளன.

அத்துடன் பன்னாட்டு விமான நிலையம் செல்வதற்கான லந்தாவு வடக்கு அதிவிரைவு பாதையும் ஹொங்கொங்கிலேயே மிகப்பெரியதும் நீளமானதும் பாலமான சிங் மா பாலம் இம்மாவட்டத்தில் உள்ளன.

நகர மையங்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாய்_சிங்_மாவட்டம்&oldid=3356267" இலிருந்து மீள்விக்கப்பட்டது