உள்ளடக்கத்துக்குச் செல்

சா டின் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா டின் மாவட்டம்
Sha Tin District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr WAI Kwok-hung, SBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்69.46 km2 (26.82 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்6,07,544
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்சா டின் மாவட்டம்

சா டின் மாவட்டம் (Sha Tin District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்புக்குள் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். ஹொங்கொங்கில் இந்த மாவட்டமே அதிகமான மக்கள் தொகையை கொண்ட மாவட்டமாகும். 2006 ஆம் ஆண்டு கணிபீட்டின் படி 607,544 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். அத்துடன் இம்மாவட்டம் பல கிராமங்களையும் உள்ளடக்கியதாகும். கிட்டத்த்தட்ட 48 கிராமங்களில் ஏறக்குறைய 27,000 மக்கள் வசிப்பதாக அறிய முடிகிறது.

மேலதிகத் தகவல்கள்

[தொகு]
சா ட்டின் புதிய நகரம் கடல்நிரப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலப்பரப்பின் மேற்கொள்ளப்படும் கட்டுமாணப் பணிகளின் காட்சி

இந்த மாவட்டம் சா ட்டின் புதிய நகரம் மற்றும் பல தேசிய வனங்களையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட 70 மீட்டர்களை கொண்டுள்ளது. அத்துடன் இம்மாவட்டத்தில் கடலுடன் இணைந்த சா டின் ஹொய் எனும் ஒரு சிறிய குடாப்பகுதியின் (பார்ப்பதற்கு ஒரு ஆறு அல்லது கால்வாய் போல் காட்சித்தரும் நீர்ப்பரப்பு) கரைப்பகுதிகள் பாரிய மீள்கட்டுமாணப் பணிகள் மூலம் நிலம் நிரப்பப்பட்டும், அதன் தொடர்ச்சியாக சிங் மூன் கால்வாய் நீர்ப்பரப்பின் கரைகளும் நிரப்பப்பட்டு பெறப்பட்ட நிலப்பரப்பில் அதியுயர் அழகிய வீட்டுத் தொகுதிகள் கட்டப்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 30,000 மக்கள் தொகை மட்டுமே வசித்த இப்பகுதியில், 1976 ஆம் ஆண்டு இந்த பாரிய நிலம் மீட்டல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டுத் தொகுதிகளின் பின்னர் மக்கள் பெருகத்தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ் "சா டின்" நகரில் கட்டப்பட்ட முதல் வீட்டுத் தொகுதியின் பெயர் லெக் யுன் தோட்டம் என்பதாகும். இந்த வீட்டுத் தொகுதி கட்டுமாணப்பணியின் பின்னர் தற்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 65% வீதமானோருக்கு இந்த வீட்டுத் தொகுதிகள் வசிப்பிடமானது. ஹொங்கொங் அரசின் ஒரு திட்டமான குத்தகைக்கு வீடளித்தல் திட்டம் அல்லது வீட்டு உரிமையாளர் திட்டம் ஊடாக வீடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு சா ட்டின் புதிய நகரம் மக்கள் தொகை நிரம்பி வழியும் ஓரிடமாகியது. அத்திட்டத்தின் தொடர்ச்சியாக மா ஒன் சான் பகுதியும் விரிவாக்கம் பெற்று கிட்டத்தட்ட 640,000 மக்கள் இன்று வசிக்கின்றனர். இந்த நிலப்பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் ஊடாக பெறப்பட்ட நிலப்பரப்பின் அளவு கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர்களாகும்.

வரலாறு

[தொகு]
சா ட்டின் சிங் மூன் கால்வாய் மற்றும் புதிய விட்டு தொகுதிகளின் ஒரு பக்கக் காட்சி

டய் வாய் கிராமம் எனும் கிராமம் ஹொங்கொங்கின் பழமையான சுவர் கிராமங்களில் ஒன்றாகும். இந்த கிராமம் 1574 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதாக அறியமுடிகிறது. இன்று புதிய நகர் அங்காடி மற்றும் சா ட்டின் மத்திய வீதி போன்றன அமைக்கப்பட்டிருக்கும் இடங்களிலேயே அவை முன்னாள் இருந்தன.

சா ட்டின் இரண்டாம் திரள் துணைக்கோள் நகரம் எனப்படுகின்றது. அத்துடன் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் கடல் பரப்பை நிரப்பி நிலவிரிவாக்கம் செய்யப்பட்ட பாரிய திட்டங்களில் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கிளைத்திட்டங்களாக நான்கு நகரங்கள் இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளாவன:

அத்துடன் ஹொங்கொங்கின் சைனீசு பலகலைக்கழகம் இம்மாவட்டத்திலேயே உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சா ட்டின் பூங்கா உல்லாசப் பயணிகள் கூடும் இடங்களில் ஒன்றாகும்.

குதிரை பந்தய மைதானம்

[தொகு]

பென்போல்ட் பூங்கா எனும் ஹொங்கொங்கில் இரண்டாவது பெரிய குதிரை பந்தைய மைதானம் இம்மாவட்டத்தில் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

இம்மாவட்டத்திலேயே அதிகமான தொடருந்தகங்கள் உள்ளன. கிழக்கு தொடருந்து வழிக்கோடு தொடருந்து வழிக்கோடு இம்மாவட்டத்தின் ஊடாக ஐந்து தொடருந்தகங்களையும், மா ஒன் சான் வழிக்கோடு ஒன்பது தொடருந்தகங்களையும் கொண்டுள்ளது.

கிழக்கு தொடருந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்:

மா ஒன் சன் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்:

இந்த தொடருந்து சேவைகளின் வலைப்பின்னலின் பரப்பளவு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர்களாகும். இது ஹொங்கொங்கின் தொடருந்து வலைப்பின்னலின் அடிப்படையில் மிகவும் நீளமான ஒரு வலைப்பின்னலாகும்.

இந்த மாவட்டத்தின் வீட்டுத்தொகுதிகளின் தோற்றத்தின் பின்னர் மக்களின் வருகை அதிகரிப்பால் மேலும் பாரிய திட்டங்கள் பல ஹொங்கோங் அரசால் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக பல பாதைகள் நிர்மாணிக்கப்பட்டன. மேம்பாலங்கள் மற்றும் அதிவேகப்பாதைகளும் அதில் உள்ளடங்கும்.

பாடசாலைகள்

[தொகு]

சிறுவர் பாடசாலைகள் அல்லாமல் பெரிய பாடசாலைகள் 14 இம்மாவட்டத்தில் உள்ளன.

மருத்துவமனைகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் நான்கு மருத்துவமனைகள் உள்ளன.

காண்போர் கவரிடங்கள்

[தொகு]

இம்மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் போன்றோரை கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன. 12 காட்சியங்களைக் கொண்ட ஹொங்கொங் மரபுரிமை அருங்காட்சியகம் இம்மாவட்டத்திலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதான நகரங்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
ஒங்கொங்:விக்கிவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா_டின்_மாவட்டம்&oldid=3266150" இலிருந்து மீள்விக்கப்பட்டது