டய் போ மாவட்டம்
டய் போ மாவட்டம்
Tai Po District | |
---|---|
வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Hon. CHEUNG Hok-ming, GBS, JP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 69.46 km2 (26.82 sq mi) |
• நிலம் | 12 km2 (5 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,93,542 |
நேர வலயம் | ஒசநே+8 (Hong Kong Time) |
இணையதளம் | டய் போ மாவட்டம் |
டய் போ மாவட்டம் (Tai Po District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டம் ஆரம்பத்தில் சிறிய கிராமங்களைக் கொண்ட பிரதேசமாகவே இருந்தது. கிராமத்துக்கே ஏற்ற வகையில் சிறிய கடைகளையும் கொண்டிருந்தது. ஹொங்கொங்கின் மீள்கட்டுமாணப் பணிகளின் ஊடாக தற்போது அதிக வளர்ச்சியுடன் பல நகரங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இருப்பினும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் வாழா தேசிய வனங்களாகவே உள்ளது. இந்த தேசிய வனங்கள பல இயற்கை வளங்களைக் கொண்டு அழகிய காட்சிகளை கொண்டுள்ளது. இயற்கையை விரும்பும் மக்களின் விருப்புக்குரிய ஒரு பகுதியாகவும் இந்த மாவட்டம் விளங்குகின்றது. முன்னாள் சிறிய கிராமங்களை மட்டுமே கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது புனர்நிர்மாணப் பணிகளின் பின் மக்கள் தொகை 300,000 மேல் உயர்ந்துள்ளது. இந்த மாவட்ட சபையின் கணிப்பின் படி 133 கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. [1]
ஒப்பீட்டளவில் ஹொங்கொங்கில் மூன்றாவது ஆகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-08-08. பார்க்கப்பட்ட நாள் 2011-01-26.
வெளியிணைப்புகள்
[தொகு]- Tai Po District Council பரணிடப்பட்டது 2003-08-08 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies 1 (large PDF file) பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies 2 (large PDF file) பரணிடப்பட்டது 2007-06-14 at the வந்தவழி இயந்திரம்
- About Tai Po New Town பரணிடப்பட்டது 2004-11-12 at the வந்தவழி இயந்திரம்