உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாங்கூர் பூனைப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Boiga dightoni
தமிழ்நாட்டில், 2016
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
போபிகா
இனம்:
போ. திக்தோனி
இருசொற் பெயரீடு
போபிகா திக்தோனி
(பவுலஞ்சர், 1894)
வேறு பெயர்கள் [2]
  • திப்சாசு திக்தோனி
    பவுலஞ்சர், 1894
  • திப்சடோமார்பசு திக்தோனி
    — பவுலஞ்சர், 1896
  • போபிகா திக்தோனி
    — சுமித், 1943

திருவாங்கூர் பூனைப் பாம்பு, பீர்மேடு பூனைப் பாம்பு மற்றும் திக்தோனி பூனைப் பாம்பு என்பது போபிகா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் (Boiga dightoni-போபிகா திக்தோனி) ஆகும்.[3][4] கொலுப்ரிடே குடும்பத்தில் பின்பக்க-பற்கள் கொண்ட மிதமான நச்சுப் பாம்பு இதுவாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சொற்பிறப்பியல்

[தொகு]

பீர்மாட் பூனைப் பாம்பு என்ற பொதுவான பெயர் பீர்மேடு பகுதியினைக் குறிக்கின்றது. இது இந்தியாவில் உள்ள கேரளாவில் 3,300 அடி (1,006 மீ) உயரத்தில் உள்ளது.

குறிப்பிட்ட பெயர் அல்லது சிற்றினப் பெயரான, தித்தோனி, நிறைவகை மாதிரியின் சேகரிப்பாளரான தேயிலை தோட்டக்காரர் எஸ். எம். திங்டனின் நினைவாக இடப்பட்டது.[4]

புவியியல் வரம்பு

[தொகு]

இந்தியாவில் பெ. திக்தோனி கேரள மாநிலத்தின் பொன்முடி மலைகள் மற்றும் திருவிதாங்கூர் மலைகளிலும், மேற்கு தமிழ்நாடு மாநிலத்தின் ஆனைமலை மலைகள் மற்றும் பழனி மலைகளிலும் காணப்படுகிறது.[3]

விளக்கம்

[தொகு]

பெ. திக்தோனியின் முதுகுபுறம் வெளிர் சிவப்பு-பழுப்பு நிறத்தில் தொடர்ச்சியான சால்மன்-சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். இதன் தலை வெளிர் பழுப்பு நிறத்தில் சிறிய கரும்புள்ளிகளுடன் இருக்கும். வயிற்றுப்புறம் மஞ்சள் நிறமானது, பழுப்பு நிறத்துடன் மெல்லிய புள்ளிகள் உள்ளன. வயிற்றுப்புறச் செதில்களின் வெளிப்புற முனைகள் சால்மன்-இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது நடுத்தர அளவிலானது. முதிர்ச்சியடைந்த பாம்புகளின் நீளம் (வால் உட்பட) 1.1 மீ (3.6 அடி) ஆகும்.[5]

நடத்தை

[தொகு]

பெ. திக்தோனி மரங்களில் வாழும் இரவாடி வகையின.[3]

வாழ்விடம்

[தொகு]

பெ. திக்தோனி சுமார் 800–1,100 மீட்டர் உயரத்தில் உள்ள வனப்பகுதிகளில்[3] மரங்கள் மற்றும் புதர்களில் வாழ்கிறது.[1]

உணவுமுறை

[தொகு]

பெ. திக்தோனி ஓணான் உட்படப் பல்லிகளை வேட்டையாடி உண்ணுகிறது.[3]

இனப்பெருக்கம்

[தொகு]

பெ. திக்தோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]

விடம்

[தொகு]

பின்-பற்களுடன் மந்தமான விடத்தைக் கொண்டிருந்தாலும், பெ. திக்தோனி மனிதர்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுவதில்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
    • Boulenger GA (1894). "Description of a New Snake Found in Travancore, by Mr. S. Dighton. Pirmaad." Journal of the Bombay Natural History Society 8: 528 + one plate. (Dipsas dightoni, new species).
    • Inger RF, Shaffer HB, Koshy M, Bakde R (1984). "A report on a collection of amphibians and reptiles from the Ponmudi, Kerala, South India". Journal of the Bombay Natural History Society 81 (3): 551–570. (Boiga dightoni, pp. 567–568).
    • Kanagavel, Arun; Ganesh, S.R. (2921). "Recent Record of the Rare Travancore Catsnake, Boiga dightoni (Boulenger 1894) (Reptilia: Colubridae), from the Ponmudi Hills in the Southern Western Ghats, India". Reptiles & Amphibians 28 (1): 67–70.
    • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Boiga dightoni, new combination, pp. 359–360).
  1. 1.0 1.1 Srinivasulu C, Srinivasulu B, Deepak V, Mohapatra P, Vijayakumar SP (2013). "Boiga dightoni ". The IUCN Red List of Threatened Species 2013: https://dx.doi.org/10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172674A1364625.en. Accessed on 19 Aug 2022.
  2. 2.0 2.1 சிற்றினம் Boiga dightoni at The Reptile Database www.reptile-database.org.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Das I (2002). A Photographic Guide to Snakes and other Reptiles of India. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5. (Boiga dightoni, p. 22).
  4. 4.0 4.1 Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Boiga dightoni, p. 72).
  5. George Albert Boulenger (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphæ and Proteroglyphæ) .... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I-XXV. (Dipsadomorphus dightonii, new combination, pp. 69-70).