உள்ளடக்கத்துக்குச் செல்

தஹி ஹண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஹி ஹண்டி
மும்பையின் ஹிரானந்தனி கார்டன்ஸ் என்றா இடத்தில் 'தஹி ஹண்டி'யை (மண் பானை) அடைய கோவிந்த பக்தர்கள் ஒரு மனித பிரமிடு உருவாக்குகின்றனர்.
பிற பெயர்(கள்)உட்லோத்சவம், சிக்யோத்சவம்[1]
கடைபிடிப்போர்இந்து
வகைசமயச் சடங்கு
கொண்டாட்டங்கள்1 நாள்
அனுசரிப்புகள்உண்ணாவிரதம், பிரார்த்தனை, மனித பிரமிடு தயாரித்தல் மற்றும் வசதியான/கடினமான உயரத்தில் கட்டப்பட்ட தயிர் நிரப்பப்பட்ட மண் பானையை உடைத்தல்
நாள்சிரவண குமாரன், கிருஷ்ண பட்சம், நவமி
தொடர்புடையனகிருட்டிணன்

தஹி ஹண்டி ( கோபால் கலா அல்லது உட்லோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடர்புடைய ஒரு மகிழ்கலைப் போட்டி நிகழ்வு ஆகும்.

கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இந்நிகழ்வு நடைபெறும். தயிர் ( தஹி ), வெண்ணெய் அல்லது மற்ற பால் சார்ந்த உணவு நிரப்பப்பட்ட ஒரு களிமண் பானையை வசதியான அல்லது உயரமான உயரத்தில் மக்கள் தொங்கவிடுவர். இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குழுக்களை உருவாக்கி, ஒரு மனிதக் கூம்பை உருவாக்கி, பானையை அடைய அல்லது உடைக்க முயற்சி செய்வர். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, பாடி, இசை வாசித்து, அவர்களை உற்சாகப்படுத்துவர். இது ஒரு பழைய பாரம்பரியமிக்க பொதுக்காட்ச்சியாகும். மிக சமீபத்தில், இந்நிகழ்வு ஊடகங்கள், பரிசுத் தொகை மற்றும் வணிக ரீதியான நல்கைகள் ஆகியவற்றால் விமரிசையாக்கப்பட்டது. [2] [3] சிறுவயதில் கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோகுலத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெண்ணெய் மற்றும் பிற தயிர் மற்றும் பால் உணவுகளை குறும்புத்தனமாக திருடிய கதையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வு இதுவாகும். அக்கம்பக்கத்தினர் பானைகளை அவருக்கு எட்டாத உயரத்தில் தொங்கவிடுவதன் மூலம் அவரது குறும்புகளைத் தவிர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் கிருஷ்ணர் அவற்றை அடைய ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பார்.

புராணம்

[தொகு]
கிருஷ்ணர் மக்கன் சோர் (வெண்ணெய் திருடன்) போன்ற அவரது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் வைஷ்ணவ பாரம்பரியத்தில் கொண்டாடப்படுகிறார்.

குழந்தைக் கடவுளான கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் தயிர் மற்றும் வெண்ணெயைத் திருடுவதற்காக அக்கம் பக்கத்து வீடுகளின் கூரையில் தொங்கவிடப்பட்ட பானைகளை உடைக்க மனித பிரமிடுகளை உருவாக்கினர். [4] இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற கிராமத்தில் கிருஷ்ணர் வளர்க்கப்பட்ட இடத்தில் நடைபெறும். ஒரு புராணத்தின் படி, ஏராளமான பால் பொருட்கள் இருந்தபோதிலும், தீய மன்னன் கம்சனின் ஆட்சியின் போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மறுக்கப்பட்டது. ஏனெனில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பொருட்களை மன்னரே கைப்பற்றினார். கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் பால் பொருட்களை திருடி, பகிர்ந்து உண்பார்.  இந்து பாரம்பரியத்தில், கிருஷ்ணர் மக்கன் சோர் (வெண்ணெய் திருடன்) என்றும் குறிப்பிடப்படுகிறார்.

முக்கியத்துவம் மற்றும் விளக்கம்

[தொகு]
தஹி ஹண்டியை உடைக்க கோவிந்த பக்தர்கள் ஒரு மனித கோபுரத்தை உருவாக்குகின்றனர்

மகாராஷ்டிராவில், இக்கொண்டாட்டமானது ஜென்மாஷ்டமி தஹி ஹண்டி ( தஹி : தயிர், ஹண்டி : மண் பானை) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது இது ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் குறிப்பிட்ட நாளில் ஏற்பாடு செய்யப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படும் பண்டிகை, கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும். தஹி ஹண்டி அதன் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்வில் பால், தயிர், வெண்ணெய், பழங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பப்பட்டு, ஒரு மண் பானையை உயரத்தில் தொங்கவிடப்பட்டு, ஒரு மனிதக் கூம்பை உருவாக்கி அதை உடப்பதன் மூலம் குழந்தை கிருஷ்ணனின் செயல்களைப் பிரதிபலிக்கிறது. சில சமயங்களில் பரிசுத் தொகையும் பானையில் சேர்க்கப்படுகிறது. [5]

கோவிந்தா (கிருஷ்ணரின் மற்றொரு பெயரும்) அல்லது கோவிந்தா பதக் என்ற சொற்கள் இந்த மனிதக் கூம்பை உருவாக்குவதில் பங்குபெறும் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் நிகழ்வு நடக்கும் நாளிலிருந்து சில வாரங்களுக்கு முன்பு குழுக்களாக பயிற்சி செய்கிறார்கள். இந்த குழுக்கள் மண்டல்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை உள்ளூர் பகுதிகளைச் சுற்றிச் செல்கின்று நிகழ்வின் போது முடிந்தவரை பல பானைகளை உடைக்க முயற்சிக்கின்றன. கூம்பை உருவாக்கத்திற்கு ஒருங்கிணைப்பு மற்றும் கவனம் தேவை. மிகக் குறைந்த அடுக்குகள் பெரும்பாலான நபர்களைக் கொண்டிருக்கின்றன. முன்னிருக்கும் அடுக்கு உறுதியானவையாகவும், அதே நேரத்தில் நடுத்தர அடுக்கு வீரர்கள், கீழே உள்ளவர்கள் மற்றும் மற்றவர்கள் தங்கள் தோள்களில் நிற்பவர்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். வெளிப்புற அடுக்கிலுள்ள தனிநபர்கள் சமநிலையை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலுள்ள கடைசி அடுக்குஇற்கு மெலிதானவர்கள் தேவைப்படுவதால், மேல் அடுக்கில் பொதுவாக ஒரு குழந்தை இருக்கும். பானையை உடைப்பது பொதுவாக பங்கேற்பாளர்கள் மீது அதன் உள்ளடக்கங்கள் சிந்துவதில் முடிவடையும். பாரம்பரியமாக, பார்வையாளர்கள் பங்கேற்பாளர்களைத் தடுக்க தண்ணீரை வீசுவர். மக்கள் மராத்தியில் " அலா ரே ஆலா, கோவிந்தா ஆலா " (கோவிந்தாக்கள் வந்துவிட்டார்கள்) என்றும் கோஷமிட்டனர். [6] பிரமிடு உருவாக்கம் பெரும்பாலும் கூட்டம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றுடன் இருக்கும்.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இந்த விழா உத்லோற்சவம் என்று கொண்டாடப்படுகிறது ( தெலுங்கில் - உட்டி: பானைகளைத் தொங்கவிட ஒரு நார் வலையமைப்பு; உற்சவம்: திருவிழா). புகழ்பெற்ற திருப்பதி வெங்கலாசலபதி கோவிலில், இந்த பழமையான விளையாட்டு நவமி அன்று (கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள்) மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண சுவாமி மற்றும் மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலுக்கு முன்புறம் உள்ள உத்லோற்சவம் நடைபெறும். உதட்டியைப் பிடிப்பதற்காக குழுக்களாகப் பிரிந்து உள்ளூர் இளைஞர்கள் விளையாடும் விளையாட்டை தெய்வங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பரிசுத் தொகையுடன் கூடிய உட்டி எண்ணெய்ப் பொருட்களால் தடவப்பட்ட 25 அடி நீள மரக் கம்பத்தின் முடிவில் தொங்கப்பட்டிருக்கும்.

கொண்டாட்டம்

[தொகு]
ஒரு தாஹி ஹண்டி, இந்து பண்டிகையான ஜன்மாஷ்டிமி கிருஷ்ணாவிற்காக கட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில், மும்பையின் தானேயில் நடைபெற்ற தஹி ஹண்டி நிகழ்ச்சியில் ஜோகேஸ்வரியைச் சேர்ந்த ஜெய் ஜவான் கோவிந்த பதக் என்ற மண்டல் 43.79 அடிகள் (13.35 m) கொண்ட 9-அடுக்குமனித கூம்பை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியது. இதன் முந்தைய சாதனையை 1981 ஆம் ஆண்டு ஸ்பெயின் நிகழ்த்தியிருந்தது. அதே ஆண்டில் இதை அதிகாரப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கான வாய்ப்பு முன்வைக்கப்பட்டது. இது ஒரு தெரு கொண்டாட்டமாகவே இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறினர்.

சிக்கல்கள்

[தொகு]

இந்த வெகுஜன கொண்டாட்டங்கள் மற்றும் மண்டலங்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகப்படியான குப்பைக் கழிவுகள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது ஒலி மாசு பிரச்சினையையும் ஏற்படுத்துகிறது.

பங்கேற்பது அதிக இறப்பு அபாயத்தைக் கொண்டுள்ளது. 2000 முதல் அதிக போட்டி காரணமாக காயங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஜர்னல் ஆஃப்போஸ்ட் கிராஜுவேட் மெடிசின் என்ற பத்திரிக்கையில் 2012 இல் ஒரு அறிக்கை, "தஹிஹண்டி திருவிழாவில் மனிதக் கூம்பு உருவாக்கம் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது" என்று முடிவு செய்தது. [7] பானையின் உயரத்தைக் குறைத்தல், குழந்தைகள் பங்கேற்பதைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அது பரிந்துரைத்தது.

2012 இல், 225 க்கும் மேற்பட்ட கோவிந்தர்கள் காயமடந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இது முந்தைய ஆண்டின் 205ஐ விட அதிகமாகும். மகாராஷ்டிரா அரசு 2014 இல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹண்டியில் பங்கேற்க தடை விதித்தது. குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்த வேண்டும் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூம்பின் உயரம் 20 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் பின்னர் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tirumala: Deities enjoy Utlotsavam by devotees in Tirumala". The Hindu. 17 August 2018. https://www.deccanchronicle.com/nation/current-affairs/170817/tirumala-deities-enjoy-utlotsavam-by-devotees-in-tirumala.html. பார்த்த நாள்: 6 September 2018. 
  2. "8 incredible facts about Mumbai". 
  3. "Janmashtami celebrated with zeal, enthusiasm". 
  4. name="Hw">"Ceremony of Dahi Handi". Happywink.org. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  5. name="JAPMNemade">P Nemade; R Wade; AR Patwardhan; S Kale (4 January 2013). "Evaluation of nature and extent of injuries during Dahihandi festival". Journal of Postgraduate Medicine 58 (4): 262–264. doi:10.4103/0022-3859.105445. பப்மெட்:23298920. http://www.jpgmonline.com/article.asp?issn=0022-3859;year=2012;volume=58;issue=4;spage=262;epage=264;aulast=Nemade. பார்த்த நாள்: 25 July 2014. 
  6. name="Hw">"Ceremony of Dahi Handi". Happywink.org. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014."Ceremony of Dahi Handi".
  7. name="JAPMNemade">P Nemade; R Wade; AR Patwardhan; S Kale (4 January 2013). "Evaluation of nature and extent of injuries during Dahihandi festival". Journal of Postgraduate Medicine 58 (4): 262–264. doi:10.4103/0022-3859.105445. பப்மெட்:23298920. http://www.jpgmonline.com/article.asp?issn=0022-3859;year=2012;volume=58;issue=4;spage=262;epage=264;aulast=Nemade. பார்த்த நாள்: 25 July 2014. P Nemade; R Wade; AR Patwardhan; S Kale (4 January 2013).

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தஹி ஹண்டி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தஹி_ஹண்டி&oldid=3666591" இலிருந்து மீள்விக்கப்பட்டது